மாங்காய் பச்சடி

தேதி: November 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

மாங்காய் - ஒன்று (கிளிமூக்கு மாங்காய்)
வெல்லம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 4
உப்பு - 2 சிட்டிகை
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
வரமிளகாய் - 2


 

பச்சடி செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மாங்காயை தோல் நீக்கி நைசாக சீவி (பஜ்ஜி கட்டையில்) உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். வெந்ததும் மிளகாயை எடுத்து விட்டு மத்தால் மசிக்கவும்.
பின் துருவிய வெல்லம் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். வெந்த பச்சைமிளகாயை அரைத்து வடிகட்டி ஊற்றவும்.
கலவை கெட்டியானதும், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளித்து கொட்டி இறக்கவும்.
சாம்பார் சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, பிரட் இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மஞ்சு சூப்பர்ப்பா எனக்கு பிடிச்ச டிஷ்ஷா போட்டு தாக்குறீங்களே சேம் பிஞ்ச் நானும் இப்படித்தான் செய்வேன் வாழ்த்துக்கள்,

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனக்கு ரொம்ப பிடிச்ச மாங்காய் பச்சடி,அம்மா செய்வது போலவே செய்து காட்டியிருக்கிங்க மஞ்சுளா.உடனே செய்து சாப்பிடனும்ன்னு தோனுது.வாழ்த்துக்கள்.

மை பேவரெட் டிஷ் மாங்காய் சீசன் இப்ப இல்ல வந்ததும் செஞ்சிடுறேன் இப்டி தா செய்வேன் மிளகாய்க்கு பதில் மிளகாய்தூள் சேர்ப்பேன் அப்பதான் காரம் கம்மியா இருக்கும் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரொம்ப நல்லா இருக்கு... அதுவும் அந்த கடைசி படம் “எப்ப செய்ய போற வனி??”னு கேட்குது!! சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா மாங்காயில பச்சடி செஞ்சா மட்டும் தான் சாப்பிடுவேன். இங்க வந்ததும் செய்ய தெரியலயே நமக்குனு இருந்தேன். நான் செஞ்சு பார்க்குறதுக்காகவே தந்த மாதிரி இருக்கு மஞ்சு. வாழ்த்துக்கள். இது எல்லா வகை மாங்காயிலயும் செய்யலாமா?

மாங்காய் பச்சடி பார்க்கவே ஆசையா இருக்கு ஒரு ப்ளேட் பார்சல் ப்லீஸ்

இப்படிக்கு ராணிநிக்சன்

மாங்காய் பச்சடி Yenaku konjam plz

என்ன ஒரே மாங்காய் வாரமா இருக்கு,இப்பத்தான் ஃபாத்திமா அவர்களின் குறிப்புக்கு பதிவு போட்டேன்,இப்போ மஞ்சுக்கு,காரம் & இனிப்பான மாங்காய் பச்சடி சூப்பர்!

Eat healthy

மாங்க்காய் பச்சடி ரொம்ப பிடிக்கும். செஞ்சு பாக்குரேன்.