செட்டிநாட்டு பணியாரம்

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

பச்சரிசி - 4 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
பால் - கால் கப்
உப்பு - தேவையான அளவு


 

அரிசியையும், உளுந்தினையும் சுமார் 3 மணி நேரம் ஊறவிடுங்கள்.

அதன் பிறகு நீரை வடித்து, இரண்டையும் சேர்த்து மாவாய் அரைத்துக் கொள்ளுங்கள். மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும்.

இத்துடன் பால், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கிக் கொள்ளுங்கள்.

சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் மாவு எடுத்து பணியாரமாக ஊற்றுங்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுகன் இந்த பணியாரம் அப்பவே அரைத்து உடனே ஊற்றி விடலாமா? இல்ல புளிக்கனுமாப்பா? ப்ரண்ட் வீட்டில் ஒரு விசேஷம் வருது அவ நைட் டின்னருக்கு மெனு கேட்டா அதான் இத சொல்லலாமேன்னு கேட்கறேன் முடியும் வந்து சொல்லுப்பா