சிலோன் பரோட்டா

தேதி: November 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (10 votes)

 

உள்ளே ஸ்டப்பிங் செய்ய:
நெய் - 2 மேசைக்கரண்டி
எலும்பில்லாத சிக்கன் - அரைக் கிலோ
வெங்காயம் - 2
பூண்டு - 3 பல்
இஞ்சி - 2 அங்குல துண்டு
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சிலோன் கறி பவுடர் - 4 மேசைக்கரண்டி
லெமன் ஜெஸ்ட் - 2 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 2
தேங்காய் பால் - 2 கப்
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சிலோன் கறி பவுடர் செய்ய:
தனியா விதை - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
அரிசி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பரோட்டா செய்ய:
மைதா மாவு - 2 கப்
முட்டை - 2
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் பரோட்டா செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக பாலும், தேவையெனில் தண்ணீரும் தெளித்து பிசைய வேண்டும்.
நன்றாக பிசைந்தவுடன் ஈரத்துணியால் சுற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
சிலோன் கறி பவுடர் செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். எண்ணெயில்லாமல் ஒவ்வொன்றாக தனி தனியே வறுத்தெடுக்கவும்.
ஆற வைத்து கொரகொரப்பாக பொடியாக திரித்து வைக்கவும்.
சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
நெய் காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் சில நிமிடங்களில் கலர் மாறி அதிலிருந்து நீர் வெளியேற ஆரம்பித்தவுடன் சிக்கனை மட்டும் தனியே எடுத்து விடவேண்டும்.
அதே நெய்யில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது (முழுவதுமாக பொன்னிறமாகக் கூடாது) வதங்கியவுடன் உப்பு, எலுமிச்சை ஜெஸ்ட், பிரிஞ்சி இலை மற்றும் மற்ற பொடி வகைகளை சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இப்பொழுது பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து தீயை குறைத்து மிதமான தீயில் பத்து நிமிடம் வேக விடவும்.
தேங்காய் பால் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுத்து ஆற வைக்கவும்.
பரோட்டா மாவை சதுரமாக திரட்டி நடுவில் சிக்கனை வைத்து மூடவும்.
தவாவில் பரோட்டாவை போட்டு எண்ணெய் தேய்த்து இரு புறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும். இந்த பரோட்டாவின் ஸ்பெஷலே சதுர வடிவம் தான். சால்னா, ரைத்தாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

இங்குள்ள ஒரு இந்தியன் ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டு ரொம்பவும் பிடித்து போக இப்படி தான் செய்திருப்பார்கள் என்று ட்ரை பண்ணியதை உங்களிடம் பகிர்ந்துக் கொண்டேன். நடுவில் சிக்கனுக்கு பதிலாக முட்டை சேர்த்தும் செய்யலாம். சைவர்கள் நடுவில் உள்ள சிக்கனுக்கு பதிலாக காய்கறி ஸ்டப்பிங் வைத்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நலமா ரொம்ப நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் படங்கள் நல்லா தெளிவா இருக்கு தோசை ல வைக்காமலே சாப்பிடலாம் போல இருக்கே அருமையோ அருமை by Elaya.G

செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்

எங்க ஊரில் சிலோன் ப்ரோட்டா என்றால் முட்டையும் சீனியும் ஸ்டப்பிங் போடுவாங்க :-)

உங்க செய்முறை பார்த்தா ஓவரா பசிக்குது

வாழ்த்துக்கள் லாவண்யா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

லாவண்யா, நான் கோதுமையில் உருளை மசாலா ஸ்டப்பிங் செய்து போடுவேன். மைதாவில முட்டை ஏன் சேர்த்திருக்கீங்க? வாசனை வராதா? அப்புறம் இந்த லெமன் ஜெஸ்ட் என்ன? எங்கே கிடைக்குது?...

