வெஜிடபிள் சப்பாத்தி

தேதி: July 8, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோதுமை மாவு - 2 கப்
தண்ணீர் - ஒரு கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சப்பாத்தி உள்ளே நிரப்ப:
கேரட் - ஒன்று
பீட்ரூட் - ஒன்று
பச்சைபட்டாணி - கால் கப்
உருளைக்கிழங்கு - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
எலுமிச்சைச்சாறு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

ஒரு அகலமான பாத்திரத்தில் மாவு, உப்பு, எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசையவும்.
குக்கரில் உருளைக்கிழங்கு, பட்டாணியை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பின் மசித்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சைமிளகாய், சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் துருவிய கேரட், துருவிய பீட்ரூட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின் மசித்த கிழங்கு, பட்டாணி, உப்பு, சிறிதளவு கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி இலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பிசைந்த மாவை சுமாரான உருண்டைகளாக உருட்டவும்.
அதில் சிறிது குழிச்செய்து உள்ளே ஒரு மேசைக்கரண்டி காய்கறி மசாலாவை வைத்து மூடவும். பின் கோதுமை மாவில் புரட்டி கனமான சப்பாத்தியாக இடவும்.
தோசைக்கல்லை சூடாக்கி சப்பாத்தியை போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு நன்றாக சுட்டு சூடாகப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்