வெங்காய புளி மண்டி

வழங்கியவர் : CHITHRA DURAI
தேதி : செவ்வாய், 04/07/2006 - 13:38
ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு
- சின்ன வெங்காயம் - நூறு கிராம்
- புளி - ஒரு பெரிய எலுமிச்சையளவு
- மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்
- வரமிளகாய் - மூன்று
- பச்சை மிளகாய் - மூன்று
- பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
- உப்பு - ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
- கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் - அரை டீஸ்பூன்
- சோம்பு - அரை டீஸ்பூன்
- கறிவேப்பிலை - இரண்டு கொத்து
- கெட்டியான அரிசி கழுவிய நீர் - முன்னூறு மில்லி
- முதலில் புளியை அரிசி கழுவிய நீரில் ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
- சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை குறுக்கில் இரண்டாக நறுக்கவும்.
- வரமிளகாயை கிள்ளி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சோம்பு போட்டு வெடித்ததும் பெருங்காயம் போடவும்.
- இரண்டு நிமிடம் கழித்து வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
- நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி பத்து நிமிடம் நன்கு கொதித்ததும் இறக்கவும்.
Note:
ஒரு நாளில் அரிசி கழுவிய நீர் கிடைக்கவில்லையென்றால் இரண்டு, மூன்று நாட்கள் அரிசியைக் கழுவும்போது கிடைக்கும் நீரை ஃப்ரிட்ஜில் சேமித்து உபயோகிக்கலாம். மேலே உள்ள நீரை வடித்து விட்டு கீழே தங்கும் மண்டி நீரில் புளியைக் கரைத்து செய்தால் மிக சுவையாக இருக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
8 sec முன்பு
1 min 17 sec முன்பு
2 நிமிடங்கள் 14 sec முன்பு
2 நிமிடங்கள் 41 sec முன்பு
2 நிமிடங்கள் 57 sec முன்பு
3 நிமிடங்கள் 49 sec முன்பு
3 நிமிடங்கள் 49 sec முன்பு
5 நிமிடங்கள் 6 sec முன்பு
5 நிமிடங்கள் 30 sec முன்பு
6 நிமிடங்கள் 1 sec முன்பு