டொமேட்டோ ரைஸ்

தேதி: November 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (18 votes)

 

தக்காளி - 8
சாதம் - ஒரு கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 3
பூண்டு - 10 பல்
மோர்மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
கடலைபருப்பு - ஒரு தேக்கரண்டி


 

தக்காளியை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்து சாற்றை தனியாக வைக்கவும். சதைப்பகுதியை மட்டும் மிக்ஸியில் பாதியாக அரைக்கவும். (பாதி விழுதாகவும், பாதி அரைப்படாமல் இருப்பது போலவும்.)
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் பச்சைமிளகாய், மோர்மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பூண்டு சேர்த்து வதக்கவும்.
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தையும் தேவைக்கு உப்பையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் சுருண்டதும் தக்காளி சாற்றையும் பாதியாக அரைத்த விழுதையும் சேர்த்து கிளறவும்.
மஞ்சள் தூளை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின்னர் உதிரியாக வடித்த ஆற வைத்த சாதத்தை கொட்டி கிளறவும்.
சுவையான உடனடியாக செய்து விட கூடிய டொமேட்டோ ரைஸ் தயார். அவித்த முட்டை, பொரித்த மீன், சிப்ஸ், வெள்ளைபூண்டு ஊறுகாய் ஆகிய பக்க உணவுகள் இதற்கு பொருந்தும். வேலைக்கு செல்லக்கூடியவர்கள் மசாலாவை வதக்கி பிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகிக்கலாம். 10 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்களின் டொமேட்டோ ரைஸ் ரொம்ப அருமை.குறிப்பும் சுலபமாகவே இருக்கு எங்களை போல புதிதாக சமையல் கத்துக்கவுங்களுக்கு இது மிகவும் ரொம்ப அழகான ரெஸிபி கடைசி படம் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.வழ்த்துக்கள் அமி முகப்பில் உங்க படம் சூப்பர்ர்ர்....

ஆமி எப்படி இருக்கீங்க? ரொம்ப ஈஸியான ரெசிபி மற்றும் பிரசன்டேஷன் சூப்பர். மோர் மிளகாய் என்கிட்ட இல்லை அது இல்லாம செய்யலாமா.மிளகாய் தூள் போடவில்லை என்றால் சிகப்பு கலர் வராதில்லையா. போடாமல் செய்யலாமா.

Expectation lead to Disappointment

ஆஹா. டொமட்டோ ரைஸ் ஐ பிரியாணி ரேஞ்சுக்கு அசத்திட்டீங்க. சூப்பர். அந்த ப்ளெட்டை அப்படியே எனக்கு தந்திருங்க. வாழ்த்துக்கள் அக்கா. இதை முத்லிலேயே பார்த்திருந்தா அப்பவே செஞ்சிருப்பேனே. ஓகே. நாளைக்கு செஞ்சி பார்த்துச்றேன். சூப்பர். வாழ்த்க்கள் மேலும் பல குறீப்புகள் தர.

டொமேட்டோ ரைஸ் வித்தியாசமா இருக்கு. மோர் மிளகாய் எல்லாம் போட்டு செஞ்சு இருக்கீங்க. விருப்பட்டியலில் இருக்கு கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

அருமையான குறிப்பு பார்க்கும் போதே சாப்பிட்டனும் போல இருக்கு.

உங்கள் டொமெடொ ரைஸ் சூப்பர்.ரொம்ப அழகாக செய்து இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

Tharifa.

மாயாவதி சுஜி

ரொம்ப நன்றி மாயா
செய்தும் பாருங்க. அருமையா இருக்கும் :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

@மீனாள் கிருஷ்ணன்
நா ரொம்ப நல்லா இருக்கேன் மீனாள்... நீங்க நலம் தானே?
உங்களை போன்றவர்களின் ஊக்கம் தான் இந்த அளவுக்கு முயற்சி எடுக்க வைக்குது

ப்ளேவர்க்கு பச்சைமிளகாய், சாப்பிட மோர்மிளகாய் என கொடுத்திருப்பதால் மிளகாய் தூள் நான் சேர்க்கல. மஞ்சள் தூளும் தக்காளி பியூரியும் கலர் கொடுத்துடும். மிளகாய் தூள் சேர்த்தும் செய்யலாம். வித்தியாசம் எதுவும் இருக்காது.
வருகைக்கு நன்றி மா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

@நஜீம்
ப்ளேட்டை அப்படியே எடுத்துக்கோங்க நஜீம். ஆனா என் மகன் ஷாம் கூட மல்லு கட்டி ஜெய்ச்சதுக்கப்பறம் :-)

சீக்கிரமே செய்து பார்த்துட்டு சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

