கேப்ஸிகம் ஃப்ரைட் ரைஸ்

image

வழங்கியவர் : NAGA RAM

தேதி : Sat, 19/11/2011 - 11:44

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

4.333335
3 votes
Your rating: None
 

 

  • அரிசி - 1 கப்
  • கேப்ஸிகம் - 1
  • பச்சை மிளகாய் - 2
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • உளுந்து - 1/2 தேக்கரண்டி
  • நிலக்கடலை - 15
  • கறிவேப்பிலை- 1 ஆர்க்
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • கொத்தமல்லி - 1 ஸ்பூன்
  • துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
  • சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  • எண்ணெய்
  • உப்பு

 

  • ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி உதிராக வடிக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளிக்கவும்.
  • பின்னர் நிலக்கடலை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்க்கவும்.
  • நிலக்கடலை நிறம் மாறியதும், குடைமிளகாய், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் வடித்த சாதம், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, துருவிய தேங்காய் சேர்த்துகலந்து பரிமாறவும்.