குக்கூ நெஸ்ட்

தேதி: November 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (15 votes)

 

உருளைக்கிழங்கு - 2 (Medium Size)
சாம்பார் தூள் (அ) மிளகாய் தூள் + தனியா தூள் - 3/4 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
வெள்ளை (அ) பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
மைதா மாவு - 2 தேக்கரண்டி
கார்ன் மாவு - அரை தேக்கரண்டி
உடைத்த சேமியா - ஒரு கப்


 

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசிக்கவும். இத்துடன் சாம்பார் தூள், கரம் மசாலா, உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.
மாவை நன்றாக சிறிதும் உருளை கெட்டியாக இல்லாமல் பிசைந்து வைக்கவும். பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.
ஒரு கப்பில் கார்ன் மாவு, மைதா மாவு, சிறிது உப்பு சேர்த்து நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
பிசைந்த உருளையை சிறு உருண்டைகளாக உருட்டவும். ஒரு தட்டில் சேமியாவை கொட்டி வைக்கவும்.
ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து மாவு கலவையில் முதலில் போட்டு எடுக்கவும்.
பின் அதை சேமியாவில் பிரட்டி எல்லா பக்கமும் நன்றாக சேமியா ஒட்டும்படி செய்யவும்.
இப்போது உருண்டையின் நடுவே கட்டை விரலால் அழுத்தி விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை ஒவ்வொன்றாக சிவக்க பொரித்து எடுக்கவும்.
இனி தட்டில் அடுக்கி குழியாக இருக்கும் இடத்தில் சில வேக வைத்த பட்டாணியை அதன் மேல் வைத்து அலங்கரிக்கவும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். உருளைக்கிழங்குடன் சிறிது வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்தும் பிசையலாம். பார்ட்டிக்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

விரும்பினால் உருளைக்கிழங்குடன் சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்க்கலாம். பட்டாணி வைத்ததும் மேலே சாட் மசாலா தூவி விடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்கலா இருக்கு வனிக்கா, அப்படியே தத்ரூபமா நெஸ்ட் மாதிரியே இருக்கு. நானே 4ம் திண்ணுட்டேன் ம் ம் தட்டு காலி. டிஸ்ப்ளேவிலே நீங்க தான்னு ஒரு ஹிண்ட் கொடுத்துடுறீங்க.

வனி கலக்குறீங்க நீங்க...எனக்கு உங்க சமையல் குறிப்புகள் எல்லாம் பார்க்கும் போது ரொம்ப ஆர்வமா இருக்கு நானும் பண்ணனும்னு சீக்கிரமே நானும் வந்து எனக்கு தெரிஞ்சத சொல்றேன்...உங்களோட குறிப்புகள் இன்னும் நிறைய எதிர் பார்க்கும் உங்கள் அன்பு தோழி சுபா ராம்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

உண்மையாவே கலக்குரீங்க சூப்பர்ங்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ

இப்படிக்கு ராணிநிக்சன்

வனி குக்கூ நெஸ்ட் சூப்பர். நெஸ்ட் மேல முட்டைமாதிரி பட்டாணி வைச்சு ப்ரசண்ட் பண்ணி இருக்கறது ரொம்பவே அழகா இருக்கு.

அழகோ அழகு இப்டி யோசிக்க உங்களால் மட்டுமே முடியும் என்னால முடிலப்பா அழகா இருக்கு பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு சேமியா கருகிடாத அக்கா பொறிக்கும்போது

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சூப்பரா இருக்கு வனி... புதுசா இருக்கு... எப்படி தான் இப்படிலாம் கண்டுபுடிக்கிறீங்க இதெல்லாம்... செம போங்க...

வித்யா பிரவீன்குமார்... :)

முகப்பில் குறிப்பின் பேரையும்,படத்தையும் பார்க்கும் போதே வனியாகதான் இருக்கணும்னே உள்ளே நுழைந்தேன்.நீங்களே தான் வனி....
மிகவும் அழகான விளக்க படங்களோடு நல்ல குறிப்பை கொடுத்து வழக்கம்போல் அசத்திட்டீங்க போங்க.... ப்ரஸண்டேஷன் மிக அருமையோ அருமை.

பாராட்டுக்கள் வனி.வாழ்த்துக்களும் பல....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சூப்பர் வனி.

‍- இமா க்றிஸ்

Nice one. Want to try it soon.

அமர்க்களமா இருக்கு. எப்படி வனி இப்படியெல்லாம்.....சூப்பர் அப்பு.....

இப்படி உங்களை (வசுவை) சிந்திக்க வைத்த உங்க குழந்தைகளுக்கு ஒரு பெரிய ஓ ஹோ......

