ஆலு கோபி பால்கறி

தேதி: November 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

காலிஃப்ளவர் - ஒரு பூ
உருளைக்கிழங்கு - 4
பால் - முக்கால் டம்ளர்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
கடுகு - சிறிது
சீரகம் - சிறிது


 

காலிஃப்ளவரை சுத்தப்படுத்தி வெந்நீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதில் உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கிளறி மூடி வைக்கவும்.
ஆலு, கோபி நன்கு வெந்ததும் அதில் மிளகாய் தூள் போட்டு வதக்கி மீண்டும் மூடி வைக்கவும்.
பின்னர் கறியில் பால் ஊற்றி கிளறவும்.
அடுப்பை சிம்மில் வைத்து பால், கறியில் நன்கு கலந்து திக்காகும் வரை கிளறவும்.
அதன் பின் அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி இலை தூவவும்.
சுவையான ஆலு, கோபி பால் கறி ரெடி.

கறியில் பால் ஊற்றிய உடன் கிளறிக் கொண்டே இருக்கவும். அப்பொழுது தான் பால் திரிந்து போகாமல் இருக்கும். இந்த கறி சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுவையான சுலபமான குறிப்பு. நல்லா இருக்கு பார்க்க :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா பண்ணியிருக்கீங்க விருப்ப பட்டியல்ல இருக்கு ட்ரை பண்றேன் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சுந்தரி சூப்பரான குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுந்தரி சூப்பர் குறிப்பு வாழ்த்துக்கள்.பார்க்க அழகா இருக்கு.

என்னோட குறிப்பை வெளியிட்ட அருசுவை குழுவினருக்கு நன்றி.

வனிதா,சுவர்ணா,ரேணு,நசீம் என் குறிப்புக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிபா.கட்டாயம் செய்துபாருங்க.செம டேஸ்டியா இருக்கும்.