குடைமிளகாய் சப்ஜி

தேதி: November 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

குடைமிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 2
காரப்பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
கடலைப்பொடி - 4 தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

குடைமிளகாயை சிறிய சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடலையை வாணலியில் வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் பொரித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் குடைமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
சற்று வதக்கியதும் அதில் உப்பு, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும். குடைமிளகாய் நன்கு வெந்ததும், செய்து வைத்துள்ள கடலைப்பொடியை சேர்த்து கிளறவும்.
இறக்கி வைத்து மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி ரொட்டி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்க வித்தியாசமாக இருக்கு . செய்து பார்த்து சொல்கீறன் .

குடைமிளகாய் சப்ஜி நல்லாருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆன்ட்டி என் சித்தி செஞ்சி தருவாங்க இதே போல தா நல்லாயிருக்கும் இப்ப நானே செஞ்சி தருவேன் அவங்களுக்கு தாங்ஸ் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என் குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கும், அறுசுவை குழுவினருக்கும் நன்றி....

வர்தினி....செய்து பார்த்து சொல்லும்மா...
ரேணு, ஸ்வர்ணா.....பாராட்டிய உங்களுக்கு நன்றி....

மிகவும் எளிதான சுவையுள்ள குறிப்பை கொடுத்திருக்கின்றீர்கள் ராதா.
பார்க்கும் போதே அதை உணரமுடிகின்றது நிச்சயம் அதன் சுவை நன்றாகவே இருக்கும்.நல்ல குறிப்பை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வித விதமான குறிப்போடு அசத்துறீங்க... நல்ல சுலபமான குறிப்பு. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கவே அருமையா இருக்கு சப்ஜி. ஆன்ட்டிகலக்குறீங்க. . வாழ்த்துக்கள். மேலும் இப்படி பல குறிப்புகள் தந்து கலக்குங்க. வாழ்த்துக்கள்.

இன்னைக்கு நைட் சப்பாத்திக்கு செய்திடரேன் சூப்பர்மா

இப்படிக்கு ராணிநிக்சன்

ராதா சிஷ்டர் பர்ர்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. படம் நல்லா இருக்கு. சுவையும் நல்லா இருக்கு.குறிப்புக்கு நன்றி.

அப்சரா, வனிதா, நசீம்.....வாழ்த்துக்கு நன்றி...
ராணி....செய்தாயா?எப்படி இருந்தது?
வானதி...பாராட்டுக்கு நன்றி...

supera irunduchu aunty nan ipa dhan samyal kathukuren indha .com parthu yellam item supera,easya iruku nan summa try pannen super vandhuchu iam very happy niraya post panuga easya ithu mathiri

BE Happy & Make Others Happy