வெஜ் பொடிமாஸ்

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

கடலைமாவு - ஒரு கப்
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
நறுக்கிய பச்சைமிளகாய் - 2
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
சோம்பு -தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு, தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு.


 

கடலைமாவுடன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்.
தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை ஆம்லெட் போல் ஊற்றி இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.
ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், துருவிய இஞ்சி என ஒவ்வொன்றாக சேர்த்து கடைசியில் உதிர்த்த ஆம்லெட்டை சேர்க்கவும்.
பிறகு எலுமிச்சை சாறு, தக்காளி சாஸ் சேர்த்து மல்லித்தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் தேங்காய்துருவல், முந்திரி சேர்க்கலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஈஸி ஹெல்தி குறிப்பு வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மிக்க நன்றி, பண்ணி பாருங்க... :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***