@வினோஜா
நல்லா இருக்கீங்களா? பார்த்தே ரொம்ப நாள் ஆகுது :-)
மிக்க நன்றி வினோ
செய்துட்டு மறக்காம சொல்லிடுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

@சபி ரியாஸ்
செய்து பாருங்க சபி
வருகைக்கு மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

@ஹனீபா
மிக்க நன்றி ஹனீபா
செய்து பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,

எளிமையான குறிப்பு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி கவிதா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

டொமேட்டோ ரைஸ் வித்தியாசமா இருக்கு, மோர் மிளகாய் எல்லாம் இருக்கு, கண்டிப்பா பண்ணி பாக்கறேன். டிஸ்ப்ளே பண்ணி இருக்கும் விதம் அருமை....கேனான் கேமரா சூப்பர் ஹா வேலை செய்யுது போல.வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மிக்க நன்றி சுகி

செய்து பாருங்க.

//டிஸ்ப்ளே பண்ணி இருக்கும் விதம் அருமை....கேனான் கேமரா சூப்பர் ஹா வேலை செய்யுது போல//
அப்பப்ப சேட்டை காட்டுது (நமக்கு யூஸ் பண்ண தெரியலைன்னா அப்படிதானே சொல்லணும் ஹி...ஹி....ஹி....)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ப்ளேட்ட கொண்டு போற நோக்கத்திலதான் வந்தேன்;) சாம் கூட சண்டை போடனுமா....கொஞ்சம் இருங்க ரோஹித்த அனுப்பி வைக்கிறேன் ;))

படங்களும் சூப்பர்..குறிப்பும் சூப்பர் கட்டாயம் செஞ்சு பாக்கறேன். வாழ்த்துக்கள்;)

Don't Worry Be Happy.

எனக்கு பிடிச்ச சாதமே தக்காளி சாதம் தான். அதை மிகவும் அழகாக போட்டோ எடுத்தவிதம் அருமை. முகப்பில் பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. வாழ்த்துகள். தக்காளி சாதம் ஒரு பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்......

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பார்க்கவே கலக்கலா இருக்கு ஆமினா .செய்து சாப்பிட்டு சொல்றேன் நாளைக்கே .

ஹாய் ஆமினா அஸ்ஸலாமு அலைக்கும் உங்க கூட பேசி ரொம்ப நாலா ஆச்சி நல்லா இருக்கீங்களா உங்க பையன் நல்லா இருக்கானா டொமேடோ ரைஸ் பார்க்க ரொம்ப நல்லா இருக்குபா வாழ்த்துக்கள்

//கொஞ்சம் இருங்க ரோஹித்த அனுப்பி வைக்கிறேன் ;))//

ஹா...ஹா...ஹா.... ரெண்டு பேரும் ஆமி ஜெயா போல ரொம்ம்ம்ப க்ளோஸா இருப்பாங்க :-)

செய்து பார்த்துட்டு சொல்லுங்க ஜெயா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கும் கூட தக்காளி சாதம் ரொம்ப பிடிக்கும் ரேவதி

செய்து பாருங்க சீக்கிரமே :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்ப நன்றி ஏஞ்சலின். செய்துட்டு மறக்காம எப்படியிருந்துச்சுன்னு சொல்லிடுங்க :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வ அலைக்கும் சலாம் வரஹ்...

அல்ஹம்துலில்லாஹ். எல்லாரும் நல்லா இருக்கோம் நஸ்ரின். நீங்க நலம் தானே? அடிக்கடி குறிப்பு வரும். இப்பலாம் வரதில்லயே? ரெஸ் எடுக்குறீங்களா? சீக்கிரம் அனுப்புங்க :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினாக்கா. சலாம். சூப்பரா வந்திருச்சு. டொமெட்டோ ரைஸ். இப்பதான் செஞ்சேன். சூப்பர் டேஸ்ட். நல்ல கலர்ஃபுல்லா இருக்கு. தாங்க்ஸ் அக்கா.

நல்லா இருக்கேன் ஆமி ஆமாப்ப ரெஸ்ட்தான் எடுத்து கிட்டு இருக்கேன் இன்ஷால்லாஹ் சீக்கிரமாஅனுபுறேன்

வ அலைக்கும் சலாம் வரஹ்....

ஆ.....

செய்தாச்சா??????

சீக்கிரமே செஞ்சு மறக்காம பதிலும் போட்டதுக்கு மிக்க நன்றி நஜீம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இன்ஷா அல்லாஹ்

காத்திருக்கேன் :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இன்று உங்கள் தக்காளி சாதம் செய்தோம். மிகவும் சுவையாக இருந்தது.எனக்கும்,என் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.இனி அடிக்கடி செய்துகொள்வோம்.சுவையான குறிப்புக்கு மிகவும் நன்றி.