தக்காளி குருமா

தேதி: July 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வெங்காயம் - 2
தக்காளி - 5
கீறிய பச்சைமிளகாய் - 2
மிளகாய்தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு தேக்கரண்டி
அரைக்க:
துருவிய தேங்காய் - கால் கப்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
சோம்பு - அரை தேக்கரண்டி
பொட்டுக்கடலை - ஒரு மேசைக்கரண்டி


 

அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும், தக்காளியையும் நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பின் தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
பின் அரைத்த விழுது, உப்பு, கரம் மசாலாத்தூள் போட்டு நன்றாக கிளறவும்.
குருமா கெட்டியானவுடன் நெய் விட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்