மிளகு சீரக சாதம்

தேதி: November 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (5 votes)

 

1. சாதம் - 1 பெரிய கப்
2. மிளகு - 1 1/2 தேக்கரண்டி
3. சீரகம் - 2 தேக்கரண்டி
4. உளுந்து - 1/2 தேக்கரண்டி
5. கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
6. முந்திரி - 10
7. கறிவேப்பிலை
8. உப்பு
9. நெய் (அ) எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி


 

மிளகையும், சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து ஒன்று இரண்டாக பொடி செய்து வைக்கவும்.
பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி சேர்த்து சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து எடுக்கவும்.
இதில் சாதத்தை சேர்த்து உப்பு, பொடித்த மிளகு சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.


மேலும் சில குறிப்புகள்