காரட் பாதாம் பாயசம்

தேதி: November 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (8 votes)

 

பாதாம் - 40
முந்திரி - 25
காரட் - பெரிதாக ஒன்று
சர்க்கரை - ஒரு கப்
பால் - ஒரு லிட்டர்
குங்குமப்பூ - 10 இதழ்கள்
ஏலக்காய் - 8
மேலே அலங்கரிக்க:
பாதாம், முந்திரி, திராட்சை


 

முதலில் பாயசம் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
பாதாம், முந்திரியை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பாலை விட்டு, மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
காரட்டை துருவி சிறிது பாலுடன் சேர்த்து குக்கரில் வேக விடவும். ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைத்து, பாதாம், முந்திரி விழுதும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பாலை 3/4 லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும். அதில் அரைத்த விழுது, சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். இல்லையெனில் அடியில் பிடித்துவிடும்.
பாலும், விழுதும் சேர்ந்து கொண்டதும் இறக்கவும். மேலே குங்குமப்பூ இதழ்களை தூவவும். ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.
குளிர வைத்து கப்புகளில் பரிமாறும்போது, மெல்லிதாகச் சீவிய பாதாம், முந்திரி, மற்றும் காய்ந்த திராட்சை சேர்க்கவும். ரிச்சான இந்த பாயசம் பார்ட்டிகளுக்கு ஏற்றது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாப்பாவும் பாயாசமும் ஸோ..........ஸீவீட்

இப்படிக்கு ராணிநிக்சன்

சத்து நிறைந்த நல்ல ரிச்சான பாயசமா செய்து காண்பிச்சி இருக்கீங்க.அழகா இருக்கா உங்க பேத்தி.

குட்டியும் சூப்பர் பாயசமும் சூப்பர் க்யூட் வாழ்த்துகள் இன்னும் நல்ல சத்தான குறிப்பு குடுங்க காத்திருக்கிறோம் முதல் படமும் கடைசி படமும் சூப்பர்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குட்டி யாரு??? ;) ஸ்வீட்டை ஒரு ஸ்வீட்டே சுமந்து நிக்குதே!!! சோ ச்வீட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரிச்சான பாயசம் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாப்பாவும் அழகா இருக்கு. கையில இருக்க பாயாசமும் அழகா இருக்கு. ஆன்ட்டி எனக்கும் கொஞ்சம் பாப்பாகிட்ட சொல்லி குடுக்க சொல்லுங்களேன். வாழ்த்துக்கள் . மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள் ஆன்ட்டி.

உங்க பதிவை சொல்ல விரும்பினேன் பகுதியில் இப்ப தான் பார்த்தேன்... அங்க போட்ட பதிவை பார்பீங்களோ இல்லையோன்னு தான் இங்கையும் போட்டேன்.. அங்க பாருங்க ப்ளீஸ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் பாபு மற்றும் அறுசுவை குழுவினருக்கு மிக்க நன்றி...

ராணி....பாப்பாவையும், பாயசத்தையும் பாராட்டியதற்கு நன்றி...
வினோஜா....நன்றிம்மா....என் பேத்தி பேரு ப்ரீத்தி...
ரேணு...குட்டி, குறிப்பு, படம் எல்லாவற்றையும் பாராட்டிய உனக்கு நன்றி!!

வனிதா, ஸ்வர்ணா, நசீம்....வாழ்த்துக்களுக்கு நன்றிகள்....
வனிதா.... நான் அங்கு பதிவிட்டபோது நீங்கள் இங்கு பதிவிட்டுள்ளீர்கள்...நமக்குள் என்ன ஒரு ஒற்றுமை!
நசீம்...உனக்காகத்தான் பாப்பா பாயசம் வெச்சிருக்கா...தாராளமா எடுத்து சாப்பிடு!!

ஆஹா என்ன அருமையான பாயாசம் செய்டு காட்டியுள்ளீர்கள்.
நிச்சயம் நல்ல ரிச்சான குழந்தைகளுக்கேற்ற சத்தான பாயாசம்தான்.
அழகான குழந்தை மூலம் எங்களுக்கு இந்த குறிப்பை பறிமாறியிருக்கீங்க.
அதுவே எங்களுக்கு இன்னும் ஸ்வீட்டா ரிச்சா இருக்குல்ல...
பொண்ணு அழகா இருக்கா.நல்ல சிரிப்போடு நிக்குறா....
என் சார்பாக அவளுக்கு முத்தம் கொடுத்துடுங்க ராதா.
அழகான விளக்கப்படங்களுடன்,நல்ல குறிப்பை வழங்கிய உங்களுக்கு எனது பாராட்டுக்களும்,வாழ்ட்துக்களும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்ஸரா....வாழ்த்துக்கு நன்றி....என் பேத்தி ப்ரீத்தி குட்டிக்கு உங்கள் சார்பில் முத்தங்களைக் கொடுத்தாச்சு!! உங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள்தான் என்னை விதம் விதமாக சமையல்களைச் செய்யத் தூண்டுகிறது.....நன்றி...

பாயசம்னா பொதுவாவே எல்லோருக்கும் பிடிக்கும்,அதிலும் பாதாம் முந்திரி கலந்த பாயாசம்னா...........சொல்லவே வேண்டாம்,ரியலி சூப்பரா இருக்கும்,முதல் படம் அருமை,கடைசியில் உங்க பேத்தி ப்ரீத்தி அழகான புன்னகையோடும் கைய்யில் அருமையான பாயாசதோடும் என்னை சாப்பிட வாங்கன்னு கூப்பிடுற மாதிரி இருக்கு.குறிப்புக்கு நன்றி மேடம்.

Eat healthy

மிக்க நன்றி ரஸியா...அதுக்கென்ன...இந்தியா வரப்போ வீட்டுக்கு வாங்க பாயசம் பண்ணி சாப்பாடே போடறேன்...

rராதா அக்கா ரொம்ப அருமை, உங்க பேத்திக்காக்கு வாழ்த்துக்கு ரொம்ப சுட்டி போல. அருசுவையில் நிறைய யங் பாட்டிகள் அதிகம் போல. வாழ்த்துக்கள்.

Jaleelakamal

பாராட்டுக்கு மிக்க நன்றி ஜலீலா....