சோயா பக்கோடா

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சோயா உருண்டை - 20
கடலைப் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - சிறிதளவு
மிளகாய்த் தூள் - சிறிதளவு
பிரெட் ஸ்லைஸ் - 3
எலுமிச்சை சாறு - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு


 

சோயா உருண்டை கொதிக்கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடம் கழித்து அதை பிழிந்து, பின் பச்சை தண்ணீரில் அலசி, மிக்சியில் அடித்து உதிர்க்கவும்.
கடலை பருப்பை ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு விழுதை லேசாக வதக்கவும்.
பிறகு, சோயா உருண்டை, கடலைப் பருப்பு, உப்பு, பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, மிக்சியில் அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த கலவையை கிள்ளிப் போட்டால் சூடான பக்கோடா ரெடி.


மேலும் சில குறிப்புகள்