"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3"

தோழிகளே,

தோழிகளே முதல் மற்றும் இரண்டாம் இழைகள் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை.சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 4" : http://www.arusuvai.com/tami/node/26265"

வணக்கம். நீங்க தேவையில்லாத மனக்குழப்பத்தில் இருக்கீங்க. Folic Acid tablet எடுக்கறதால எந்த பிரச்சனையும் இல்லை. சந்தோஷமா இருங்க முதல்ல. கவலை படற அளவுக்கு காலம் கடந்து போயிடலை. Ovulation time la இடுப்பு வலி இருக்கறது சகஜம்தான். குழந்தையை மனதில் வைத்து எல்லாவற்றையும் செய்ய வேண்டியதில்லை. ஓரு வருடம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருக்க முயலுங்கள். ஒரு வருடத்திற்கு பிறகு டாக்டரிடம் செல்வது பற்றி யோசியுங்கள். அவசரப்பட தேவையில்லை. முடிந்தவரை ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். உடல் எடை அதிகமாகாமல் கவனமாக இருங்கள். நல்லதே நடக்கும்.

வாழ்த்துக்கள். நானும் போன மாதம் இந்தியா போயி laprescopy பண்ணிட்டு வந்தோம்.போன மாதம் periods முடிந்து 5 daysku அப்புறம் பண்ணினோம்.இந்த மாதம் டாக்டர் periods வரும்னு சொன்னாங்க ஆனா இன்னும் வரல.உங்களுக்கு periods correct datela வந்துதா.அதுக்கு அப்புறம் எத்தனை மாதம் tablet சாப்பிட்ங்க.எனக்கும் periods வந்ததுக்கு அப்புறம் tablet குடுத்தாங்க.ஆனா periods இன்னும் வரல.

வணக்கம் தோழிகளே... என் சந்தேகங்களை தெரிந்தவர்கள் தீர்த்து வையுங்கள். கடந்த டிசம்பரில் ஒரு அபார்ஷன் ஆகி விட்டது. அதை தொடர்ந்து 6 மாதங்களில் கர்ப்பமாக வில்லை. தற்பொழுது மருத்துவமனை சென்று சோதித்தோம். siphene டேப்லெட் 5 எடுத்து கொள்ள சொன்னார்கள். அதை தொடர்ந்து தற்பொழுது hmg என்ற injection 3 போட்டுக்க சொல்றாங்க... எனக்கு என்ன செய்யுறது என்றே புரியவில்லை. மிகவும் மன உளைச்சலில் உள்ளேன்.. இதனால் ஏதும் பாதிப்பு வருமோ என்று கவலையாக உள்ளது

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

thanks akka ..vetula ellam ketu torchal panranga...adhan i ask....my doubt is folic tab use pani regular ah period varuma or supposed pregnant(baby form agum ma)

வாழ்த்துக்கு நன்றி தோழி ,கவலை படாதிங்க லேப்ரோஸ்கோபி பண்ண மாதம் periods வர கொஞ்சம் லேட் ஆகும் தான் ,ஏனெனில் நமக்கு ஆபரேஷன் செய்த போதே கொஞ்சம் ப்லீடிங் ஆகி இருக்கும் ,எனக்கு due டேட் ல இருந்து 8 நாள் கழிச்சு தான் வந்தது ,அதுவும் இரண்டு நாள் தான் போக்கு இருந்தது .அடுத்த மாதம் ரொம்ப எதிர்பார்த்தோம் ,ஆனால் அப்போது சரியாக மாதவிலக்காகி விட்டேன் ,இதோ இந்த மாதம் அந்த ஆண்டவன் கருணையால் நல்ல பதில் கிடைத்திருக்கிறது ,நீங்களும் விரைவில் தாயாக வாழ்த்துக்கள் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

தோழி கார்த்திகா முதலில் கவலையை விடுங்கள் ,எல்லாம் நல்ல படியாக நடக்கும் ,ஒரு சிலருக்கு கருமுட்டை சரியாக rupture ஆகாது எனவே இன்ஜெக்ஷன் போட சொல்லி இருப்பாங்க ,மற்ற படி ஒன்றும் இருக்காது ,மேலும் siphene டேப்லெட் என்பது ஒரு வகையான clomofine tablet தான் ,நானும் சென்ற மாதம் இந்த மாத்திரை தான் எடுத்தேன் ,அது கருமுட்டை உருவாக தருவார்கள் ,நீங்கள் வீணாக மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் ,ரிலாக்ஸ் ஆக இருங்கள் ,நல்லது நடக்கும் ,ஏற்கனவே எதனால் அபார்ஷன் ஆகியது ,சொல்ல விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்,முக்கியமாக கவலை படாதீர்கள் ,அதான் உங்களுக்கும் உருவாகும் குழந்தைக்கும் நல்லது ,

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நன்றி தங்கள் பதிலுக்கு ... அபார்ஷன் இதய துடிப்பு வராததலா பண்ண சொன்னாங்க.. INTERNAL SONOGRAPHY TEST பண்றதால எதுவும் ப்ராப்ளம் வருமா.

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

INTERNAL SONOGRAPHY TEST அப்படினா follicular ஸ்கேன் தானே பா ,அது ஒன்றும் பயமில்லை ,அது செய்தால் தான் கருமுட்டை வரும் நாள் மற்றும் கருமுட்டை அளவை மருத்துவரால் கூற முடியும் ,எந்த காரணத்தால் மீண்டும் குழந்தை தங்கவில்லை என மருத்துவர் கூறினார்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

hi bharthi akka...my hearty congrats...Insha allah......unga baby nengalum...nalla vara allah alws with u

bharthi akka...enna symptoms ungaluku trherichudhu...which date la irundhu?

மேலும் சில பதிவுகள்