easy 2 cook and nice 2 eat

ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்... அந்த கடைசி படம் பார்த்தா பரோட்டா சாப்பிடாம விட முடியாது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிலோன் பரோட்டா சூப்பரா இருக்கு! எவ்வளவு நீளமான குறிப்பு....! அதை அழகா விளக்கி ஈசியா செய்து காட்டியிருக்கிங்க.... வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

உமா,

பொதுவா ஜெஸ்ட் என்பது, பழங்களின் மேல் தோலை துருவி வருவதை குறிக்கிறது. க்ரேட்டர் கொண்டு பழங்களின் மேலாக ரொம்ப மிருதுவாக (வெள்ளைத்தோல் கலந்துவிட்டால் கசப்புத்தன்மை வந்துவிடும்.) துருவி/சீவி எடுத்து சேர்ப்பது. இதனால், லெமன் ஃப்ளேவர் நல்லா ஸ்ட்ராங்கா கிடைக்கும். இதேப்போல லைம், ஆரஞ்சு பழத்திலும் எடுத்து சேர்ப்பதுண்டு.

லாவண்யா,
உங்கள் சார்பில் நான் உமாக்கு பதில் சொல்லி இருக்கிறேன்! வேறு ஏதேனும் விட்டிருந்தால் நீங்க சொல்லிடுங்க! :)

அன்புடன்
சுஸ்ரீ

லாவண்யா,
அழகா செய்து காட்டியிருக்கிங்க.... வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்,
கவிதா

parkkum pothe sappitanum pola irukkuthe....:)

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி.

என்ன இளையா எப்படி இருக்கீங்க....நல்ல இருக்கீங்களா? நான் ரொம்பவே நல்லாயிருக்கேன். படங்கள் தெளிவா இருக்கா....அப்போ அதையை நானும் மெயிண்டேன் பண்ண ட்ரை பண்றேன்.....நீங்க சொல்றது ரொம்ப சரி....உள்ளே இருக்கு சிக்கனை அப்படியேவும் சாப்பிடலாம்......வாழ்த்துக்கு மிக்க நன்றி.

வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆனந்தி.

ஆமினா......உங்க ஊர் என்றால் பரமகுடியிலா? நான் இங்கே தான் முதன் முதலா சாப்பிட்டேன்....இது "சிலோன் சிக்கன் பரோட்டா" என்று சொன்னார்கள். பெயரை ஏனோ சுருக்கி வெளியிட்டிருக்கிறார்கள். //நான் மட்டும் மூன்று வார்த்தை வைத்து குறிப்பு அனுப்பினால் பெயர் எப்பொழுதுமே அப்படி தான் சுருங்கி விடுகிறது :(// பசித்தால் கண்டிப்பாக செய்து சாப்பிட்டு பாருங்க.....வாழ்த்துக்கு மிக்க நன்றி.

உமா....கோதுமையில் உருளை சேர்த்து செய்வது பெயர் " ஆலு பராத்தா"...மேலும் கோதுமையில் காலிபிளவர், முள்ளங்கி என்று எந்த காய் வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். நீங்களும் ஒவ்வொரு தடவையும் நான் இப்படி செய்வேன் அப்படி செய்வேன் என்று சொல்ல மட்டும் செய்றீங்க....நானும் உங்களை குறிப்பை அனுப்புங்க என்று சொல்லி பார்க்கிறேன்....சரி இனியாவது அனுப்ப நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மைதாவில் முட்டை சர்க்கரை சேர்த்து செய்தால் தான் அது சிலோன் பரோட்டா.....பாருங்க நம்ப ஆமினா கூட சொல்லியிருக்காங்களே....வாசனை கண்டிப்பாக வரும்.....எங்கள் வீடே நல்ல சிக்கன் மனமாக இருந்தது. சும்மா விளையாடுனேன்.....அதான் பரோட்டைவை சுட்டு தானே எடுக்கிறோம் எப்படி வரும்.....லெமன் ஜெஸ்ட் பற்றி என்னை விட அழகா நம்ப சுஜாதா சொல்லிட்டாங்க.

