சில்லி பரோட்டா

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மைதா - 1 கப்
பெரிய வெங்காயம் - 1,
குட மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்
சிவப்பு கலர் கேசர் பவுடர் - தேவையான அளவு.
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன் ,
எண்ணெய் - 2 ஸ்பூன் ,
சர்க்கரை - 1 ஸ்பூன் ,
உப்பு - தேவையான அளவு.


 

வெங்காயம், குட மிளகாயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ரொம்ப மெலிதாக இல்லாமல் சப்பாத்திகளாக தேய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும்.

தோசைக்கல்லை காய வைத்து, சப்பாத்திகளை சிவக்காமல், இருபுறமும் வெள்ளையாக இருப்பது போல் சுட்டு எடுக்கவும்.

சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, தண்ணீர் தெளித்து, இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சில்லி பரோட்டா இதுவரை சாப்பிட்டது இல்லை. வித்தியாசமான குறிப்பு வாழ்த்துகள்ம்மா.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இது வீட்டிலேயே செய்ய கூடிய ஈஸி முறை, கண்டிப்பா பண்ணி பாருங்க!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உங்கலின் சில்லி பரோட்டா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிகவும் சுலபமான முறையில் உங்களின் குரிப்பு இருக்கு அடுத்த முறை முடிந்தால் படத்துடன் போடுங்கள்.இன்னும் பல குறிப்புக்கள் தர வழ்த்துக்கள்.சில்லி பரோட்டா செய்த பின் எப்படி இருந்தது என்று சொல்கிறேன் நன்றி suganthi