முழு உளுந்து தோசை

தேதி: July 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

தோசை அரிசி - ஒரு கப்
பச்சரிசி - கால் கப்
முழு கருப்பு உளுந்து - கால் கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தோசைஅரிசி, பச்சரிசி இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்தையும் வெந்தயமும் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
முதலில் உளுந்தையும் வெந்தயமும் சேர்த்து நன்கு பொங்க அரைத்து தனியாக வைக்கவும்.
பின் அரிசியை அரைத்து அரைத்த மாவோடு தேவையான உப்பு போட்டு பிசையவும்.
10 மணி நேரம் புளிக்கவிடவும். பின் தோசைக்கல்லில் நல்லெண்ணெய் விட்டு சுடவும்.


இதை வெங்காய சட்னி, கருப்பட்டியோடு பரிமாறவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

முழு உளுந்து தோசைக்கு உளுந்தை தொலியோடு அரைக்கனுமா? தொலி களைஞ்சுட்டு அரைக்கனுமா. தொலியோடு அரைத்தால் மாவு கறுப்பா வராதா?

ஹாய் mals

முழு உளுந்து தோசைக்கு உளுந்தை தொலியோடு தான் அரைக்கவேண்டும். தோசை கருப்பாகதான் இருக்கும்.