மிளகு சீரக சாதம்

தேதி: November 25, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (8 votes)

 

சாதம் - ஒரு பெரிய கப்
மிளகு - 1 1/2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
முந்திரி - 10
கறிவேப்பிலை
உப்பு
நெய் (அ) எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

மிளகையும், சீரகத்தையும் வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும்.
இதை கொர கொரப்பாக பொடி செய்யவும்.
பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி சேர்த்து சிவக்க வறுக்கவும்.
இதில் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பில் இருந்து எடுக்கவும்.
எடுத்த உடன் தாளிப்பு சூடாக இருக்கும் போதே சூடான சாதம், உப்பு, மிளகு சீரக தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
உங்கள் காரத்துக்கு ஏற்றபடி பொடியை கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளவும். சுவையான மணமான மிளகு சீரக சாதம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நாளைக்கு என்ன சாதம் பண்ணலாம்ன்னு யோசுச்சுட்டே இருந்தேன், சூப்பர் சாதம் தந்து இருக்கீங்க வனி, சீக்கரம் பண்ணி விட்டு வந்து பதிவு போடறேன்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மழை காலத்துக்கு ஏற்ற குறிப்பு..... ரொம்ப சுலபமானதா கொடுத்து இருக்கீங்க...
வாழ்த்துக்கள்....

செய்வதற்கு எளிதான குறிப்பு. படங்கள் அழகு.

வனி..என்னோட favorite சாதம்:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

வனிதா மேடம்,
அடிக்கடி செய்யும் சாதம்..
இந்த பொடியை மற்றவற்றிற்கும் சேர்க்கலாம்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வனி வீட்டில் இதே வேலையோ! அடிக்கடி ஏதாவது செய்து அசத்திக்கிட்டே இருக்கீங்க. இன்றும் நிறைய குறிப்புகளை கொடுக்க வேண்டும். வாழ்த்துகள்ம்மா

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நீங்கதா நெனச்சேன் நீங்களேதா இன்னைக்கு மதியம் தா செஞ்சு சாப்பிட்டேன் எனக்கும் பேவரைட் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

முகப்பில் உங்கள் ஒன்று உணவு செய்முறை அல்லது கைவினை குறிப்பு வந்து விடுகிறது..... எப்படி உங்களால் மட்டும் முடிகிறது? டைம் எப்படி கிடைக்கிறது வனிக்கா? வேலைக்கும் போறீங்க தானே? இப்பொ மிளகு சாதம் பத்தி... பாத்த உடனே செய்யணும் போல இருக்கு.... முந்திரி சேர்த்து உள்ளது சூப்பர்.... செஞ்சுட்டு எப்படி இருந்துச்சுணு சொல்றேன்.......

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

சுகி... மிக்க நன்றி. செய்தாச்சா? வந்து சொல்லுங்க... :)

தீபா.. மிக்க நன்றி. மழை நேரத்துக்கு சூப்பரா இருக்கும்.

ஆனந்தி... மிக்க நன்றி. :)

கோமதி... மிக்க நன்றி. :)

கவிதா... மிக்க நன்றி. :)

ரேவதி... மிக்க நன்றி. //வாழ்த்துகள்ம்மா// - அக்காவில் இருந்து அம்மா ப்ரோமோஷனா? ;)

ரேணு... மிக்க நன்றி. எனக்கும் ஃபேவரட். :)

பிரியா... மிக்க நன்றி. நான் வேலைக்கு போகலங்க. அதான் பொழுது போகாம எதாவது பண்ணிகிட்டிருக்கேன். :) செய்துட்டு மறக்காம சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க மிளகு சீரக சாதம், சிம்ப்ளி சூப்பர் வனி! :) கட்டாயம் ஒருமுறை செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

இதற்கு என்ன சைடிஸ் பொருந்தும்? வெரும் சாதமாக சாப்பிடாலமா?

