"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3"

தோழிகளே,

தோழிகளே முதல் மற்றும் இரண்டாம் இழைகள் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை.சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 4" : http://www.arusuvai.com/tami/node/26265"

கண்டிப்பக நான் பாண்ணுவேன்

எனக்கு டெலிவரி ஆகி 2 வருடம் ஆகிறது.என் பையன் எடை கூடுதல் அதாவது குண்டு அல்ல அவன் உயரம் கூடுதல் ok, மாசமா இருக்கும் போது வயரு ரொம்ப பெரிசா நீண்டு மடங்க தொடங்கிருச்சு அதனாலயும் பிறகு பனி குடம் உடைஞ்சது நாளையும் எனக்கு சிஸ்ஷேரியன் அதனால என் வயரு பொசிஸன் காத்து போன பலூன் மாதிரீ தொய்யலா இருக்கு நானும் எக்ஸஷைஸ் டயட் slim in lift orbitrack எல்லாம் செய்து பார்த்துட்டேன் no use என்னுடைய பழைய அழகான வயரு பெருதற்கு உங்களுடைய ஆலோசனை தேவை

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் :) முதல்ல டாக்டரை பாருங்க. மருந்து அவங்க கொடுப்பது தான் இப்போ சரி. வீட்டு வைத்தியம் அதி இதுலாம் இந்த நிலையில் வேண்டாம்... அவை உடல் சூட்டை அதிகப்படுத்தும். அவை கூடாது. சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா ....இப்போ எனக்கு சரி ஆச்சு .. நாளைக்கு டாக்டர் இடம் போக போகிறேன் ....

ஹாய் கவிதா,

congrats....மருத்துவரை அனுகாமல் மாத்திரை சாப்பிட வேனாம். காய்ச்சலுக்கு மிலகு ரசம் அல்லது கஞ்சி குடிஙல். மாத்திரை வேனாம்...இது எனக்கு தெரின்தது...நான் இப்பொலுது 6 மாத கர்ப்பம்..எனக்கும் காய்சல் வரும் போகும்...ஒன்னும் பயப்பட வேன்டாம்...

எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது.
இன்னும் குழந்தைகள் இல்லை.லாஸ்ட் பீரியட் november 25 ம்திகதி
இந்த மாதம் கடந்த ஒரு வாரமாக அடிவயிற்றின் இடதுபக்கம் வலி இருக்கிறது..
டாக்டர் இடம் காட்டியபோது...பலோப்பியன் குழாயில் கருத்தரித்து தங்கியிருக்கலாம் என்று கூறினார்.pain killer tablets கொடுத்தார். அதிக இரத்தபோக்கு இருந்தால் hospital admid aaka சொன்னார்
இவ்வாறு நிகழ காரணம் தெரிந்தால் கூறுங்கள்...பயமாக இருக்கிறது...

7 மாதங்களுக்கு முன்னரும் எனக்கு இவ்வாறு நடந்தது.நாள் தள்ளிப்போனது.கடும் வலியுடன் இரத்தம் வெளியானது.

தாய்மை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைத்துத் தோழிகளும் விரைவில் தாய்மை அடைய வாழ்த்துக்கள். சகோதரி பாத்திமா ஜஹ்ரா! நீங்கள் விரைவில் ஸ்கேன் பண்ணிப்பார்ப்பது மிகவும் நல்லது. நானும் இப்பிரச்சினையை அனுபவித்து இருக்கிறேன். ஸ்கேன் பார்த்தாலே பிரச்சினை என்ன என்று தெரிந்துவிடும். பயப்படாமல் இருங்கள். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.

ஹலீமா.

அன்புடன்,
ஹலீமா

நாங்கள் குழந்தைக்காக காத்திருக்கிறோம். ரெகுலர் ப்ரியட்ஸ். டாக்டர் பிரியட்ஸ் 2வது நாள் வர சொன்னாங்க. மெடிசின் டானிக் கொடுத்தாங்க. 7வது நாள் பேபி தங்கறதுக்கு ஊசி போட்டாங்க. அப்புறம் 12, 14 வது நாள் ஸ்கேன் எடுக்க சொன்னாங்க. 16வது நாள் ஸ்கேன் பன்னிட்டு சினைமுட்டை வெடிச்சிருக்குன்னு ஸ்கேன் சென்டர்ல சொல்றாங்க.டாக்டர் கிட்ட காட்டினப்ப 16வது நாளில் இருந்து 5 நாள் கான்டாக்ட் வச்சுக்க சொன்னாங்க. கன்சீவ் ஆக நிறைய சான்ஸ் இருக்குன்னு சொன்னாங்க. அடுத்த மாதம் ப்ரியட்ஸ் வரலைன்னா வந்து பார்க்க சொன்னாங்க.

எனக்கு போன மாதம் நவம்பர் 21 ப்ரியட்ஸ் வந்தது. இந்த மாதம் இன்னும் வரவில்லை. எனக்கு எப்போதும் இரண்டு நாட்கள் முன்னதாகவே ப்ரியட்ஸ் வந்துவிடும். (அதாவது oct 23 என்றால் nov 21). விட்டு விட்டு காய்ச்சல் அடிக்கிறது. மார்பகம் சில நேரம் வலிக்கிறது. ஆனால் எனக்கு வேறு எதுவும் அறிகுறி தெரியவில்லை. நான் எப்போ டாக்டர்கிட்ட போக வேண்டும்.

Love is Life Beautiful

தோழிகளே... புதிதாக வந்தவங்க, பழைய மக்கள் யாராக இருந்தாலும் உங்க கர்ப்பம், கருதரிப்பதில் உள்ல பிரெச்சனை இதை பற்றி இந்த ஒரே இழையில் கேளுங்க ப்ளீஸ். தப்பா நினைக்காதீங்க... 1 வாரம முகப்பில் ”pregnancy - ----” இப்படி தாய்மை எதிர்பார்ப்பவர்கள் கேள்விகள் தனி தனி புது இழையா ஏகமா குவிஞ்சிருக்கு. ஒரே இடமா இருந்தா பதில் தர வசதி, ஏற்கனவே இருந்தாலும் உங்களுடைய சந்தேகங்களூக்கு கேட்க்காமலே பதில் கிடைக்கும், புது சந்தேகமா இருந்தாலும் இங்க பதிவு செய்தா எல்லாரும் பார்ப்பாங்க. இதெல்லாத்துக்கும் மேல முகப்பில் ஒரே விதமான கேள்விக்கு 10 தலைப்பு இருக்காது.

உங்களுக்கு உதவ தான் இங்க தோழிகள் எல்லாரும் விரும்பறாங்க, அதே சமயம் நீங்களும் எங்களுக்கு கொஞ்சம் உதவனும்....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

parlodel tablet தோழிகள் உதவவும். நான் இந்த டேப்லட் போட்டுட்டு இருக்கென். பீரியட் ஆன 7 நாளில் இருந்து 4 நாட்கள் 1/2 டேப்லட் போட சொன்னாங்க. பிறகு 1 மாத்திரை 24 நாட்கள் போட சொன்னாங்க. அப்படினா பீரியட் வர டேஸ் வரை இந்த மாத்திரை போட வேண்டுமா? இன்னையோட 31 நாட்கள் ஆக்து. பீரியட் வரல. ஆனா இன்னைக்கு நைட்டும் இந்த டேப்லட் போடணுமா? கால் வலி , இடுப்பு வலி அதிகமா இருக்கு? இதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க? ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்