//எக் ஹாட்ச் ஆகி எப்போ பர்ட் வரும்? //

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சான்சே இல்ல வனி!எப்படி இப்படியெல்லாம் உங்களால யோசிக்க முடியுது?ரியலி ரியலி சூப்பர்

Eat healthy

சமையல்ல கைவினையா...கலக்குங்க...வாழ்த்துக்கள்...

Creative mind ஆண்டவன் உங்களுக்களித்த வரம் என்றே கருதுகிரேன்.பாராட்டுக்கள். கிபா.

ச்சான்ஸ் சே இல்ல ரொம்ப ஆச்சரியமா இருக்கு எப்படி இப்படி எல்லாம் பன்னுரிங்கன்னு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அக்கா வாழ்த்துக்கள் by Elaya.G

payasam romba nalla irunthathu.aanal alva enakku sariya varala.kandippa kukkoo nest paarkka rombave azhaka irukku vani seithu paaththuddu sollureen.

கலக்கல் வனிதா அக்கா
அப்படியே நெஸ்டு மாதிரியே இருக்கு. ப்ரெஸென்டேஷன் சூப்பர். சாப்பிட தூண்டுது. கட்டாயம் செய்து பார்க்கிறேன்.

ALL IS WELL
GOKILA PREM

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

இந்த குறிப்புக்கு பெயர் உண்மையில் “Birds Nest" தான். சிரியாவில் இருந்த சமயம் இந்தியன் செஃப் ஒருவர் பார்ட்டியில் செய்தது, அதை எனக்கு தெரிந்த வகையில் முயற்சித்திருக்கிறேன். என் மகள் பார்த்துட்டு குக்கூ நெஸ்ட்ன்னு பெயர் வெச்சுட்டா... அதான் அந்த பெயரிலேயே அனுப்பிட்டேன்.

யாழினி... இப்பலாம் முதல் ஆள் நீங்க தான்... ;) மிக்க நன்றி. என்ன ஹிண்ட்??? அந்த ப்ளேட்டா??

சுபா ராம்... மிக்க நன்றி. சீக்கிரம் நீங்களும் வந்து கலந்துகிட்டு கலக்குங்க... வாழ்த்துக்கள் :)

ராணி... மிக்க நன்றி. ரூம் போட்டு யோசிக்கிற அளவுக்கு நேரம் இருந்தா ஏங்க... ;)

வினோ... மிக்க நன்றி. இந்த குறிப்பே பட்டாணி வெச்சா தான் முழுமை அடையும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேணு... ஆரம்பத்துலயே சொல்லிட்டனே... யார் யோசனைன்னு... இப்படி தான் செய்திருக்கனும்னு யூகிச்சது மட்டுமே நான் ;) இது வறுக்காத சேமியா, உள்ளே இருக்கும் எல்லாம் ஏற்கனவே சமைச்சது. வேக ரொம்ப நேரம் ஆகாது. மேல் மாவும், சேமியாவும் வேகும் நேரம் தான். அதுக்குள் சேமியா கருகாது. சிறுந்தீயிலேயே செய்யுங்க. மிக்க நன்றி.

வித்யா... மிக்க நன்றி. செஃப்ஃபுங்க சமையல் எப்பவும் பார்த்தா ரொம்ப பிடிச்சு போகுது ... :) அதான் ட்ரை பண்ணிடறேன்.

அப்சரா... மிக்க நன்றி. ப்ரெசண்டேஷன் அந்த அளவு திருப்தியா அமையல... வெளியே கிளம்பும் அவசரத்தில் கிடைச்சதை வைத்தே செய்தேன். இருந்தாலும் எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னதில் பெரும் மகிழ்ச்சி.

இமா... ரொம்ப நன்றி இமா... நலமா இருக்கீங்களா? :)

கலா... மிக்க நன்றி. விரைவில் செய்து பார்த்து பதிவிடுங்க எப்படி வந்ததுன்னு. :)

லாவண்யா... இது யோசிச்ச விஷயம் இல்லைங்க... பார்ட்டிக்களில் பார்த்தது தான். ////எக் ஹாட்ச் ஆகி எப்போ பர்ட் வரும்? // - முட்டையாவே முழுங்கியாச்சே!!! ;)

ரசியா... நீங்க சொன்னா சரி தான்... மிக்க நன்றி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுமதி... அங்க குறிப்பு அனுப்ப நேரம் போதல... அதான் இங்க ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி.

