முந்திரி கேக்

தேதி: October 31, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (11 votes)

 

முந்திரி - ஒரு கப்
சீனி - ஒரு கப்
நெய் - 3/4 கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை ( விரும்பினால்)


 

முந்திரியை 5 மணி நேரம் ஊற வைத்து விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதின் அளவிற்கு சீனி தேவை.
ஒரு கடாயில் அரைத்த முந்திரி விழுது, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும், பின் அந்த கடாயை அடுப்பிலேற்றி மிதமான தீயில் வைத்து கிளறவும். குங்குமப்பூ சேர்த்து சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
கலவை கெட்டியாக வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கிளறிக் கொண்டே இருந்தால் கலவை நன்றாக இருக்கும். அந்த சமயத்தில் நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி ஆறியதும் விரும்பிய வடிவத்தில் வில்லைகள் போடவும்.
மிகவும் கவனமாக செய்யவும். பதம் தான் இதற்கு முக்கியம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முந்திரியும் சீனியும் மட்டும் வச்சு கேக்கா. மஞ்சு சூப்பர்.கேக். வாழ்த்துக்கள். நல்ல அருமையான குறிப்பு.வாழ்த்துக்கள்.

அருமையான படம் பா சாப்பிட தோணுது கண்டிப்பா ட்ரை பண்றேன் ஈஸி டேஸ்ட்டி குறிப்புக்கு வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரொம்ப சூப்பர்... நல்ல ரிச் ஸ்வீட்.... ஆனா செய்ய சிம்பிள்!!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi,
This is Vijay. I am saying in Spain.

Na Pattani paruppu vadai try pannan. Mixer la thaan paruppu araichthanala, ketiya illa. Ennaila potta vudam ellam karanchudhcu.

Yaaruvu konjam idea kodunga.

Tks,
Vijay

இதை நீங்கள் சின்ன சின்ன சந்தேகங்கள் பகுதியில் கேட்கலாம்.தண்ணீர் இல்லாம நல்ல வடிச்சுட்டு அரைச்சு பாருங்க பிரியாம வரும்

மஞ்சு அழகான புதுவிதமான கேக் தந்த்ருக்கீங்க சூப்பர் பா

அடடே...நல்ல மஸ்தான ஸ்வீட்டோட வந்திருக்கீங்களே மஞ்சு.
இது சூப்பராக இருக்கும்.அழகாக செய்து காட்டியதோடு சூப்பரா டெக்ரேட் பண்ணியிருக்கீங்க.பாராட்டுக்கள் மஞ்சு.
வாழ்த்துக்களும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மஞ்சு,
முந்திரி கேக் சூப்பரா இருக்கே.ப்ரசன்ட் செய்திர்க்கும்விதம் சாப்பிட தூண்டுது.வாழ்த்துக்கள்,மஞ்சு.

வாவ்.. என் ஃபேவரிட். ரொம்ப ஈஸியாவும் சொல்லி இருக்கிங்க.
வாழ்த்துக்கள். கண்டிப்பா செய்து பார்க்கிறேன் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாவ் முந்திரி கேக் என் மகளுக்கு ரொம்ப பிடித்த ஸ்வீட்.செய்துமுறை பார்த்தாலே சாப்பிட தூண்டுகிறது. ஒரு சின்ன சந்தேகம் மஞ்சுளா,அடுப்பில் வைத்து கிளறும் போது எந்த பதம் வந்ததும் கீழே இறக்கவேண்டும் என சொல்லுங்க.கட்டாயம் செய்து பார்த்துவிட்டு சொல்கிரேன்.வாழ்த்துக்கள்

சூப்பர் மஞ்சு முந்திரி கேக் ரொம்ப நன்றி இவ்னிங் கெஸ்ட்டு வராங்கபா புட்டிங் செய்யலான்னு இருந்தே ரொம்ப நன்றி முந்திரி கேக் செய்யப்போறேன்பா

-ரஸினா

Kids favorite sweet

முந்திரி கேக் சம சூப்பரா இருக்கு மஞ்சுளா மேம். விருப்பபட்டியலில் இருக்கு. கட்டாயம் செய்து பார்க்க போறேன்.

