ஆலு பரோட்டா

தேதி: November 10, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

கோதுமை மாவு-கால் கிலோ
உருளை கிழங்கு-கால் கிலோ
கொத்தமல்லி இலை-சிறிது
புதினா-சிறிது
சாட் மசாலா(அ)கரம் மசாலா-1ஸ்பூன்
மிளகாய் தூள்-சிறிது
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு


 

கோதுமை மாவை சிறிது தளர்த்தியாக பிசைந்து வைத்துகொள்ளவும்.

உருளை கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்துவைத்துகொள்ளவும்.

மசித்த கிழங்கில் சாட் மசாலா,கொத்தமல்லி,புதினா,உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.

பிசைந்து வைத்த கோதுமை மாவில் ஒரு உருண்டை அளவுக்கு எடுத்து சிறிது கையால் அழுத்து தட்டி அதன் நடுவில் தயார் செய்துவைத்துள்ள உருளை கிழங்கை வைத்து உருட்டி திக்கான சப்பாத்திகளாக இடவும்

தவாவை காயவைத்து அதில் சப்பாத்திகளை எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்

சுவையான ஆலு பரோட்டா ரெடி


இந்த பரோட்டாவிற்க்கு தொட்டுகொள்ள எதுவும் தேவை இல்லை.மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பரோட்டா நன்றாக உள்ளது

it is easy to prepare and a delicious food to all