பாகற்காய் பொரியல்

தேதி: November 17, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (7 votes)

 

பாவற்காய் - அரைக் கிலோ
வெங்காயம் - அரைக் கிலோ
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைபருப்பு
கறிவேப்பிலை
வரவிளகாய் - 7
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை


 

பாகற்காயில் மேல் மற்றும் கீழ் காம்புகளை நீக்கவும்.
நீரில் சுத்தம் செய்த உடனேயே உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
சிறிது நிமிட இடைவெளியில் மூடி வைத்தபடியே குலுக்கி விடவும். காய் நன்கு சுருண்டதும் நீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தப் பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் பாகற்காய் சேர்த்து சுருள சுருள வதக்கவும்.
சுவையான வெங்காய பாகற்காய் பொரியல் தயார்.

குக்கரில் காயை அவிக்க கூடாது. எப்பவும் போடும் அளவை விட சற்று கூடுதலாக உப்பு சேர்க்கவும். காயை அலசி நீரை அகற்றிய பிறகும் அதில் ஒட்டியுள்ள ஈரப்பதத்துடன் உப்பும் சேர்ந்து நீர் விட்டுவிடும். ஆகையால் நீர் தனியாக சேர்க்க வேண்டாம். சின்ன வெங்காயம் சுவையை கூட்டும். காயின் அளவுக்கு ஏற்ப வெங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயத்தின் சுவையுடன் சேருவதால் பாகற்காயின் கசப்பு தன்மை தெரியாது. கசப்பென்றால் அடம்பிடிக்கும் சிறுவர்களும் இம்முறையில் செய்தால் விரும்புவர். சாம்பார், ரசம், புளிக்குழம்பு வகைகள் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையான பொரியல்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அழகா இருக்கு ஆமி. இருந்தாலும் பாவற்க்க்காயக்கும் முன் ஜென்ம பகை இருக்கு போல :-(
விளக்கமா, தெளிவா சொல்லி இருக்கீங்க. கலக்குங்க ஆமி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அந்த குட்டி குட்டி பாகற்காய் பார்க்கவே அழகு. கேமரா மாற்றியாச்சோ?? படங்கள் அழகா வருதே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆம்ஸ் எங்கேயிருந்து பிடிச்சீங்க ( பறீச்சீங்க ) இந்த தக்னூண்டு பாவக்காய பாக்கவே அழகா இருக்கு. குறிப்பும் செமையா இருக்கு;)

சுகி: ஹா ஹா பாவற்காய்க்கும் முன் ஜென்ம பகையா ஹா ஹ இருக்கும்போலதான் தெரியுது;) சரியான வாலு நீங்க;))

Don't Worry Be Happy.

ஆமினாக்கா குட்டி பாகற்காய் பார்க்கவே சூப்பர். படங்கள் அருமை. பார்க்கவெ சாப்பிட தூண்டுது. வாழ்த்துக்கள். இதை பெரிய பாகற்காயிலும் செய்யலாமா? .

பாகற்காய் பாக்கவே செம க்யூட் என்னவருக்கு பாகற்காய்னா ரொம்ப பிடிக்கும் ஆனா நான் செய்யும் முறையில் பாகற்காய் நல்ல கசப்பா தான் வரும் வேறு வழியில்லாமல் அவரும் சாப்பிடுவார் இம்முறையில் செய்து விட்டு பதில் போடுகிறேன் வழ்த்துக்கள்

ஆமினா அக்கா நல்ல குறிப்பு வாழ்த்துக்கள். படங்கள் நல்லா இருக்கு

அக்காஸ் இது பாவக்காய் இல்ல பளுவக்காய் எங்க ஊரு பக்கம் நெறையா கிடைக்கும்.காட்டுல பறிச்சுட்டு வந்து தருவாங்க நெறைய பேரு.ஆமினா அக்கா நா சொன்னது சரியா? இதுக்கு மேல பெருக்காது இந்த காய் ,ஆனா உடம்புக்கு ரொம்ப நல்லது by Elaya.G

//அழகா இருக்கு ஆமி. இருந்தாலும் பாவற்க்க்காயக்கும் முன் ஜென்ம பகை இருக்கு போல :-(
விளக்கமா, தெளிவா சொல்லி இருக்கீங்க. கலக்குங்க ஆமி//

ஹி...ஹி....ஹி....
மருந்து மாத்திரைக்கும் கூடவா ;-)

வருகைக்கு நன்றி சுகி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமாம் அக்கா. கெனான் க்கு மாறிட்டேன். இருந்தாலும் குளீர் நேரத்துல சில போட்டோக்கள் சொதப்புது. போன கேரட் சாதம் பதிவு போல :-(

வருகைக்கு நன்றி அக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எங்க ஊர் சந்தையிலும் மார்க்கெட்லும் செம சக்க போடு போடும் ஐட்டம் இது :-) கால் படி 15 ரூபாய்ன்னு விக்கிறாங்க. கூடையை இறக்கியதும் 1/2 மணி நேரத்தில் வியாபாரம் முடிஞ்சுடும் :-)

வருகைக்கு நன்றி ஜெயா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தாராளமா பெரிய பாவற்காயிலும் செய்யலாம். கசப்பு தான் கொஞ்சம் கூட்டி காமிக்கும்.... இன்னும் கொஞ்சம் கூட சின்ன வெங்காயம் போட்டு சரி பண்ணிடுங்க ;-)

