ஆரஞ்சுத் தோல் துவையல்

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோல் - கைப்பிடி அளவு,
இஞ்சி - சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் - 1,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய்
உப்பு .


 

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் ஆரஞ்சுதோலை நன்கு வதக்கவும்.

அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுந்தை வறுக்கவும்.

வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

hai naga intha orange thozhil seyya kuudiya thuvaiyal kasappaa irukkaathaa? ungalin viththiyaasamana kurippukku enathu vazhththukkal.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி சங்கீதா ஜோஸ். நல்லா வதக்கினால் கொஞ்சம்கூட கசப்பு தெரியாது. செய்துட்டு சொல்லுங்க :-)

KEEP SMILING ALWAYS :-)

வாழ்த்துகள் வித்யாசமான குறிப்பு கசக்குமா இது இஞ்சி போடறதால கசப்பு தெரியாதா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நன்றி ரேணு. வதக்கி சேர்க்கறதால கசக்காது. செய்துட்டு சொல்லுங்க :-)

KEEP SMILING ALWAYS :-)

மதியம் அரைத்தேன். சுவை வித்தியாசமாக இருந்தது.

‍- இமா க்றிஸ்