நல்ல குறிப்பு......சும்மாவே நானெல்லாம் லஞ்ச் பாக்ஸ் காலி பண்ணிட்டு தான் இப்படியெல்லாம் என் அம்மா எனக்கு செய்து தந்திருந்தால் எங்கள் வீடு வாசப்படியை இடித்து தான் கட்டியிருக்க வேண்டும். யாழினியும் குமரனும் கொடுத்து வைத்தவர்கள். கடைசி போட்டோ ப்ரெசன்டேஷன் அருமை. உங்களின் போட்டோக்ராபியும் அதில் தெரியுது :) வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சுஸ்ரீ... மிக்க நன்றி. அதென்ன ஒரு முறை? செய்து பாருங்க, அப்பறம் அடிக்கடி செய்வீங்க ;)

அனு... மிக்க நன்றி. அப்பளம், சிப்ஸ், வடை போன்றவை போதும். விரும்பினால் உருளை, வாழைக்காய் வறுவல் போன்றவை செய்யலாம். நல்ல பொருத்தம். ;)

லாவண்யா... மிக்க நன்றி. இப்படி சொல்லி சொல்லி சாப்பிடாம இருக்கீங்க போலிருக்கே ;) நல்லா செய்து நிறைய சாப்பிடுங்க. //உங்களின் போட்டோக்ராபியும் அதில் தெரியுது // - இப்படிலாம் ஓட்டபுடாது லாவண்யா. :( வனி பாவம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான,சத்தான சாதம்.. :)
கடைசி படம் எடுத்த விதம் வழக்கம் போல அழகு.. கண்டிப்பா செய்து பார்த்து சொல்றேன் .வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ரம்யா... மிக்க நன்றி :) செய்து பார்த்து சொல்லாம நானும் விட மாட்டேன் உங்களை ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

As My opinion about sugar complaint persons, they won't call in the name of Sugar patient.Sugar level less or raise in the human body that a part of functioning failure are slow working. In the following sequency will adopt in their life, First- Walking 5 KM every day. second - maintained the daily diet.Then only third - medicine.

Nalaikku enna satham seyyalam nu yosikkum pothu seeraka milaku satham parthen. Arumai, kandipa try panren.
Nanri. Vanakkam

பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே

மிக்க நன்றி. அறுசுவைக்கு புதிதாக இணைந்திருக்கீங்க... வருக வருக. இனி அடிக்கடி பேசுவோம். :) செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vanakkam vani, Tamil type Epidi? Pls sollunga

பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே

கீழே அறுசுவை என்ற தலைபின் கீழ் “தமிழ் எழுத்துதவி”னு ருக்கு பாருங்க. அந்த லின்க் போனா ஈஸியா டைப் பண்ணலாம். இல்லன்னா “NHM Writer” ட்வுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணிக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வ‌னி,
போன‌ வியாழனன்று உங்க‌ மிள‌கு சீர‌க‌ சாத‌ம் ப‌ண்ணினேன், எங்க‌ளுக்கு ல‌ன்ச் பாக்சில் கொண்டுபோக. சாதம், கலரும், டேஸ்ட்டும் ரொம்ப‌ சூப்ப‌ரா இருந்தது வ‌‌னி! எத்த‌னை ஈசியா, அருமையான‌ ஒரு ரைஸ் கொடுத்து இருக்கிங்க‌. ந‌ன்றி!

//சுஸ்ரீ... மிக்க நன்றி. அதென்ன ஒரு முறை? செய்து பாருங்க, அப்பறம் அடிக்கடி செய்வீங்க ;)
//

என்னவோ, அடுத்த‌முறை (க‌லந்த‌‌ சாத‌ம் ட‌ர்ன் போது) ட்ரை ப‌ண்றேன்னு சொல்ல வந்து, ஒருமுறை என்று எழுதிவிட்டேன். (இதுக்குதான் ரொம்ப தூக்க கலக்கத்தில் பதிவு போடக்கூடாதென்பது! ஹி..ஹிஹி.. :) )
ஆமாம், நீங்க சொன்னமாதிரி, இனி அடிக்கடி செய்திடுவேன் வனி! மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

செய்தாச்சா??? சூப்பர்... எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு :)

//இதுக்குதான் ரொம்ப தூக்க கலக்கத்தில் பதிவு போடக்கூடாதென்பது! // - நாங்களாம் முக்கால்வாசி தூக்கத்துல தானே தட்டுவோம்.;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி இன்று மிளகு சீரக சாதம் செய்தென் எளிமையான காரமான சாதம் மிகவும் அருமையாக இருக்கு. நான் சிறிது வெங்காயமும் சேர்த்துக்கொண்டேன்.நன்றாக இருந்தது.

Dreams Come True..

மிக்க நன்றி. எல்லாரும் உள்ள இருக்க குறிப்புகளை எல்லாம் தேடி எடுத்து செய்து சொல்றீங்க... மகிழ்ச்சியா இருக்குங்க. நன்றி மீண்டும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
உங்க மிளகு சீரக சாதம் இன்று செய்தேன்... செம யம்மி... மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி :) ஏறக்குறைய எல்லார் குறிப்பும் செய்துடுறீங்க. மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா