ஜில் ஜில் ஜிகிர்தண்டா

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன்
சைனா கிராஸ் - 4 டேபிள் ஸ்பூன்
ரோஸ் கலர் - 1 டேபிள் ஸ்பூன்
நன்னாரி ஸிரப் - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கிரீம் ஸ்கூப் - 1
பால் கோவா - 2 டேபிள் ஸ்பூன்


 

ஒரு லிட்டர் பாலை, சர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும்.

பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் சில மணி நேரங்கள் வைக்கவும்.

சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை' சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.

குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும்.

இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும்.

பிறகு ரோஸ் ஸிரப், நன்னாரி ஸிரப் ஊற்றவும்.

தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்