கொத்தவரைக்காய் பருப்பு உசிலி

தேதி: November 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

நறுக்கிய கொத்தவரைக்காய்--- 1 கப்
துவரம்பருப்பு-- 1/2 கப்
கடலைப்பருப்பு-- 1/4 கப்
மிளகாய் வற்றல்--- 6
பெருங்காயம்-- சிறு துண்டு
மஞ்சள்பொடி--- 1/2 தேக்கரண்டி
உப்பு-- தேவையான அளவு
எண்ணை-- 4 தேக்கரண்டி
கடுகு-- 2 தேக்கரண்டி


 

1. கொத்தவரைக்காயை தேவையான உப்பு, சிறுதுளி மஞ்சள்பொடி சேர்த்து வேகவிட்டு வடிகட்டவும்.

2. துவரம்பருப்பு, கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அத்துடன் தேவையான உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரப்பாக, கெட்டியாக அரைக்கவும். அதை இட்லித்தட்டில் குக்கரில் வைத்து மூடி வெயிட் போட்டு மூன்று சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணை விட்டுக் கடுகு தாளித்து, அதில் உதிர்த்த பருப்பு உசிலியைப் போட்டு கேஸை சிம்மில் வைத்து நன்கு வதக்கவும். சற்று ரோஸ்ட் ஆனதும், வெந்த கொத்தவரைக்காயை நன்கு பிழிந்து போட்டு சேர்த்து கிளறவும்.

4. மேலும் பத்து நிமிடங்கள் நன்கு வதக்கி இறக்கவும். சாம்பார், வற்றல் குழம்புடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சூப்பரான மேட்ச்! பொடி சாதம் போல சாதத்துடன் பிசைந்து, மோர்க்குழம்பு தொட்டும் சாப்பிடலாம்.


கொத்தவரை தவிர அவரை, புடல், .கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பூ இவற்றிலும் மேற்கூறிய முறைப்படி பருப்புசிலி செய்யலாம்..கோஸ், காரட், பீன்ஸ், பட்டாணி இவை எல்லாம் சேர்த்து மிக்சட் வெஜிடபிள் பருப்புசிலியும் செய்யலாம்

மேலும் சில குறிப்புகள்