மஷ்ரூம் மட்டர் மசாலா

தேதி: November 10, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (6 votes)

 

மஷ்ரூம் - ஒரு கப்
Frozen பட்டாணி - அரை கப்
சீரகம் - கால் தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
முந்திரி விழுது - கால் கப்
கசூரி மேத்தி - சிறிது
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
பிரிஞ்சி இலை - ஒன்று
உப்பு மற்றும் எண்ணெய் - தேவைக்கேற்ப


 

மஷ்ரூமை சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். பட்டாணியை கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பின், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் அதில் நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.
மஷ்ரூம், தக்காளி வதங்கியதும் பட்டாணி போட்டு அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து கிளறவும்.
இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, உப்பு காரம் சரிபார்த்துக் கொள்ளவும்.
பின்னர் இதனை மூடி வேக வைக்கவும். 5 முதல் 10 நிமிடங்களில் மஷ்ரூமும், பட்டாணியும் வெந்துவிடும்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது சேர்க்கவும். முந்திரி விழுது சேர்த்ததும் மசாலா கெட்டியாகும்.
பின்னர் கசூரி மேத்தியை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
சிறிது கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறலாம்.
சுவையான மஷ்ரூம் மட்டர் மசாலா தயார். இது புலாவ் வகைகள், சப்பாத்தி மற்றும் நாண் போன்றவைகளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

இதில் முந்திரி விழுதுக்கு பதில் ப்ரெஷ் க்ரீம் கூட சேர்க்கலாம். முந்திரி விழுது சேர்த்தால் கிரேவி திக்காக வரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர். பார்க்கவே அழகா இருக்கு.அசத்தலான நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்.

சூப்பர் டிஷ் மஷ்ரூம் வாங்கும்போது எதனா குறிப்பிட்ட பேர் சொல்லி வாங்கனுமா மஷ்ரூம்னா ரொம்ப இஷ்டம் நீங்க செய்ததை பார்த்தும் இன்னிக்கே செய்துடனும்னு ஆசையா இருக்கு

இப்படிக்கு ராணிநிக்சன்

மஷ்ரூம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஹர்ஷா.அழகா செய்துகாட்டியிருகிங்க,படங்கள் அதை விட அருமை.கட்டாயம் செய்து பார்க்கிறேன்.விருப்பப்பட்டியலில் சேர்த்திருகேன்.வாழ்த்துக்கள்.

எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ்.. அழகா இருக்கு

KEEP SMILING ALWAYS :-)

தெளிவான படங்களுடன் மஷ்ரூம் மட்டர் மசாலா ரிச்சா இருக்கு. வாழ்த்துக்கள்

அழகா இருக்கு பா சாப்பிட தோணுது பார்க்கும் போதே வாழ்த்துகள் கட்டாயம் ட்ரை பண்ணிடுறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரொம்ப நல்லா செய்திருக்கீங்க... எனக்கும் முந்திரி அரைத்து சேர்த்தால் பிடிக்கும். சிக்கன், உருளை, மஷ்ரூம், பனீர் என எல்லாத்துக்கும் நான் இந்த காம்பினேஷன் போடுவேன். ரிச்’அ இருக்கும் பார்க்கவும் சுவையும். சூப்பரா செய்திருக்கிங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவைக் குழுவினருக்கு எனது நன்றிகள்.

நஸீம்,
முதலாவதாக வந்து பதிவிட்டதற்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

ராணி,
நான் பயன்படுத்தியிருப்பது பட்டன் மஷ்ரூம்.நம் ஊரில் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும்.செய்து பாருங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

சுந்தரி,
எனக்கும் மஷ்ரூம்னா ரொம்ப பிடிக்கும்.உங்க பதிவுக்கும்,விருப்பப் பட்டியலில் சேர்த்ததற்கும் மிக்க நன்றி.கண்டிப்பா செய்து பாருங்க.

நாகா,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

வினோஜா,
உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி.

ரேணு,
கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.பதிவுக்கு ரொம்ப நன்றி.

வனிதா,
ஆமாம்.இது பார்ட்டிகளுக்கு ஏற்ற ரெசிப்பி.செய்வதும் ஈஸி.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

அன்பு மஷ்ரூம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் சூப்பரா செய்துருக்கீங்க கண்டிப்பா ட்ரை பன்னுறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா,
தாமதமான பதிவுக்கு சாரி.க்ரேவி ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

-

-