ஸ்வீட் கஞ்சி

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாதாம் - 4
பிஸ்தா - 4
அக்ரூட் - 2
ஜாதிக்காய்,மாசிக்காய் சேர்த்துப் பொடித்த பொடி - சிறிதளவு
பால் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்


 

பாலைக் காய்ச்சிக் கொள்ளவும்.
பாதாம், பிஸ்தா, அக்ரூட் மூன்றையும் சர்க்கரை சேர்த்து, கால் கப் சூடான பாலில் ஊறவைக்கவும்.
சிறிது நேரத்தில் ஊறியதும், அவற்றை அரைத்துக்கொள்ளவும்.
இந்த விழுதை, மீதி இருக்கும் பாலில் கலந்து, ஜாதிக்காய், மாசிக்காய் பொடி சேர்த்து குடிக்கலாம்


மேலும் சில குறிப்புகள்