சீயம்

தேதி: July 4, 2006

பரிமாறும் அளவு: 15 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - மூன்று ஆழாக்கு
உளுந்து - இரண்டு ஆழாக்கு
உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - அரை லிட்டர்
பூரணத்திற்கு:
கடலைப்பருப்பு - கால் கிலோ
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் - ஐந்து
நெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்


 

பச்சரிசி, உளுந்தினை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விட்டு கடலைப்பருப்பை போட்டு மூடி வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து பருப்பில் உள்ள நீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு குருணைப்பதத்திற்கு அரைக்கவும்.
அரிசி, உளுந்தை உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும். வெல்லத்தை பொடியாக்கி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
ஏலக்காயை தோலுரித்து பொடிக்கவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி அரைத்த கடலைப்பருப்பு விழுது போட்டு இரண்டு நிமிடம் வதக்கி பாகு, ஏலப்பொடி சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.
கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உருண்டைகளாக உருட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை அரைத்து வைத்துள்ள அரிசிமாவு கலவையில் முக்கி எடுத்துப் போடவும்.
பொன்னிறமானதும் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் தாளில் சுற்றி தட்டில் அடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுசியன் (சுழியன்) என்பதும் சீயம் என்பதும் தயாரிப்பில் ஒன்று போல் உள்ளதே. இரண்டும் ஒன்றுதானா? எந்த ஊர் பலகாரம் இது?

எல்லா ஊர்களிலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப் படுவதுதான்.... சீயம் செட்டிநாட்டில் நகரத்தார்களால் மிகவும் சுவையாக தயாரிக்கப் படுவது.....ஒரு முறை அரைக்கும் மாவிலேயே இனிப்பு, காரம் (மசாலா சீயம்) என்ற இரண்டு சுவைகளில் செய்து அசத்துவார்கள்....
பொதுவாக நான் குறிப்புப் போடும் முன் அந்த உணவுப் பொருளின் குறிப்பு ஏற்கனவே உள்ளதா? என்று பார்ப்பேன்... அப்படியே இருந்தாலும் என் முறையிலிருந்து வித்தியாசப் படுகிறதா என்று பார்த்துதான் போடுவேன்.... ஒரே பொருளுக்கு பல செய்முறைகளை தெரிந்து கொள்வதும் நல்லதே என்ற எண்ணத்தில்....எனினும் கேள்விக்கணை தொடுத்ததிற்கு நன்றி திரு. சேகர் அவர்களே.....

Vazhga Tamil!!!

உடனே பதில் அளித்து விட்டீர்கள். மிக்க நன்றி. ஏற்கனவே வெளிவந்த குறிப்பை நீங்கள் கொடுத்து இருப்பதாக நான் குறை சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் எழுதியிருந்தால் மன்னிக்கவும். நோக்கம் அதுவல்ல. சீயம் என்ற பெயரை நான் கேள்விப்பட்டது இல்லை. குறிப்பை பார்த்த போது எங்கள் ஊர் சுழியன் போல் இருந்தது. அதனால்தான் அந்த சந்தேகத்தை கேட்டேன். இப்போதுதான் உங்கள் குறிப்புகள் நிறையப் பார்த்தேன். பெரும்பாலும் செட்டிநாடு என்று இருந்தது. சீயமும் செட்டிநாடுதான் என்று நான் முடிவு செய்த நேரத்தில் நீங்கள் பதில் சொல்லிவிட்டீர்கள்.