மஞ்சு சூப்பரான கேக்,எனக்கு ரொம்ப பிடிச்சது,வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இந்தமுந்திரி கேக்கை இங்க வட நாட்ல காஜூ கத்லின்னு சொல்வோம். ரொம்ப நல்லா இருக்கும். உங்க குறிப்பிலும் படங்களும் செய்முறையும் நல்லா இருக்கு.

அட்மின் குழுவிற்கு

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு எனது நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் தோழிஸ்,
நசீம், ரேணுகா,வனிதா சிம்ரா,அப்சரா, ரம்யா,சுந்தரி,ரஸினா,ஸ்வர்ணா,கீதா,வினோ.உங்கள் அனைவரின் வாழ்த்திற்க்கும்,ஊக்கத்திற்கும் நன்றிகள் பல.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

கலவை சற்று கெட்டியாக வரும் போது அடுப்பை நிறுத்திவிட்டு தொடர்ந்து கிளற வேண்டும். சூடு சற்று குறைய குறைய கலவை இன்னும் கெட்டியாகும். அந்த சமயத்தில் ட்ரேவிற்கு மாற்றி துண்டுகள் போடவும்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சுளா,
முந்திரி கேக் என் பையனோட ஃபேவரைட் ஸ்வீட்! உங்க ரெஸிப்பி, செய்முறை சிம்ப்ளி சூப்பர்! கடைசிப்படத்தில் ப்ரசண்டேஷன் அருமை! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி. செய்து பாருங்க

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சு மேடம் நான் உங்க முந்திரி கேக் செய்தேன் நேற்று ஆனால் எனக்கு அது கேக் பீஸ் போடுவது போல வரல அப்டியே அல்வா பதத்துலயே இருக்கு ஏன் நான் எதா தப்பு பண்ணிருப்பேனா? தெரிந்தவங்க சொல்லுங்கபா முந்திரி ஊற வைச்சு அரச்சு அரச்ச அளவு சர்க்கரை கலந்து அடுப்பில ஏற்றி நெய் விட்டு கை விடாம கிண்டுனேன்.. அப்புறம் பிளேட்ல கொட்டி ஆறவிட்டேன்.. ஆனா பீஸ் போட வரல ஏன்?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மஞ்சுளா அவர்களே பதம் பற்றி பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பாருங்கள்.. அடுத்த முறை இதே முறையில் முயற்சி செய்து பாருங்கள்..

manjula arasu - வியாழன், 03/11/2011 - 21:55கலவை சற்று கெட்டியாக வரும் போது அடுப்பை நிறுத்திவிட்டு தொடர்ந்து கிளற வேண்டும். சூடு சற்று குறைய குறைய கலவை இன்னும் கெட்டியாகும். அந்த சமயத்தில் ட்ரேவிற்கு மாற்றி துண்டுகள் போடவும்

மஞ்சு, இதை நேத்து பண்ணேன் பா. டேஸ்ட் நல்லாருந்தது. என்ன ஒரு வருத்தம் துண்டு போட வரலை. சர்க்கரை இளகலான பதத்துக்கு வந்தால் அப்படி ஆகுமோ? ஆனா நீங்க சொன்ன மாதிரியே தான் பண்ணிட்டு வந்தேன். எங்கே தப்பு பண்ணேன்னு தெரியலப்பா.. ஆனாலும் விட மாட்டேன். திரும்பவும் ட்ரை பண்ணிடுவேன். போட்டோ பேஸ்புக்ல போட்டிருக்கேன் பா. எனக்கு ரொம்ம்ம்ப பிடிச்சது. யாருக்கும் தெரியாம திருட்டுதனமா நானே காலி பண்ணிட்டேன் ;) யார்கிட்டயும் சொல்லிடாதீங்க..தம்பிக்கும் பிடிச்சிருந்தது. வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.