ஆந்திரா கார தோசை

தேதி: November 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (13 votes)

 

வரமிளகாய் - 10
முழுபூண்டு - ஒன்று
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு
முட்டை - ஒன்று
தோசைமாவு - ஒரு கப்


 

கொதிக்கும் நீரில் வரமிளகாயை 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பூண்டுகளை உரித்து வைக்கவும்.
பின்னர் இரண்டையும் உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
தோசைகல்லில் தோசையை வார்க்கவும்.
அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி சமமாக எல்லா இடங்களிலும் பரப்பவும்.
அரைப்பதமாக வெந்ததும் கார சட்னி 2 தேக்கரண்டி சேர்த்து எல்லா இடங்களிலும் சமமாக பரப்பவும்.
இரு பக்கமும் வேகவிட்டு மடித்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் காரசாரமான குறிப்பு வாழ்த்துக்கள் ஆமீனா அக்கா விரைவில் செய்து பார்த்து பின்னூட்டம் தரேன் அக்கா by Elaya.G

ஈஸி கார தோசை ட்ரை பண்ணி பாக்கறேன் நாளைக்கு காரம் அதிகமா இருக்குமா வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அமீனா அக்கா.ரோம்ப நல்லா இருக்கு.கார தோசை கலர் கண்ண பரிக்கிறது.நானும் வீட்டுல டிரை பன்னி பார்கிரேன் அக்கா.

கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

. வெறும் சட்னிய தொட்டுட்டு சாப்பிட்டா அதிகமா காரம் இருக்கும். ஆனா தோசைல போட்டு சூடாக்கியதுக்கு பிறகு கம்மியாய்டும் காரணம் முட்டையும் தோசைமாவும் காரத்த அதிகப்படுத்தாது ரேணுகா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கண்டிப்பா ட்ரை பண்ணுங்க நாகா ப்ரேம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

~ மழை காலத்திற்கு ஏற்ற நல்ல காரசாரமான தோசை,செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்!!

நன்றி ஆனந்தி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்ல காரசாரமான தோசை... சூப்பர்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ,யாராவது எப்படி கேள்வி அனுப்பறதுனு சொல்லுங்களேன்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

அறுசுவையில் புதிதாக தொடங்க வேண்டும் என்றால் மேலே மன்றம் என்ற ஆப்ஷன் மூலமா போய் சரியான பிரிவை தேர்தெடுத்து அங்கே கேள்வி எழுதுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றிக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

யாருமே ஹெல்ப் பண்ண மாட்டிங்கல்ல புதுசா வந்தவங்களுக்கு ரொம்ப நன்றி

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

சலாம் ஆமினா மேடம்,ரொம்ப ரொம்ப நன்றி

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

சலாம் மேடம்,என் கேள்விக்கும் நீங்கதான் ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன்.தேங்க்ஸ் அகெய்ன் மேடம்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

வ அலைக்கும் சலாம் வரஹ்

எனக்கு தெரிஞ்சா கண்டிப்பா சொல்றேன் பா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அருமையான ஆந்திரா கார தோசை! சூப்பரா இருக்கு.... :) வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

ஆமி,
சூப்பர் தோசை!!!
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி பா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்புள்ள அமீனா அவர்களுக்கு வணக்கம் நீங்க ஆந்திரா வா எனக்கு ஒரு சந்தேகம் இங்கே கடலை சட்டினி எதோ வித்தியாசமாக செய்வார்களாம் என் கணவர் சொன்னார் நான் இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறேன் அது எப்படி என்று எனக்கு கொஞ்சம் கூறுங்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் ஆமினா காரசாரமான குறிப்பு கொடுத்தமைக்கு வாழ்த்துகள். எனக்கு தோசை ரொம்ப பிடிக்கும். அதுவும் காரம் கலந்த தோசை செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மன்னிக்கவும் உங்கள் பெயரை தவறாக கொடுத்துவிட்டேன் ஆமினா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Parkavae romba nalla iruku... kudieasekiram Senjitu pinutam anupuraen... valthukal...

நா ஆந்திரா இல்ல பா. என்னவர் பேமிலி ஆந்திரா என்பதால் சில ஆந்திரா சமையல்கள் தெரியும். நிலகடலைசட்னியை சொல்றீங்களா? தோலுரித்த நிலக்கடலையுடன் தேங்காய்,வரமிளகாய்,பூடு சேர்த்து அரைத்து தாளிக்க வேண்டியது தான். நீர் விடாமல் பொடி செய்து சூடான சாதத்தில் பிரட்டி சாப்பிடலாம் . ஆந்திராவில் சாப்பாட்டில் ஊறுகாய் பொடி இல்லாம இருக்காது :-) இன்னும் விதவிதமான ஆந்திரா சமையல் செய்யணும்னா http://www.arusuvai.com/tamil/recipes/2 பாருங்க. கூட்டாஞ்சோறில் என் குறிப்பில் கொஞ்சம் ஆந்திரா சமையல்கள் கொடுத்திருக்கிறேன். முடியும் போது பாருங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கௌரி தங்கம்

மிக்க நன்றி பா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

செம காரமான தோசை தான், நேத்து தான் செய்து பார்த்தேன்... அடை மழைக்கு ஏத்த தோசை.... மேலும் பல குறிப்பு தர வாழ்த்துக்கள் ஆமி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அருமையான தோசை.. பசி சமயத்தில் பார்த்துட்டேன் :(
அவசியம் செய்து பார்க்கிறேன்,வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சமீபத்திய கருத்துக்கள்ல யாரோ ஆ உஷ்ன்னு கத்துறாகளேன்னு ஓடி வந்தா நீங்க தானா :-))

நன்றி சுகி

@ரம்யா
மிக்க நன்றிபா. செய்துட்டு சீக்கிரமே சொல்லிடுங்க :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா கார தோசை சூப்ப்ர் ஆனால் , ரொம்ப காரமா இருக்குமோ?

Jaleelakamal

Kaarasaramana super dosai
mam.

nanraga irundhadhu. thanks