pampers போடுவதால் சளி அதிகமாகுமா? viral infection என்றால் என்ன?

hai தோழிகளே.. வணக்கம் எப்படி இருக்கீங்க? என் பையனுக்கு 5 மாதம் ஆகுது. இப்போ மழை சீசன் என்பதால் pampers use பண்ணனும். ஆனால் அவனுக்கு ஏற்கனவே சளி அதிகமா இருக்கு. pampers போடுவதால் சளி அதிகமாகுமா? (ஈரம் உள்ளேயே இருக்குமே? அதான்) பகலிலும் பயன் படுத்த வேண்டும். எவ்வளவு மணி நேரம் கழித்து மாற்ற வேண்டும்.? sample pack பயன் படுத்தினேன். தினமும் பயன் படுத்த ஆலோசனை சொல்லுங்கள். குறை பிரசவம் என்பதால் பவுடர் அடிக்க கூடாது. வாசனை oinment பயன் படுத்தக் கூடாது. என்ன செய்வது?

அவனுக்கு விரல் நகம் ரொம்ப கூர்மையாக இருக்கிறது.. நகத்தால் கண்ணில் (கருவிழியில்) கிழித்து கொண்டான். அதில் வேறு viral infection ஆகி உள்ளது.. கண்ணே வீங்கி பார்க்கவே முடியவில்லை. தண்ணி வேறு வருகிறது.. "கண்வலி" (மெட்ராஸ் eye) யாக இருக்குமா? அதை தான் டாக்டர் viral infection என்று சொல்கிறாரா? ஒன்றும் புரியவில்லை. எப்போதும் அவனை பார்த்து அழுது கொண்டே இருப்பதால் என்னவர்கிட்ட திட்டு வேற வாங்குறேன்.. தினமும் நகம் கடித்து எடுத்தாலும் உடனே வளர்ந்து விடுகிறது.. அதற்கும் எதாவது ஆலோசனை இருந்தால் சொல்லுங்கள். 5 வருடம் கழித்து பிறந்தவன்.. கஷ்ட படுறான். மனசு தாங்க மாட்டேங்குது. என் பையனுக்காக வேண்டி கொள்ளுங்களேன் ப்ளீஸ்.. தோழிகள் என்று யாரும் இல்லை.. இப்போது நீங்கள் மட்டுமே ஆறுதலாய்..

வைரல் இன்ஃபெக்‌ஷன் பார்த்து அதிக பயம் வேண்டாம்... டாக்டர் கொடுத்த மருந்தை போட்டு வாங்க, பிரெச்சனை இல்லை, சரி ஆகிடும். நகத்தை கடிச்சு எடுத்தா இது போல் பிரெச்சனைகள் வர தான் செய்யும். பேபிக்குன்னு நெயில் கட்டர் கடைகளில் கிடைக்கிறது, வாங்கி பயன்படுத்துங்க. குழந்தையின் கைகளை எப்பவும் சுத்தமா வைங்க, கையில் அழுக்கு இல்லை என்றாலே இது போல் இன்ஃபெக்‌ஷன் வராது. மெட்ராஸ் ஐ பற்றி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. கண்ணில் அழுக்கு சேருகிறதா?? அது கண்ணை திறக்க முடியாமல் மூடுகிறதா? சிவந்து அறிப்பு இருக்கிறதா? அப்படிலாம் இருந்தா தான் மெட்ராஸ் ஐ. மெட்ராஸ் ஐ என்பது வைரல் மட்டுமல்ல, சில நேரம் பேக்டீரியல் இன்ஃபெக்‌ஷனாக கூட இருக்கலாம். அதை எல்லாம் குழப்பிக்காதீங்க.

மழை நேரம் பேம்பர்ஸ் யூஸ் பண்ணலாம்... அவங்க யூரீன் போனதும் பார்த்து மாத்திடனும்... இதுக்கு மணி கணக்குலாம் இல்லை, உங்க குழந்தை எவ்வளவு சீக்கிரம் சீக்கிரம் யூரீன் போகும்னு தெரியாது.. அதனால் போனதும் பார்த்து மாத்திடுங்க. யூரீன் அளவை பொருத்து 1 முறை அல்லது 2 முறை போனதும் மாற்றுங்க. அப்போ உள்ளே ஈரம் இருக்காது, சளியும் பிடிக்காது.

கவலை வேண்டாம்... உங்க குழந்தைக்கு ஒன்னும் இல்லை, நல்லா இருப்பாங்க... எங்க பிராத்தனைகள் என்றும் உண்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி தோழி. நெயில் கட்டர் வைத்து தான் கட் செய்தேன். இங்கு எல்லாரும் திட்டினார்கள். விரல் கட்டாகிட போகுதுன்னு.. அதான் கடிச்சேன். இனி மறுபடியும் மாத்திக்கிறேன். இரவில் தூங்கி எழும் போது மட்டும் அழுக்கு உள்ளது. மற்றபடி தண்ணி தான் வந்துட்டே இருக்கு. காலையில் மட்டும் திறக்க கஷ்ட படுகிறான். லைட்டா ஒரு ஓரத்தில் மட்டும் சிவந்து உள்ளது. டயப்பர் பற்றிய தகவலுக்கும் நன்றி தோழி..

மேலும் சில பதிவுகள்