வெஜிடபுள் கொழுக்கட்டை

தேதி: October 31, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (10 votes)

 

பச்சை அரிசியை மிக்ஸியில் மெல்லிய ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
உடைத்த ரவை - ஒரு கப்
பொடியாக நறுக்கிய காய்கறிகள் (கோஸ், கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு) - ஒரு கப்
ஊற வைத்து அரைக்க:
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2 அல்லது 3
மேற்கண்ட சாமான்களை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு துண்டு அல்லது 1/4 தேக்கரண்டி பெருங்காயப் பொடி
கடுகு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து


 

தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயும், 2 தேக்கரண்டி நெய்யும் ஊற்றி காய்ந்ததும், அதில் பெருங்காயம் போட்டு பொரிந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு சிவந்ததும், மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் கிள்ளிப் போட்டு வறுப்பட்டதும், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
காய்கறிகள் வதங்கியதும் 2 1/2 கப் தண்ணீர் விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் தேவையான அளவு உப்பு போடவும்.
அதில் அரைத்த பருப்பு கலவையையும், தேங்காய் துருவலையும் போட்டு நன்கு கிளறவும். மீதமுள்ள 2 தேக்கரண்டி நெய்யையும் விட்டு நன்கு கிளறி இறக்கி வைத்து, ஒரு தட்டினால் அழுத்தி மூடி வைக்கவும்.
சற்று ஆறியதும் வெந்த உப்புமாவை நன்கு கையால் பிசைந்து, நீள உருன்டைகளாக உருட்டவும்.
குக்கரில் இட்லித்தட்டில் உருண்டைகளை வைத்து மேலே வெயிட் போட்டு 4 சத்தங்கள் வரும் வரை வேக விடவும்.
வெளியில் எடுத்து தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

தக்காளி சட்னி செய்முறை:
எண்ணெயில் துளி பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் வறுத்து, பின்பு தக்காளியையும் நன்கு வதக்கி, இத்துடன் தேவையான உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதற்கு புளி தேவையில்லை. மிளகாய் வற்றலும் அதிகம் வைக்க வேண்டாம். 4 தக்காளிக்கு ஒரு மிளகாய் வற்றலே போதுமானது.
இது பழைய நாளைய டிஃபன் எனினும் சுவையானது, ஆரோக்கியமானது. நாம் மறந்துவிட்ட இவ்வகை உணவுகள் தற்சமயம் பல பெரிய ஹோட்டல்களின் மெனுவில் காணப்படுகிறது!!


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா ஆன்ட்டி அசத்துறீங்க.நான் இப்ப தான் கேள்விப்படுரேன். ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஸ்டாரும் கொடுத்துட்டேன்.வாழ்த்துக்கள். இதுபோல் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

வித்தியாசமா அழகா சுவையா சத்தான கொழுக்கட்டை ட்ரை பண்றேன் வாழ்த்துகள் ஆன்ட்டி பார்க்க அழகா இருக்கு கலர்புல்லா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குட்டீஸ்க்கு ஏற்ற சூப்பர் குறிப்பு. கண்டிப்பா செய்துட்டு சொல்றேன். சுவையான குறிப்பு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hello,

This is Vijay. I am staying in Spain.

Na patanni paruppu vdai try pannan. ana sariya varala, ellam ennaila karanchuduchu. Paruppa na mixer la araichthanala, ketiya illa.

Konjam tips koduka mudiyuma.

Tks,
Vijay

ரொம்ப கலர்புல்லா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியான கொழுக்கட்டை..... சத்தும் கூட.... பாக்கவே அழகா இருக்கு

நல்ல ஆரோக்கியமான குறிப்பு. வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ராதா,
நல்ல குறிப்பு.சத்தான சிற்றுண்டி.செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

என் சமையல் குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி.... பாராட்டி வாழ்த்து சொன்ன நசீம், ரேணு, ரம்யா, சிம்ரா, வனிதா, ஹர்ஷா.... மிக்க நன்றி தோழிகளே!
ரேணு, வனிதா, ஹர்ஷா.....செய்து பார்த்து விட்டு எழுதுங்கள்....

நல்லதொரு ஆரோக்கியமான குறிப்பு! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

தேவையான பொருட்கள் லிஸ்ட் பாத்து இவ்வள்வு சாமானான்னு நினைச்சேன்
இன்னிக்கு காலை டிபனுக்கே செய்தபிறகுதான் அதன் ருசி சூப்பரா இருக்கனும்னா இவ்வளவு சாமான்கள் சேர்த்துதான் செய்தாகனும்னு. நல்லா இருந்தது.

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி கோமு....

2டே செய்தேன் கொஞ்சமா................. தீந்தே போச்சு.............. சுப்பரா இருந்து.............. இது மாதிரி இன்னும் கொடுங்க

செய்து பார்த்து சாப்பிட்டு சந்தோஷம் அடைந்ததற்கு மிக்க நன்றி சிம்ரா...