வெந்தயக்கீரை கைமா தொக்கு

தேதி: November 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கைமா- 100 கிராம்
வெந்தயகீரை- ஒரு கப்
கத்திரிக்காய்-4
சின்ன வெங்காயம்-10
பூடு-10 பல்
தக்காளி-2
கொத்தமல்லி- சிறிதளவு
பச்சைமிளகாய்-2
மஞ்சள் தூள்-கால்ஸ்பூன்
மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
மல்லிதூள்- ஒருஸ்பூன்
உப்பு-தேவைக்கு
தேங்காய் விழுது- கால் கப்
எண்ணெய்-2 குழிகரண்டி
பட்டை,கிராம்பு-தலா 1


 

சின்னவெங்காயம் பூடு சேர்த்து அரைத்து விழுதாக வைக்கவும்

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்

பின்னர் தக்காளி,கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து குழைய விடவும்

தூள் வகைகளை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்

பின்னர் கைமா மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் அளவுக்கு வேகும் அரை வதக்கவும்

பின்னர் கீரை மற்றும் இரண்டாய் நறுக்கிய கத்திரிக்காய், அரை டம்ளர் நீர் சேர்த்து வேகும் வரை மூடிபோட்டு சிம்மரில் வைக்கவும்.

இறக்க போகும் 5 நிமிடங்களுக்கு முன் தேங்காய் விழுதை சேர்த்து கிளறி பின் இறக்கவும்.


சாதத்துடன் பிரட்டி சாப்பிட அருமையாக இருக்கும். கைமாவிற்கு பதிலாக மட்டன் துண்டுகள் சேர்க்கலாம். மொச்சை பயறும் சேர்த்து செய்யலாம். கத்திரிக்காய் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம். கட்டாயம் கிடையாது.

மேலும் சில குறிப்புகள்