பனீர் பராத்தா

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (7 votes)

 

கோதுமை மாவு - 2 கப்
பனீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
சீரகம் - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
காரப்பொடி - 2 தேக்கரண்டி
கரம்மசாலா - 1 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

முதலில் மேற் சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கோதுமை மாவை எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் கெட்டியாக பிசைந்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பனீரை காரட் துருவியில் துருவவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதில் மஞ்சள் பொடி, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். அதில் துருவிய பனீர், தேவையான உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை எலுமிச்சை அளவு எடுத்து, அதை ஒரு சிறிய பூரி அளவு இட்டு, அதில் பனீர் பூரணம் வைத்து கனமான பராத்தாகளாக இடவும். தவாவில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் பராத்தாவைப் போடவும்.
வெந்ததும் திருப்பிப் போட்டு மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விடவும். நன்கு வெந்ததும் எடுக்கவும்.
மேலே சிறிது வெண்ணெய் தடவி ஊறுகாய், தயிருடன் பரிமாறவும். பராத்தாக்களுக்கு ரைத்தாவை விட வெறும் தயிர்தான் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அழகா பண்ணி காட்டி இருக்கீங்க, நான் பனீர் க்கு பதிலா காளிபிளவர் வைத்து பண்ணுவேன். வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஆன்ட்டி கலக்குங்க டிப்ரண்ட் குறிப்பு ம் ஜமாய்ங்க வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பாக்கும் போதே சாப்பிட தூண்டிவிடுது

நல்ல குறிப்பு

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குறிப்பை வெளியிட்ட திரு பாபு மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றி...

சுகந்தி....பாராட்டுக்கு நன்றி....பனீருக்கு பதிலாக காலிஃப்ளவர் சேர்த்து செய்யலாம்....அதற்கு வெங்காயம் சேர்க்கத் தேவையில்லை...

ரேணு....எல்லா குறிப்புகளுக்கும் முதலில் பதிவு போட்டு வாழ்த்தி என்னை உற்சாகமூட்டும் உனக்கு நன்றி....

அமீனா....தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி....

நானும் இது போல் செய்வதுண்டு. நல்லா செய்து காட்டி இருக்கீங்க. பார்க்க அழகா இருக்கு லாஸ்ட் போட்டோ. வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆன்ட்டி சூப்பர் குறிப்பு. பார்க்கவே அழகா இருக்கு. போட்டோஸ் எல்லாம் சூப்பர். வாழ்த்துக்கள்.மேலும் இது போல்பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

ராதாம்மா சூப்பர் ரெஸிப்பி பார்க்க பார்க்க ஆசையா இருக்கு அதுவும் கடைசி படத்துல சூப்பர்ப். வாழ்த்துக்கள்மா இன்னும் நிறைய குறிப்பு கொடுக்க.

அருமையான பார்ட்டி டிஷ்.. பார்க்கவே நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள். நான் உங்களின் தேங்காய் பர்ஃபி செய்தேன்.. ரொம்ப நல்லா வந்தது.. நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பார்க்கவே சாப்பிடதூண்டுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனிதா, நசீம், முகில்.....வாழ்த்துக்கு நன்றிகள்....

ரம்யா....தேங்காய் பர்ஃபி செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி...நீ சொன்னதுபோல இது பார்ட்டிக்கு செய்தால் நன்றாக இருக்கும்....

ஸ்வர்ணா.....பாராட்டுக்கு நன்றி.....

எல்லோருக்குமே கடைசி ஃபோட்டோ பிடித்திருக்கிறது போல!!.....நன்றி தோழிகளே..