paint colour

எங்களுக்கு புதிதாக கட்டப்பட்டிருக்கும் வீட்டீற்கு வெளி புற சுவரின் நிறம் மற்றும் உள் புற சுவருக்கு எந்த (paint colour)நிறம் அழகாய் இருக்கும்னு சொல்லுங்கப்பா.share with me pls friends

please reply

hai friends யாரும் என் கேள்வியைப் பாக்கலையா? உங்களின் அவிப்பிராயத்தை எனக்கு சொல்லுங்கப்பா please

உங்க வீடு எந்த ஸ்டைலில் என்று தெரியவில்லை..நிறத்தை பொறுத்தவரை எல்லா நிறத்துக்கும் அதற்கே உரிய அழகுண்டு தான் ஆனால் அதனை எந்த ஸ்டைல் வீட்டுக்கு எந்த காம்பினேஷன் நிறத்தோடு செய்கிறோம் என்பதை எல்லாம் பார்க்கணும்..ஜன்னலில் ஃப்ரேம் நிறம் கூட இதனை சூஸ் பண்ண முக்கியம்..நல்ல கலர் சென்ஸ் உள்ள யாரிடமாவது அபிப்ராயம் கேளுங்க..காம்டெம்பரரி வீடு என்றால் பல கலர் கூட யூஸ் பண்ணலாம்..சாம்பல் நிறத்தோடு மஞ்சள் கறுப்பு ப்ரவுன் என பல கலரில் செய்தாலும் அழகாக இருக்கும்.அதற்கு தகுந்த கேட் கலரும் இருக்க வேண்டும்.வீட்டுக்குள்ளும் மொத்தமாக ஒன்றை அடிக்காமல் இருக்கலாம்...அப்படியே கலர் கொடுத்தால் அறை இருண்டு போகாத மாதிரி கலர் சூஸ் பண்ணலாம்..அல்லது ஒரு பக்க சுவர் நிறத்தை மட்டும் மாற்றலாம்..bedroomil படுக்கைக்கு பின்புற சுவற்றில் ஒரு நிறமும் மற்ற சுவற்றில் வேறு கலரோ அல்லது மென்மையான களறொ பயன்படுத்தலாம்.
எப்பவும் பளிச்சென்று லேசான மனத்தோடு இருக்கணுமா?மொத்தமாக வெள்ளை உபயோகிங்க ரொம்ப அழகாக இருக்கும்

எனக்கு பிடுச்ச கலர் லைட் ரொஸ்,வெள்ளை. ஆனா எங்க வீட்டில் மார்புல் லைட் க்ரீன் அதுக்கு எது colour கரெக்ட்டா இருக்கும்னு தெரியலப்பா அருசுவையில் நிரைய தொழிகள் இருக்காங்கல்ல அவுங்க நிரைய கமென்ட் தருவாங்கனுதான் கேட்டேன் உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி தாளிகா

மேலும் சில பதிவுகள்