பொரித்த குழம்பு - 2

தேதி: November 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

 

புடலங்காய் - அரை கிலோ
பயத்தம்பருப்பு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
வறுத்து அரைக்க:
பெருங்காயம் - சிறிய துண்டு
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
தேங்காய் துருவல் - கால் கப்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
நிலக்கடலை - 2 தேக்கரண்டி


 

புடலங்காயை சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். பயத்தம்பருப்பை வேக வைக்கவும். எண்ணெயில் பெருங்காயம், உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய் வற்றலை சிவக்க வறுத்து தேங்காய் துருவலுடன் தேவையான நீர் சேர்த்து நைசாக, விழுதாக அரைக்கவும்.
புடலங்காயில் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். அத்துடன் தேவையான உப்பும், சிட்டிகை மஞ்சள் பொடி சேர்க்கவும்.
நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு, 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் வெந்த பருப்பையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
இரும்புக் கரண்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றை குழம்பில் கொட்டவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.
சுவையான பொரித்த குழம்பு, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். இதை புடலங்காய் தவிர முருங்கைக் காயிலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ராதா மேடம் வேர்க்கடலை தாளிச்ச பொரித்த குழம்பு புதுமையா சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

டிப்ரண்டா இருக்கு நா புடலங்காய் கூட்டு தா செய்வேன் இதே போல வறுத்து அரைக்கறது தவிர வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் வினோஜா....உனக்காகத்தான் இந்த ரெஸிபி....நீ கேட்டாயில்லயா, பயத்தம்பருப்பு சேர்த்த பொரித்த குழம்பு செய்முறை இது...செய்து பார்..

என்னுடைய எல்லா குறிப்புகளையும் படித்து வாழ்த்தும் உனக்கு நன்றி ரேணு....முடிந்தால் செய்தும் பாரு...

ராதா,
புடலங்காயில் பொரித்த குழம்பு தயாரிப்பு நல்லா இருக்கு! சுவையான குறிப்பு! :) எனக்கு இந்தமாதிரி அரைத்துவிட்டு செய்யும் கூட்டு, சாம்பார் என்றால் ரொம்ப பிடிக்கும். கடைசியில் வேர்க்கடலை சேர்த்து தாளித்து போட்டிருப்பது புதுமையா இருக்கு. ட்ரை பண்ணி பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

வித விதமா பொரிச்ச குழம்பு செய்து அசத்துறீங்க ;) ரொம்ப நல்லா இருக்கு. வேர்கடலை சேர்த்தது புதுசா இருக்கு. அவசியம் செய்து பார்க்கனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஸ்ரீ, வனிதா இருவருக்கும் நன்றி...செய்து பார்த்து சொல்லுங்கள்...

ராதா,
பொரித்த குழம்பு சூப்பரா இருக்கு.இம்மாதிரி செய்ததில்லை.கண்டிப்பா செய்யணும்.இதில் புடலங்காய்க்கு பதில் வேறு என்ன காய் சேர்க்கலாம்?

ஹலோ ஹர்ஷா...உங்கள் பதிவை தாமதமாக பார்த்ததற்கு மன்னிக்கவும்....இதே மாதிரி முருங்கைக்காய், பூசணிக்காயிலும் செய்யலாம்....நன்றாக இருக்கும்....உங்களின் வாழ்த்துக்கு நன்றி....