வருகைக்கு நன்றி நசீம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கும் முன்பு பாகற்காய் என்றால் பிடிக்காது. பாட்டி வீட்டில் பாட்டியின் கைமணத்தில் இதை சாப்பிட்ட பிறகு என் பேவரைட் ஆய்டுச்சு. மார்க்கெட் போனா முதலில் தேடுவது பொடி பாவற்காய் தான். கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க சங்கீதா :-)

வருகைக்கு நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இல்ல இளையா. நீங்க சொல்வதும் பாவற்காய் குடும்பத்தை சார்ந்த காய் தான். ஆனால் எங்கள் ஊரில் அது விற்கப்படுவதில்லை. திண்டுக்கலில் கைமா உடன் சேர்த்து சமைப்போம் அதை. இது பாவற்காய் தான். போட்டோக்களில் வழுவழுப்பான காய் போல் தெரிவதால் பளுவக்காய் போல் உள்ளதாக தெரிகிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அது தான் இல்லையா ( பாவற்காய் மேல் முதலையின் முதுகு பகுதி போல் இருக்கும். பளுவக்காயில் வழுவழுப்பாக இருக்கும்)

வருகைக்கு நன்றி இளையா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Romba nalla pesureenga Ameena..
Enakku oru friend irukkanga Ameena nu Avungalai Gnabaga paduthittenga...
Enakku than avunga engae irukkanga nu theriyalai :-)

Suja

பாகற்காய்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் ஸ்பெஷலா அந்த குட்டி குட்டி காய்.. நல்ல சுவையான ஆரோக்கியமான குறிப்பு.. சாதத்திற்கு நல்லா இருக்கும். வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனக்கும் மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று பாகற்காய். அதுவும் இந்த சின்ன பாகற்காய் பார்க்கவே அழகு. ஊர் ஞாபகம் ரொம்ப வந்து விட்டது. குறிப்பு நல்லாயிருக்கு. கண்டிப்பாக (பெரிய பாகற்காயில்) செய்து பின்னூட்டம் தருகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சிறிய பாகற்காயில் கசப்பு அதிகம் இருக்காது. அதனுடன் சிறிய வெங்காயத்தையும் சேர்த்து செய்து இருக்கிறீர்கள். நன்றாக இருக்கும் நானும் செய்து பார்க்கிறேன்

சாரி அக்கா எனக்கு பார்க்க பளுவக்காய் மாதிரி இருக்கவும் சொல்லிட்டேன் மன்னிக்கவும். நா குட்டி பாவக்காய் பார்த்ததில்லை அக்கா .நா கிடைச்ச செய்து பார்கிறேன் பதில் தெளிவு தந்தற்கு நன்றி by Elaya.G

//Romba nalla pesureenga Ameena..//
இல்லைன்னா யாரும் மதிக்கமாட்டாங்கன்னு ஒரு பயம் தான் ஹி..ஹி..ஹி..

உங்க தோழி பேரும் ஆமினா தானா ...

அடிக்கடி அறுசுவைக்கு வாங்க

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரம்யா

கசப்பின் அருமை புரிஞ்சவங்களுக்கெல்லாம் பிடிச்சுருக்கும் இல்லையா ;-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரம்ஸ்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி லாவண்யா

உங்க பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன் ;-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி ஆனந்தி

செய்து பார்த்துச்சு சொல்லுங்க :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இதுக்கெல்லாம் சாரியா :-(

சந்தேகம் தானே இளையா... சரி செய்து பார்த்துட்டு சொல்லுங்க ஓக்கேவா

நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் பூனாவில் இருந்தப்போ இந்த குட்டி பாவக்காய் கிடைக்கும் நாலா கீரி ஸ்டப்ட் பொரியல் பண்ணுவேன். இதுபோல பண்ணினதில்லே. இங்க மும்பையில் குட்டி பாவக்கா கண்லயே காண மாட்டேங்குது. பெரியபாவக்காயில் செய்து பார்க்கனும்.

சூப்பர் ரெசிபி!

செய்தாயிற்று, சாப்பிட்டும் பார்த்துட்டேன்....சூப்பர். நன்றாக இருந்தது.

பி. கு. உங்களின் ஸ்மைலி தான் என்னை இவ்வளவு சீக்கிரம் செய்து பின்னூட்டமும் கொடுக்க வைத்தது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆமா கோமு.... நா அங்கே இருக்கும் போதும் இதே தான். நா ஸ்டெப்பிங் பண்ணி மட்டும் தான் செய்வேன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிதிபாகற்காய்--> நியாபகம்படுத்தியதற்கு நன்றி லதா. நா பொடிபாவக்காய்ன்னே கூப்டு பழகிட்டேன் :-)

வருகைக்கு நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

செய்தாச்சா? ரொம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷம் லாவண்யா

//பி. கு. உங்களின் ஸ்மைலி தான் என்னை இவ்வளவு சீக்கிரம் செய்து பின்னூட்டமும் கொடுக்க வைத்தது.//
மாட்டிக்கிட்டீங்க... இனி உங்க கமெண்ட்க்கெல்லாம் ஸ்மைலிய போட்டுட வேண்டியது தான். ஹா....ஹா...ஹா....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா