பரங்கிக்காய் பாயசம்

தேதி: November 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

பரங்கிக்காய் - 2 கப் (துருவியது)
பால் - 500 மிலி
வெல்லம் - 1 1/2 கப் (துருவியது)
தேங்காய் துருவல் - அரை கப்
முந்திரி, திராட்சை, சாரை பருப்பு, நெய் - தேவையான அளவு
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்


 

தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
ஒரு மைக்ரோவேவ் சேஃப் பாத்திரத்தில் துருவிய பரங்கிக்காய் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு 5- 6 நிமிடங்கள் வைத்து வேக விடவும். நடுநடுவே கிளறி விடவும்.
ஒரு கடாயில், நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, சாரை பருப்பு போட்டு வறுத்து கொள்ளவும்.
பால் காய்ந்ததும், வேக வைத்த பரங்கிக்காயை சேர்க்கவும். பாலுடன் கலந்து நன்கு கொதிக்க விடவும்.
பின்னர், துருவிய வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் கரைந்து பாயசத்துடன் நன்கு கலக்க வேண்டும்.
இதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
இப்போது நெய்யில் வறுத்து வைத்துள்ள பருப்புகள் மற்றும் திராட்சையை சேர்க்கவும். கடைசியில் வெனிலா எசன்ஸ் சில துளிகள் சேர்க்கவும். இல்லையெனில் ஏலக்காய் சேர்க்கலாம்.
சுவையான பரங்கிக்காய் பாயசம் தயார்.

பரங்கிக்காய் உடம்புக்கு ரொம்ப நல்லது. பொரியல், குழம்பை விட பாயசம் செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். பரங்கிக்காய் பிடிக்காதவர்களுக்கும் இந்த பாயசம் பிடிக்கும். பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பரங்கிக்காய் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் ரொம்ப நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாயாசம் பார்க்கவே அப்படியே குடிக்கனும் போல இருக்கு... பாருங்க... நம்ம இருவர் பாயாசம் குறிப்பும் ஒரே நாளில் வந்திருக்கு ;) ஹிஹிஹீ. கண்டிப்பா செய்து பார்க்கறேன் ஹர்ஷா. சூப்பரா வந்திருக்கு படங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னப்பா எல்லாரும் பாயாசமா வச்சி கலக்குறீங்க. சூப்பர். வாழ்த்துக்கள். ஒவ்வொன்னா செஞ்சு பார்க்கனும். மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

பறங்கிக்காயை ஆங்கிலத்தில் என்னவென்றழைப்பது,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இங்கயும் பாயசமா புதுவிதமா இருக்கு வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பரங்கிக்காய் ஆங்கிலப்பெயர் - pumpkin

ஹர்ஷா பரங்கிக்காய் பாயசம் நல்லா இருக்கு. வெல்லம், தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து செய்து இருக்கீங்க டேஸ்ட் சூப்பராதான் இருக்கும்.

ஹர்ஷா

இந்த பாயாசத்தை பட்டெர் நட் ஸ்குவாஷ்-ல் செய்யலாமா?

என்ன இது பாயாசம் வாரமா..?விதவிதமாக பாயாச குறிப்பை தந்துட்டிருக்கீங்க.
செய்முறையும்,அதன் விளக்கப்படமும் மிகவும் அழகாக உள்ளது ஹர்ஷா.
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

வனிதா,
// நம்ம இருவர் பாயாசம் குறிப்பும் ஒரே நாளில் வந்திருக்கு ;) //
ஆமாம் வனிதா.சேம் பின்ச். :-)
செய்து பாருங்க.வழக்கம் போல் முதலாவதாக பதிவு போட்டதற்கு மிக்க நன்றி.

நஸீம்,வாழ்த்துக்கு நன்றி.

பூங்காற்று, பரங்கிக்காயை மஞ்சள் பூசணி(yellow pumpkin) என்பார்கள்.பொதுவாக இதில் பொரியல்,புளி குழம்பு செய்வாங்க.

ரேணு,வாழ்த்துக்களுக்கு நன்றி.

வினோஜா,
பூங்காற்றுக்கு பதில் சொன்னதற்கு நன்றி.
ஆம்.இந்த பாயசம் சுவையாக தான் இருக்கும்.பதிவுக்கு நன்றி.

வாணி,
பட்டர்னட் ஸ்குவாஷ்-ல் தாராளமாக செய்யலாம்.இதே செய்முறைதான்.செய்து பாருங்க.

அப்சரா,
இதுதான் என் முதல் பாயச குறிப்பு.உங்க பதிவுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

ஹாய் வணக்கம். உங்கள் பரங்கிக்காய் பாயாசம் படங்களில்
பார்க்க ரொம்பவே நன்றாக உள்ளது. வாழ்த்துகள். தயவு செய்து
பரங்கிக்காய் என்றால் எப்படி இருக்கும். அமெரிக்காவில் எங்கு
வாங்கலாம் என்று அறியத்தர முடியுமா? நன்றி

உங்க பதிவுக்கு மிக்க நன்றி.பரங்கிக்காய் எல்லா இந்திய மற்றும் மெக்சிகன் ஸ்டோர்களில் கிடைக்கும்.Yellow pumpkin என்று கூகுளில் அடித்து பாருங்கள்.

வாவ்.. சூப்பர்.. ஹேப்பி ஹெலோவீன் :)
கண்டிப்பா ட்ரை பண்றேன்.. பார்க்கவே நாக்கு ஊறுது.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வித்யாசமான பாயாசம் அன்பு வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹர்ஷா,
பரங்கிக்காய் பாயாசம் அருமையா இருக்கு! பரங்கிக்காயில் இதுவரை செய்ததில்லை. உங்க குறிப்பு பார்த்ததுமே செய்யத்தோனுது. :) கண்டிப்பா ட்ரை பண்றேன்.
படங்கள் அத்தனையும் பளிச்சுனு அழகா வந்திருக்கு! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

பரங்க்கிக்காயில் பாயசமா இப்பதான் கேள்வி படுரேன் ஆனால் பார்க்கவே சாப்பிடத்தூண்டுது பா,வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாக்கவே நல்லாஇருக்கு. படங்களும் செய்முறையும் கூட சுலபமாகவே இருகு செய்துபாத்துட்டு சொல்ரேன்

சூப்பர் பாயாசம் ஹர்ஷா.கட்டாயம் செய்துபார்க்கிறேன்.வாழ்த்துக்கள்பா.

ரம்ஸ்,
ஹேப்பி ஹாலோவீன். :-) பாயசம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

குமாரி,
வாழ்த்துக்கு நன்றி குமாரி.

சுஸ்ரீ,
கண்டிப்பா செய்து பாருங்க.உங்க குட்டீஸ்க்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்.பதிவுக்கு மிக்க நன்றி.

ஸ்வர்ணா,
ஆமாம்.சுவையும் நல்லா இருக்கும்.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

கோமு,
உங்க பதிவு பார்க்க மிக்க மகிழ்ச்சி.கட்டாயம் செய்து பார்த்துட்டு எப்படி வந்ததுனு சொல்லுங்க.

சுந்தரி,
கண்டிப்பா செய்து பாருங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

பாயசம் சூப்பர் ஹர்ஷா... இதில் தேங்காயை அப்படியே துருவிப் போடாமல், அரைத்து தேங்காய்ப்பாலாக விட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்......செய்து பார்க்கிறேன்..

ராதா,
இதில் பரங்கிக்காயை துறுவி சேர்த்திருப்பதால்,அதே டெக்ஸ்ச்சருடன் இருக்க வேண்டும் என்று தான் தேங்காய் துறுவல் சேர்த்தேன்.பரங்கிக்காயை அரைத்து செய்யும்போது தேங்காய்ப்பால் விடலாம்.உங்க ஐடியாவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.