புதினாமல்லி சட்னி

தேதி: November 3, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (7 votes)

 

வெங்காயம் - 5
தக்காளி - 3
புதினா - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப
வறுத்து அரைக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்தம் பருப்பு
காய்ந்த மிளகாய்
தேங்காய்
புளி – கொஞ்சம் (புளிப்புக்காக)
கடைசியாக தாளிக்க:
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை


 

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புதினா கொத்தமல்லியினை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தபருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து கொண்டு தனியாக வைக்கவும்.
பிறகு அதே கடாயில் வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
பின் தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் கடைசியில் புதினா, கொத்தமல்லி சேர்த்து மேலும் ஒரு நிமிடங்கள் வதக்கவும்.
இதனை சிறிது நேரம் ஆற வைத்து கொள்ளவும்.
மிக்சியில் முதலில் வறுத்த பொருட்கள், தேங்காய் புளியினை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையுடன் வதக்கி வைத்துள்ள பொருட்கைள தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து அதையும் நன்கு அரைத்து கொள்ளவும்.
தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை சட்னியில் கொட்டவும்.
சுவையான சட்னி ரெடி. இது தோசை இட்லிக்கு பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ரே சட்னி சூப்பர்ப்பா,வாழ்த்துக்கள்டா...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சட்னி சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்சது புதினா சட்னி பா வாழ்த்துகள் நா செஞ்சி சாப்பிட்டு வரேன் நானும் இப்டி தா செய்வேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் கொஞ்சம் பூண்டும் சேர்த்து செய்வேன்பா. அவ்ளோதான் வித்தியாசம் மத்தபடி இப்படி தான் பா செய்வேன். வாழ்த்துக்கள். மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

chuti soper pa

ரேவதி,
முதல் குறிப்பா? நல்லா இருக்கு.தொடர்ந்து குறிப்புகள் கொடுங்க.வாழ்த்துக்கள்.

ஹாய் ரே. ஆஹா சூப்பர் ரே தோசையோட சட்னிய பார்க்கும் போது சாப்பிடனும்னு தோணுது ரே. நிச்சயம் செய்துட்டு வந்து சொல்றேன் ரே.

அன்பரசி ரே இதுக்கு முன்னாடி குறிப்பு கொடுத்து இருக்காங்க முட்டை புர்ஜி, பனீர் மசாலா

நல்லா வாசமான குறிப்பா இருக்கே!!! ;) நாலை காலை செய்துடுவோம்... எல்லாமே தயாரா இருக்கு வீட்டில். நல்ல குறிப்பு ரேவதி. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவதி உங்க சட்னி செய்முறை நல்லா இருக்கு. கடுகு அரைத்து சேர்த்திருப்பது வித்தியாசமா இருக்கு. டேஸ்ட்டும் நல்லா இருக்குமுனு பார்த்தாலே தெரியுது செய்து பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்.

என்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கு நன்றி. என்னவருக்கு அடிப்பட்ட காரணத்தால் என்னால் வர முடியவில்லை. இன்று தான் இந்த பக்கமே வந்தேன். தனி தனியாக சொல்ல முடியவில்லை. நன்றி நன்றி

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

chutney nandraaga irunthathu revathy,indru kaalai ungal chutney thaan,

காலை டிஃபன்க்கு உங்க புதினாமல்லி சட்னி தான் :) ரொம்ப வாசமா ரொம்ப சூப்பரா இருக்குங்க. இன்னும் யாரும் சாப்பிடல, நான் மட்டும் டேஸ்ட் பண்ணேன். நல்ல சட்னி ரெசிபிக்கு நன்றி ரேவதி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று காலை உங்க சட்னி செய்தேன், கொஞ்சம் மிளகாய் மட்டும் கூடுதலாக போட்டு செய்தேன். நல்ல மனமாகவும், காரமாகவும் இருந்தது. நன்றி ரேவதி.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்