எள்ளடை

தேதி: November 7, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

 

பச்சரிசி மாவு - 4 ஆழாக்கு
வேர்க்கடலை - அரை ஆழாக்கு
துவரம் பருப்பு, கடலைபருப்பு, பயத்தம் பருப்பு - அரை ஆழாக்கு
பொட்டுக்கடலை - அரை ஆழாக்கு
எள் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6
பூண்டு - ஒன்று (பெரியது)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

பச்சரிசிமாவை சிறிது தண்ணீர் தெளித்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை லேசாக வறுத்து, ஒன்றும் பாதியுமாக உடைத்துக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டை ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
மேற்குறிப்பிட்ட பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து, ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு நன்கு உலர்த்தவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் ஆவியில் வைத்த மாவு, பருப்புவகைகள், மிளகாய்-பூண்டு விழுது, பொட்டுக்கடலை மாவு, எள் எல்லாம் சேர்க்கவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஆற வைத்த சுடுநீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள மாவை போட்டு பொரித்தெடுக்கவும்.
பூண்டு வாசத்துடன் கூடிய எள்ளடைகள் / தட்டைகள் தயார்.

காய்ந்த மிளகாய்க்கு பதில் மிளகாய் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

காரசாரமான, வாசனையான ரெசிபியோட வந்து இருக்கீங்க, செய்முறை விளக்கம் அருமை. வித்தியாசமா இருக்கு. சீக்கரம் பண்ணிடறேன்.வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

தீபாவளி முடிஞ்சு இப்பதான் ஸ்வீட், காரம் அசத்தலா குறிப்பு வந்துக்கிட்டு இருக்கு. உங்க எள்ளடை குறிப்பும் வித்தியாசமா இருக்கு. மாவுவ ஏன் வேகவைச்சு செய்றீங்க ஆறின வெந்நீர்க்கு பதிலா சாதாரண தண்ணீர் சேர்க்க கூடாதா.

அருமையான குறிப்பு படங்கள் அருமை வாழ்த்துக்கள் by elaya.G

நல்லா பண்ணிருக்கிங்க.. அந்த கலர் வெரி அட்ராக்டிவ் கண்டிப்பா செய்யணும்னு விருப்பத்துல சேர்த்துட்டேன்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எள்ளடை அருமையா செய்து காட்டியிருகிங்க ஹர்ஷா.சுவையும் அருமையா இருக்க்கும் என நினைக்கிறேன். விருப்பபட்டியலில் சேர்த்திருக்கேன்.வாழ்த்துக்கள் ஹர்ஷா.

எள்ளடை பார்க்கவே அழகா இருக்கு :) செய்ய்வே தெரியாதவங்களும் சுலபமா செய்யலாம்.. அழகா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள். நானும் செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ வர்ஷா, ஈசியா இருக்கு உங்க ரெசிபி, நன்றி...ஆழாக்கு என்ன அளவு?

ஹர்ஷா,
எள்ளடை குறிப்பு ரொம்ப அருமையா இருக்கு! நான் செய்து நாளாச்சு, உங்க படங்களே ரொம்ப டெம்ட் பண்ணுது என்னை செய்துபார்க்க சொல்லி! :) இந்தமாதிரி கார ஐய்ட்டங்கள் என்றால் எங்க வீட்டில் இரண்டு ஃபேன்ஸ் வேற இருக்காங்க! :) ஆக இப்ப விருப்பப்பட்டியலில் சேர்த்துக்கிறேன், கூடிய விரைவில் உங்க மெத்தட்ல செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள் ஹர்ஷா!

அன்புடன்
சுஸ்ரீ

எள் வாசனையும்,. பூண்டும் வாசனையும் என் ஃபேவரிட்.. கண்டிப்பா செய்து பார்க்கறேன். ரொம்ப அழகா செய்து இருக்கிங்க. வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பரான தட்டை கண்டிப்பா செய்து பாக்கனும் வாழ்த்துக்கள் பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆஹா சூப்பர் ஸ்நாக்ஸ் கொடுத்து அசத்துறீங்க,வாழ்த்துக்கள். எள்ளடை பார்க்கவே சாப்பிடணும் போல இருக்கு. மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்/.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

சுகி,
எப்படி இருக்கீங்க?முதலாவதாக வந்து பதிவுபோட்டு இருக்கீங்க.மிக்க நன்றி.கண்டிப்பா செய்து பாருங்க.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

வினோஜா,
இது தீபாவளிக்கு செய்ததுதான்.;-) உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.நான் பயன்படுத்தியது பச்சரிசி மாவு.அதனால் ஆவியில் வைத்து செய்தேன்.ஆவியில் வைக்க வேணாம்னா கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளலாம்.ஆவியில் வைத்த பின் செய்தால் எள்ளடை மொறு மொறுப்பாக வரும்.ஆற வைத்த சுடுநீர் சேர்ப்பதால் எள்ளடை கடினமாக இல்லாமல்,சாப்பிட எளிதாக இருக்கும்.செய்து பாருங்க.

இளையா,வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

மீனு,
விருப்ப பட்டியலில் சேர்த்ததற்கு மிக்க நன்றி.நேரம் கிடைக்கும்போது செய்து பாருங்க.பதிவுக்கும் நன்றி.

சுந்தரி,
உங்க செக்கலு குறிப்பு என் விருப்ப பட்டியலில் இருக்கு.நீங்க என் குறிப்பை விருப்ப பட்டியலில் சேர்த்திருக்கீங்க.:-) ரொம்ப நன்றி.

வனிதா,
//செய்யவே தெரியாதவங்களும் சுலபமா செய்யலாம்.//
ஆமாம்.ஃபோன்ல அம்மாவை கேட்டு செய்தது.அப்படியே குறிப்பை அனுப்பிட்டேன்.கண்டுபிடிச்சுட்டீங்க.;-) செய்து பாருங்க.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

லதா,
ஆழாக்கில் அளந்தால் 200கி அரிசி பிடிக்கும்.அரிசி மாவு எவ்வளவு கிராம் வரும்னு சரியா தெரியல.கேட்டு சொல்கிறேன்.

சுஸ்ரீ,
செய்வதும் சுலபம் தான்.நேரம் கிடைக்கும்போது செய்து பார்த்து பிடிச்சதானு சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி,சுஸ்ரீ.

ரம்ஸ்,
ஆமாம்.பூண்டு வாசனையுடன் நல்லா இருக்கும்.கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.மிக்க நன்றி.

ஸ்வர்ணா,
கட்டாயம் செய்து பாருங்க.சுலபம் தான்.பதிவுக்கு ரொம்ப நன்றிங்க.

நஸீம்,
ஈசியான ரெசிப்பிதான்.செய்து சாப்பிடுங்க.பதிவுக்கு மிக்க நறி.

//ஆமாம்.ஃபோன்ல அம்மாவை கேட்டு செய்தது.அப்படியே குறிப்பை அனுப்பிட்டேன்.கண்டுபிடிச்சுட்டீங்க.;-) // - ஹிஹிஹீ... இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே!!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மை பேவரெட் பா அம்மா செஞ்சா மாதிரியே இருக்கு இப்பவே சாப்பிடதும் போல இருக்கு வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு பதிவுக்கு நன்றி.