ஷமிலசாஜ் (உங்களின் பெயர் என்னவென்று தெரியவில்லை.....தவறாக இருந்தால் மன்னிக்கவும்...) வாழ்த்துக்கு மிக்க நன்றி. //nice 2 eat//அப்போ செய்து சாப்பிட்டு பார்த்தாச்சா? :P

வனி வாழ்த்துக்கு மிக்க நன்றி. அப்போ என்ன செய்து சாப்பிட வேண்டியது தானே....இல்லையென்றால் சொல்லுங்க ஒரு பார்சல் அனுப்பறேன் ;)

சுஜா...நீளமான குறிப்பு தான்....எனக்கே அடிக்கறதுக்குள்ள போதும் போதும் என்றாகி விட்டது. எனக்கு சாப்பாடு என்றால் எப்படி தான் அப்படி ஒரு பொறுமை வருமோ தெரியலை.....எனக்காக விளக்கி சொன்னது மிக்க நன்றி. வாழ்த்துக்கு நன்றி.

நன்றி கவிதா.

நன்றி pshithaya.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆமா லாவண்யா... பரமக்குடில தான். ஆனா ஒரு முறை சிலோன் ப்ரோட்டான்னு சொன்னதுக்கு இனிப்பா ப்ரோட்டா குடுத்தாங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்பநாள் கலுச்சு கலக்கல் டிஷ் ஓட வந்து இருக்கீங்க....

அடேகப்பா,பொருட்களே இவளோ இருக்குன்னா, அதோட டேஸ்ட் எப்படி இருக்கும், நாக்கு ஊறுதே....ரொம்ப அழகான டிஸ்ப்ளே, சூப்பர் லாவி... அடிக்கடி குறிப்பு அனுப்புங்க...நாங்க எல்லாம் ஏங்கி போயிடறோம் இல்ல!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அப்பா..எத்தனை பொருட்கள் வைத்து செய்து இருக்கிங்க.. சிக்கன்.. அதுவும் பரோட்டா சொல்லவே வேணாம்.. இப்பவே வேணும்..
கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.. பார்ட்டிக்கு செய்வது கஷ்டம்..தனியா செய்து நான் மட்டும் சாப்பிட்டுக்குவேன் :) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அப்படியா ஆமினா....எனக்கு உள்ளே சிக்கன் ஸ்டப்பிங் இருந்ததால் இனிப்பு தெரியலையோ என்னமோ ......

உங்களின் அன்பான பாராட்டிற்கு மிக்க நன்றி சுகி. சில முக்கியமான தவிர்க்க முடியாத காரணத்தால் கடந்த இரண்டு மூன்று மாதமாக அறுசுவைக்கு சரி வர வரமுடியவில்லை. இப்போ கொஞ்சம் ப்ரீ ஆக்கிட்டேன்.....கண்டிப்பா முன் போல் வருவேன்.....முடியும் போது கண்டிப்பாக குறிப்பும் அனுப்புவேன்.

பொருட்கள் பார்த்தால் தான் நிறைய மாதிரி இருக்கு ரம்யா....செய்தால் இவ்வளவு சுலபமா என்றிருக்கும். தனியா செய்து சாப்பிடாதீங்க......பாவம் கார்த்திக்கும் கொடுங்க. சரியா.....வாழ்த்துக்கு மிக்க நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் லாவண்யா எப்படி இருக்கீங்க. உங்களை இப்பொழுது அறுசுவை பக்கம் அதிகமாக பார்க்க முடியவில்லை. உங்கள் குறிப்பு சூப்பர். பெயரும் நன்றாக உள்ளது. இன்னும் நிறைய குறிப்புகள் அனுப்புங்கள். வாழ்த்துகள் லாவண்யா.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அடேங்கப்பா பெரிய வேலைதான்........ பார்சல் அனுப்பிடுங்க சாப்பிட்டுக்குறேன் :)
சூப்பரான குறிப்பு வாழ்த்துக்கள் லாவண்யா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.