குடும்ப பிரச்சனைகளுக்கு உளவியல் நிபுனரை அனுகுவது சரியா?

குடும்ப பிரச்சனைகளுக்கு உளவியல் நிபுனரை அனுகுவது சரியா?

pls யராவது பதில் சொல்லுங்கப்பா!

pls யராவது பதில் சொல்லுங்கப்பா!

நீங்க உங்க பிரச்சனையை பொறுத்து போகலாம் தோழியே உளவியல் சம்பந்தமான பிரச்சனைனா கண்டிப்பா போங்க பா சரிங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, குடும்ப பிரச்சனைன்னு எதை சொல்ல வரீங்க??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கணவன் - மனைவி, மாமியர் - மருமகள், ..சரியனா திர்வு கிடைக்குமா?

போகலாம்

ஹேமா, ஏற்கனவே ஒரு இழை ஓபன் பண்ணியிருந்தீங்க? ஆனா அதில் மாத்தி கேட்டிருக்கீங்க :) சின்ன விஷயத்துக்கெல்லாம் உளவியல் நிபுணரை தேடி ஓடுவது சரிவராது. சின்ன விஷயங்கள் எவை என்பதை அவரவர் மனநிலையையும்,எடுத்துக்கொள்ளும் மனோபாவத்தையும் பொறுத்தது. 99.9% வீட்டுக்குள்ளயே தீர்வு கிடைக்குமான்னு பாருங்க. அப்படி கிடைக்காதுன்னு உறுதியா தெரிஞ்ச பிறகு உளவியல் நிபுணரை நாடி போகலாம். உங்களால் சொல்லக்கூடிய,சொல்ல முடிகிற பிரச்சனையாக இருந்தால் இங்கே சொல்லுங்கள். ஏனென்றால் கணவன் - மனைவி,மாமியார் - மருமகள்,நாத்தனார் சண்டை இல்லாத குடும்பங்களே இல்லை. இதெல்லாம் பெரிய விஷயமும் இல்லை. எல்லாமே கையாளும் விதத்தில் கையாண்டால் சரியாக வரும். நம்மில் பாதி பேர் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்க காரணமே 1. கம்யூனிகேஷன் ப்ராப்ளம் 2. ஈகோ பிராப்ளம்.

உதாரணமாக, நமக்கு ஒரு வேலை ஆகவேண்டும் என்றால், அந்த வேலையை போனில் பேசி முடிப்பதற்கும், நாமே நேரில் சென்று முடிப்பதற்கு நிறைய வித்தியாசம் உண்டு. அதே போல தான் பிரச்சனைகளுக்கு தீர்வுகளும். சம்பந்தப்பட்ட நபரிடம் நம் பிரச்சனைகளை போனில் பேசுவதை விடவும், இன்னொரு நபரின் உதவியை நாடுவதை விடவும் நாமே நேரில் பக்கத்தில் இருந்து நம் பக்கம் இருக்கும் நியாயங்களையும், அதற்கான தீர்வையும் பேசினால் வாழ்க்கைக்கு பங்கம் இல்லை. பிரச்சனை என்பது எல்லார் வாழ்க்கையிலும் இருக்கும். நாம் வீட்டிற்குள்ளே இருந்து கொண்டு அதை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் கவலைப்படுவதால் நமக்கு மட்டும் கஷ்டங்கள் இருப்பதாக நினைக்கிறோம். வெளியுலகத்திற்கு வந்து பார்த்தால் நம்மை விட மீளமுடியாத கஷ்டத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கோர் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் அடுத்த கட்டத்தை நோக்கி தன்னம்பிக்கையோட நகர்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா சொல்வது முற்றிலும் உண்மை, உளவியல் நிபுனரிடம் சொல்வதை விட பிரச்சனையை நீங்களே புரிந்து கொண்டு தீர்வு காண முயலுங்கள் முடியாதது எதுவும் இல்லை, மாமியார், நாத்தனார், கணவன் மனைவி இது வீட்டிற்குள் நடக்கும் பிரச்சனை இதை இங்கிருக்கும் சகோதரிகளிடம் பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்கு புரியாத விஷயங்களை அவர்கள் தெளிவுபடுத்துவார்கள் தெரியாத உளவியல் நிபுனரை விடை இங்கிருக்கும் சகோதரிகள் நம்மிது அன்பு மிக்கவர்கள் இதை என் அனுபவத்திலிருந்து சொல்கிரேன் தவறாயிருந்தான் மன்னிக்கவும்

இப்படிக்கு ராணிநிக்சன்

உங்கள் அக்கறையனா பதிலுக்கு ரொம்ப நன்றி கல்பனா சரவணக்குமார் & ராணிநிக்சன்:-)

இந்த உரையாடல் வலைதளம் முலமாக இருப்பதால் என்னால் முழுமையாக பிரச்சனை பற்றி விவரிக்க முடியவில்லை. thats y i am asking general opinion.

மேலும் சில பதிவுகள்