சோயா வறுவல்

தேதி: November 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

சோயா உருண்டைகள் - அரை கப்
குடைமிளகாய் - அரை கப் (சிறியதாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)


 

சோயா உருண்டைகளை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற விடவும்.
தண்ணீரை மாற்றி வேறு தண்ணீர் ஊற்றி உருண்டைகளை பிழிந்து எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். குடைமிளகாயையும் சிறிதாக நறுக்கவும்.
நறுக்கி வைத்துள்ள சோயா உருண்டைகளில் உப்பு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், அஜினோமோட்டோ சேர்த்து பிசறி 10 நிமிடங்கள் ஊற விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து ஊறிய சோயாவை போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுக்கவும்.
அதனுடன் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து அதில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை வறுக்கவும்.
சோயா குடைமிளகாய் வறுவல் சுவைக்க தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர். வறுவல் பார்க்கவே சாப்பிட தூண்டுது. வாழ்த்துக்கள்.செஞ்சுபார்த்திட வேண்டியதுதா. இதில் அஜினமோட்டோ சேர்க்காமல் செய்ய முடியுமா?

சூப்பரான குறிப்பு, சூப்பரான கலர்... பார்க்கவே அழகா இருக்குன்னு வறுவல். கண்டிப்பா செய்து பார்க்கிறேன். நல்ல குறிப்பு... வாழ்த்துக்கள் ஆனந்தி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி நசீம் அஜினோமோட்டோ சேர்க்காமல் செய்யலாம்.அதற்க்கு பதில் கசூரிமேதியை சேர்த்தால் வேறுசுவையுடன் இருக்கும்.

நன்றி வனிதா கருத்து தெரிவித்ததற்கு

எனக்கு சோயானா ரொம்ப பிடிக்கும்.. கண்டிப்பா ஒரு முறை செய்து பார்க்கிறேன் .வித்தியாசமான குறிப்பு. :)வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குடை மிளகாயோடு சேர்ந்தால் தனி வாசத்துடன் கூடிய தனி சுவை தான் இல்லையா

வாழ்த்துக்கள் ஆனந்தி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ரம்யா,நன்றி ஆமினா ஒரு முறை செய்து பாருங்கள்.

செய்வதும் எளிது.