வெங்காய வற்றல் குழம்பு

தேதி: November 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (8 votes)

திருமதி. மஞ்சுளா அரசு அவர்களின் குறிப்பினை பார்த்து முயற்சி செய்தது.

 

சின்ன வெங்காயம் - கால் கிலோ
பூண்டு - ஒன்று (20)பல்
புளி - எலுமிச்சைபழம் அளவு
சாம்பார் பொடி - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
வெல்லம் - ஒரு சிறு துண்டு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - 2ஆர்க்கு
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி


 

பூண்டை தோல் எடுத்து வைக்கவும். வெங்காயத்தையும் தோல் எடுத்து பொடியாக நறுக்கவும்
புளியை கரைத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பின் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் கரைத்து வைத்த புளியை ஊற்றவும்.
புளி, பொடி வாசனை போனதும் வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
சுவையான வத்தக்குழம்பு ரெடி. அப்பளம் வடகம் நல்ல காம்பினேஷன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஃபாத்திமா அம்மா,
வெங்காய வற்றல் குழம்பு சூப்பரா செய்து இருக்கீங்க.அதன் கலரே பசியை தூண்டுது.நல்ல குறிப்பு கொடுத்த மஞ்சுவிற்கு நன்றி.அதை அழகா செய்து காட்டிய உங்களுக்கு பாராட்டுக்கள்.

ஃபாத்திமாம்மா,
வெங்காய வற்றல் குழம்பு அழகா செய்து காட்டியிருக்கிங்க! படங்கள் எல்லாம் பளிச்சுனு நல்லா வந்திருக்கு! குறிப்பை கொடுத்த மஞ்சுளாவிற்கும், செய்து காட்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

மஞ்சுளாவின் சுவையான குறிப்பை அழகா செய்திருக்கீங்க :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் பார்திமா, எப்படி இருக்கிங்க? நான் தூபாய்யில் இருக்கிரோன் பார்திமா உங்கள் சமயல் குறிப்பு எனக்குரொம்பவும் பிடிக்கும். இந்த குழம்பூம் மிகவும் அருமை நட்புடன், ஹேமலதாசிவகுரு

போட்டோஸ் எல்லாம் அருமையா இருக்கு.செய்முறையும் நல்லாயிருக்கு. வாழ்த்துகள். நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அம்மா, உங்களோட பேசியே நாளாச்சு. எப்படி இருக்கீங்க? வெங்காய வற்றல் குழம்பு வித்தியாசமான குறிப்பு. ஊருக்கு வந்து தான் செய்து பார்க்கனும். இங்கே சின்ன வெங்காயம் கிடைக்காது. வாழ்த்துக்கள்ங்கம்மா. :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அடேகப்பா, ரொம்ப பிரமாதம். குறிப்பை தந்த மஞ்சுளக்கும், அழகாய் பண்ணிகாட்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்ம்மா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***