க்ரிஸ்பி கோபி

தேதி: November 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (10 votes)

திருமதி. சுபா ஜெயப்ரகாஷ் அவர்களின் குறிப்பினை பார்த்து திருமதி. செண்பகா பாபு அவர்கள் செய்து பார்த்த குறிப்பு இது.

 

காலிஃப்ளவர் - ஒரு கப் (பூவாக உதிர்த்தது)
பச்சரிசி மாவு - 2 தேக்கரண்டி
கடலை மாவு - 2 தேக்கரண்டி
ரவை - 2 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
வெங்காயம் - 2 என்னம் (பெரியதாக வெட்டியது )
குடைமிளகாய் - ஒரு என்னம் (விதையை நீக்கி பெரியதாக வெட்டியது)
தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி
சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
கறுப்பு உப்பு - 2 சிட்டிகை
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு


 

குடைமிளகாயை விதை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கவும். காலிஃப்ளவரை சிறிய பூவாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சில்லி சாஸ், தக்காளி சாஸ், கறுப்பு உப்பு ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவரை போட்டு அதில் அரிசிமாவு, கடலைமாவு, ரவை, மிளகாய்தூள், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிரட்டி வைத்திருக்கும் இந்த காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடேறியதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு மூன்று நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் குடைமிளகாய் சேர்த்து எட்டு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம், குடைமிளகாய் வாசனை வரும் பொழுது சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
அதில் பொரித்து தனியாக எடுத்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
வதக்கிய குடைமிளகாய், காலிஃப்ளவர் கலவையில் கறுப்பு உப்பு தூவி கிளறி விட்டு இறக்கவும்.
இதனை சூடாக பரிமாறவும். க்ரிஸ்பி கோபி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல தெளிவான படத்துடன் கூடிய சுவையான குறீப்பு வாழ்த்துகள்.இதுபோல் மேலும் பல கிரிஸ்பான குறிப்பு த்ர வாழ்த்துக்கள்.

அண்ணி பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு. சூப்பரா கிரிஸ்ப்பியா இருக்கும் போல. வாழ்த்துகள். பிறந்த நாள் டீரிட் எப்போ?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அண்ணி சூப்பர், கலக்கீடீங்க. இது அண்ணா பிறந்தநாள்க்கு நீங்க பண்ணுனதா? இல்ல உங்க பிறந்தநாள்க்கு அண்ணா பண்ணுனதா? :-)
பாக்கரக்கே சூப்பர் ஹா இருக்கு. கண்டிப்பா பண்ணிடறேன். இப்ப எல்லாம் உங்க டிஷ் வரதே இல்லையே? பாப்பா ரொம்ப குறும்பு பண்றாளோ?
அடிகடி டிஷ் அனுப்புங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அண்ணி இந்த குறிப்பு பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு.....
படங்கள் ரொம்ப தெளிவா அருமையா இருக்கு.... வாழ்த்துக்கள்......

நசீம், ரேவதி, சுகந்தி, தீபா தங்களின் வாழ்த்திற்கும் பதிவிற்கும் நன்றி.

senbagababu

Super