கிபா... மிக்க நன்றி. நினைச்சது நினைச்சபடி வருவதே அவன் துணையால் தானே ;)

இளையா... மிக்க நன்றி. எப்படி போகுது உங்க மெஹெந்தி டிசைன் எல்லாம்? :)

மாயா... மிக்க நன்றி. அலவா ஏன் சரியா வரல... சொல்லுங்க, சரி பண்ணிடிவோம். மனசு சரி ஆச்சா??? சிரிக்கறீங்களா இப்போ? அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)

கோகிலா... ரொம்ப நன்றிங்க. இப்ப தான் முதல் முறை பேசுறோமா? இனி அடிக்கடி பேசுவோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலக்கலான குறிப்பு சூப்பர் போங்க......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குக்கூ நெஸ்டா. புதுசா இருக்கே. வனிதாக்கா எல்லா பக்கமும் அசத்துறீங்களே. ம் கலக்குங்க கலக்குங்க. இதயும் ஒரு நாள் செஞ்சு பாராட்டு வாங்கிட வேன்டியது தான். வாழ்த்துக்கள். . வாழ்த்துக்கள்.

வனி செம சூப்பரா இருக்குப்பா,என் பசங்க உடனே செய்யனும்ன்னு ஆர்டர் வேர போட்டுட்டாங்க.நாளைக்கு சண்டே செய்து கொடுக்கணும்.வெரைட்டியா யேசித்து குறிப்பு அனுப்பும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

வனி அழகா இருக்கு படமும் குறிப்பும். வாழ்த்துகள் வனி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சுவர்ணா... மிக்க நன்றி :) //சூப்பர் போங்க// - எங்க போக??

நசீம்... செய்து பாராட்டு கிடைச்சுதான்னு எனக்கு மறக்காம சொல்லிப்போடுங்க ;) மிக்க நன்றி.

சுந்தரி... அவங்க ஆர்டர் போட்டுட்டா வேற ஆப்ஷனே இல்லை... செய்து தான் ஆகனும். நல்ல பிள்ளைகள். :) மிக்க நன்றி. செய்துட்டு எப்படி இருந்துதுன்னு சொல்லுங்க.

மஞ்சுளா... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

very very creative work vanitha. very nice.

unga snack.. super attractiva iruku pakkave but i hav one doubt v want to fry that semiya?

கோகிலா... மிக்க நன்றி :)

சத்யா... மிக்க நன்றி. வறுக்காத சேமியா தான். செய்து பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி ரொம்ப அழகா பண்ணிருக்கிங்க... நல்லா வந்துருக்கு கலர்... பட்டாணிதான் ஹைலைட்...நானும் ட்ரை பண்றேன்.. வந்ததானு கண்டிப்பா இங்க சொல்றேன்.. நன்றி உங்க குறிப்புக்கு.. ரொம்ப அருமை..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க... உங்க பின்னூட்டத்துக்காக நான் காத்திருக்கேன். செய்து சூடா இருக்கும்போதே சாப்பிடுங்க. ரொம்ப நேரம் வெச்சுட்டா மொரு மொருப்பு போயிடும். சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர். நேத்து ஈவ்னிங் செஞ்சேன். சூப்பரா வந்தது. சம டேஸ்ட். ரொப தாங்க்ஸ் கா. இவங்களும் இப்ப நல்ல வெரைட்டியா செய்ய கத்துகிட்டியேனு கேட்டாங்க.கெஸ்டும் நல்லா இருந்ததுனு சொன்னாங்க. எல்லா புகழும் உங்களுக்கே. சேமியா ஒன்னு ரெண்டு தான் விழுந்தது. மத்த்த எல்லாம் நல்லா வந்தது. தாங்க் யூ சோ மச் அக்கா. நேத்து பிசியா போயிட்டேன் அதான் நேத்தே பதிவிட முடியல.

செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தா அதை படிச்சதுமே எனக்கு சந்தோஷம் தாங்காது தெரியுமா??? அப்படி ஒரு சந்தோஷத்தை இன்று எனக்கு தந்தது உங்க பதிவு. மிக்க நன்றி நசீம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, இன்று வந்திருந்த விருந்தினருக்கு உங்க குக்கூ நெஸ்ட் செய்தேன். செம ஹிட்... மிக்க நன்றி :)
செய்வதும் எளிமையாக தான் இருக்கிறது... சுவையும் சூப்பர்... நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி. இரண்டு குறிப்பு செய்துட்டீங்களா?? கலக்குங்க. மகிழ்ச்சியா இருக்குங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Supera eruku vani akka. nan romba naal kalichu eppo than vanthen. ulla varum pothe unga kurippu azhaga eruku akka.

உங்க பதிவை படிக்க மிகுந்த மகிழ்ச்சியா இருக்கு :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hai vani akka
cuckoo nest super ah irunthuchu. Enoda husband colleagues ellam veetuku vanthu irunthanga.Naa cuckoo nest seithen superaa irukunu sonnanga. Thank you akka