கத்திரி முருங்கை மசாலா

தேதி: November 2, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

முருங்கைக்காய் - 3
கத்திரிக்காய் - 4
வெங்காயம் - ஒன்று
மல்லி தழை - சிறிது
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - சிறிது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - அரை குழிக்கரண்டி
அரைக்க:
தேங்காய் - ஒரு சிறு துண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய், கிராம்பு தலா - ஒன்று
பட்டை - சிறு துண்டு


 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். மிளகாயை கீறி வைக்கவும். முருங்கைக்காயை சிறு துண்டாக நறுக்கவும். கத்திரிக்காயை கீறி வைக்கவும்.
அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவைகளைப் போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கி நறுக்கிய காய்களையும் சேர்த்து வதக்கவும்.
காய் வதங்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அரைத்த மசாலாவையும் போட்டு லேசாக வதக்கி உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
தண்ணீர் வற்றி காய் வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மல்லி தழை தூவி பரிமாறவும்.
சுவையான கத்திரி முருங்கை மசாலா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நானும் இப்டி தா செய்வேன் ஆனா அரைச்சு சேர்க்கறது தவிர இப்டியும் ட்ரை பண்ணி பாக்கறேன் வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நேத்துதாங்க முருங்கைக்காய் & கத்திரிக்காய் வாங்கி வந்தேன்.கத்திரிக்காய் நா உயிர கொடுப்பேன்.குறிப்பு கலக்கல்.விருப்ப பட்டியலில் சேர்தாச்சு

பாத்திமா கத்திரி முருங்கை மசாலா சூப்பர்,வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பரான குறிப்பு.. எனக்கு ரொம்ப பிடித்த டிஷ். வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் பார்திமா எப்படி இருக்கிங்க உங்கள் ஒவ்வொரு சமையலும் மிகவும் அருமை இதை நான் சொய்து பார்த்தொன் அருமை, அருமை, மிகவும் அருமை ஹேமலதாசிவகுரு

ரொம்ப நல்லா இருக்கு மசாலா... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஃபாத்திமா அம்மா,
கத்தரி முருங்கை மசாலா சூப்பரா இருக்கு.கண்டிப்பா செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள்.