மோர்க்குழம்பு

தேதி: July 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மிதமாக புளித்த மோர் - 2 கப்
வேகவைத்த வெள்ளைப்பூசணி - 4 சிறிய துண்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 7
சீரகம் - அரை தேக்கரண்டி
ஊறவைத்த துவரம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
சின்ன வெங்காயம் - ஒன்று


 

அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
பின் அதனை கடைந்த மோரில் கொட்டவும். கடைந்த மோரில் அரைத்த விழுது, வேகவைத்த வெள்ளைப்பூசணி, மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
பின் மிதமான அனலில் வைக்கவும். லேசாக பொங்க ஆரம்பித்தவுடன் இறக்கி கொத்தமல்லி இலை தூவவும்.


துவரம்பருப்பை சுமார் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi Mrs.Muthulakshmi,

Prepared today MK for our lunch and really loved it. We always does this kuzhambu for all festivals, but, Addition of garlic & onion is new to me.

Anyhow, that gives a very different taste and thanks for sharing this recipe with arusuvai.

Bye.

மிக்க நன்றி ரமா