முட்டை குருமா (பூரி சப்பாத்திக்கு)

தேதி: November 20, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (12 votes)

 

முட்டை-4
கெட்டியான தேங்காய் பால்- 1 கப்
பச்சைமிளகாய்-8
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால்ஸ்பூன்
சீரகத்தூள்- 1 ஸ்பூன்
பட்டை,எலக்காய்,கிராம்பு,அன்னாசி,பிரிஞ்சி-தலா 1
கொத்தமல்லி- கால் கப்
வெங்காயம்-5
எண்ணெய்- ஒரு குழிகரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து


 

கடாயில் எண்ணெயை காய வைக்கவும்

வாசனை பொருட்களை வறுக்கவும்

வெங்காயம், பச்சைமிளகாயை, கறிவேப்பிலை வதக்கவும்.

பின்னர்கொத்தமல்லி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

பச்சைவாசனை போனதும் மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்க்கவும்

பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்

நன்கு கொதி வந்ததும் தீயினை சிம்மரில் வைத்து முட்டையை கொத்தி ஊத்தவும். மூடிவிடவும்

5 நிமிடங்கள் கழித்து கீழே இறக்கி பரிமாறவும்.


கெட்டியான தேங்காய் பால் தான் சேர்க்க வேண்டும். தேங்காய் விழுது சேர்க்க கூடாது. முட்டையின் அளவை கூட்டி குறைத்து போடலாம். காரத்திற்கு வெறும் பச்சைமிளகாய் மட்டுமே சேர்த்துள்ளதால் அதே அளவிலேயே போடவும். பூரி சப்பாத்தி, நாண், படூரா ஆகியவற்றுடன் அருமையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஆமி நான் முட்டை குழம்பு இந்த மாதிரிதான் செய்வேன். ஆனால் தேங்காய்ப்பால் அன்னாசி சேர்த்ததில்லை. அடுத்த முறை செய்யும் போது சேர்த்து செய்கிறேன். வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நன்றி ரேவதி. விருப்பமான வாசனை பொருள் போடுவது நமது இஷ்ட்டம் தானே :-)

மிக்கநன்றி பா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Assalamu alaikum

Sister,

oru sandegam.....kothamalli.....endral.....keeraiya....whole dhaniya va??

brinji....endral enna???? naan samyalil LKG....!!!! vilakkavum

அன்புடன்
Nizamuddin - Doha,Qatar
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு