வெங்காய புளி மண்டி

image

வழங்கியவர் : திருமதி. சித்ரா செல்லதுரை, குவைத்

தேதி : செவ்வாய், 04/07/2006 - 13:38

ஆயத்த நேரம் : பத்து நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : இருபது நிமிடங்கள்

பரிமாறும் அளவு : ஆறு நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • சி. வெங்காயம் - நூறு கிராம்
  • புளி - ஒரு பெரிய எலுமிச்சையளவு
  • மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
  • வர மிளகாய் - முன்று
  • ப. மிளகாய் - மூன்று
  • பெருங்காயத் தூள் - அரை டீ ஸ்பூன்
  • உப்பு - ஒரு டீ ஸ்பூன்
  • எண்ணை - இரண்டு டேபிள் ஸ்பூன்
  • கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் - அரை டீ ஸ்பூன்
  • சோம்பு - அரை டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை - இரண்டு கொத்து
  • கெட்டியான அரிசி கழுவிய நீர் - முன்னூறு மி.லி

 

  • முதலில் புளியை அரிசி கழுவிய நீரில் ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
  • சி. வெங்காயம், ப. மிளகாயை குறுக்கில் இரண்டாக நறுக்கவும்.
  • வரமிளகாயை கிள்ளி வைக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி வரமிளகாய், கடுகு & உளுந்து, வெந்தயம், சோம்பு போட்டு வெடித்ததும் பெருங்காயம் போடவும்.
  • இரண்டு நிமிடம் கழித்து வெங்காயம், ப. மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
  • நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி பத்து நிமிடம் நன்கு கொதித்ததும் இறக்கவும்.

Note:

ஒரு நாளில் அரிசி கழுவிய நீர் கிடைக்கவில்லையென்றால் இரண்டு, மூன்று நாட்கள் அரிசியைக் கழுவும்போது கிடைக்கும் நீரை ப்ரிட்ஜில் சேமித்து உபயோகிக்கலாம். மேலே உள்ள நீரை வடித்து விட்டு கீழே தங்கும் மண்டி நீரில் புளியைக் கரைத்து செய்தால் மிக சுவையாக இருக்கும்.