பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

அன்பு அறுசுவை நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.
முதன் முதலாக பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளேன். நல்ல முடிவைத் தருவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

நடுவர் பொறுப்பு கொடுத்த தோழி வனிதாவுக்கும், அறுசுவைக்கும் நன்றி

நான் எடுத்துள்ள தலைப்பு தோழி யோஹலட்சுமியால் தரப்பட்டது-
ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

நகைச்சுவையான தலைப்பைத் தேடி நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இது....திருமணமான, திருமணமாகாத எல்லா தோழிகளுக்கும் பிடித்தமான (எந்தப் பெண்ணாவது அழகு செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்களா!!!இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு கூட நிறைய ஒப்பனை பொருட்கள் வந்திருக்கிறதே....இதில் அறுசுவைத் தோழர்களும் பங்கு கொள்ளலாம்!!) சீரியஸ் இல்லாத, சிரிக்கச் சிரிக்க பேச முடிந்த ஒரு தலைப்பு இது என்பது என் எண்ணம்!

இப்பொழுது மார்க்கெட்டில் தினம், தினம் புதிது புதிதாக எததனை அழகு சாதனப் பொருள்கள்....அந்த விளம்பரங்களே மனதை மயக்குகிறதே? இந்த பட்டியின் மூலமாக நம் தோழிகளிடமிருந்து எது நல்ல ப்ரேண்ட் என்று தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு அல்ப ஆசைதான்!!

வழக்கமான பட்டி விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.
பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

எல்லாரும் கலந்துகிட்டு பட்டியை நவரச மேடையா ஆக்குங்க!

தயவு செய்து எல்லாரும் தமிழிலேயே பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நம்ம இங்கிட்டு இருந்து என்ன செய்யறது.. நடுவர் தானே அம்பையரு :)

நல்ல ப்ராண்ட் ஃபேர்னஸ் க்ரீம்மா வாங்கி பதமா இதமா பார்த்து அழகா லைட் மேக் அப் போடுவாங்களாமா? ஆனா பழம் பார்த்து வாங்க தெரியாதாமா.. என்ன கொடுமை இது.. வேக்ஸ் போட்ட பளபள பழம்னாவே விவரமா ஒதுங்கி ஓடற ஆளு தாங்க எங்க எதிரணி தோழி.. இதெல்லாம் ரீசனா சொன்ன செல்லாது செல்லாதுங்கோ :)வாங்கனும்னு நினைத்தா..அதுவும் குழந்தைகள் சாப்பிடனும்னா அம்மணி பார்த்து பார்த்து ஆர்கானிக்கா, சத்தான காய்கறி,பழமா வாங்குவாங்க நடுவரே.. அவங்க சொல்றத நம்பாதிங்கோ :)

ஹீஹீஹீ.. ஹேர் ஸ்டெயிடனிங்கு கற்பனை குதிரையை தாருமாறா ஓட விடறாங்க.. என்னவோ ஹேர் ஸ்டெயிடனிங்கே யூஸ் பண்ணாதவங்க தினமும் ரோடு ஆக்ஸிடன்ல மாட்றாங்க மாதிரி சொல்லறாங்க..

ஓகே நடுவரே.. நான் தூங்க போறேன். நல்ல முடிவா குடுங்க.. இல்லை ....................................................................................எந்த முடிவா இருந்தாலும் படிச்சு தெரிஞ்சிக்கறோம்.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//என்னவோ ஹேர் ஸ்டெயிடனிங்கே யூஸ் பண்ணாதவங்க தினமும் ரோடு ஆக்ஸிடன்ல மாட்றாங்க மாதிரி சொல்லறாங்க.. // நடுவரே ஹேர்ஸ்ட்ரெய்ட்டனிங் பண்ணினவங்க குப்புற விழுந்தாலும் பின் குத்தாதுங்கோ....ஆனா பண்ணாதவங்க நிலைமைய நினைச்சு பாருங்க ...ஏற்கனவே எதரணில நாங்க கருணையில்லாதவங்கன்னு முத்திரை குத்திட்டாங்க ..நடுவரே நான் அவங்கமேல இருக்கிற கருணையக் காமிச்சு மேக்கப் போடறவங்களுக்கும் கருணை அன்பு பாசம் எல்லாம் இருக்குன்னு நிருபிக்கறேன் உடமாட்டேங்குறாங்களே..........

நடுவரே எங்க போயீட்டீங்க தீர்ப்பு சொல்ல வாங்க........;-)

குறிப்பு: நடுவர் மேக்கப்போட வரதா இல்லை மேக்கப் இல்லாம வரதான்னு ரொம்ப குழம்பிபோயி மேடையின் பின்புறம் மறைஞ்சு இருக்கிறதா நம்பக்கூடிய வட்டாரத்தில இருந்து தகவல் வருது....நான் அப்பீட்டுங்கோஓஓஓஓஓஒ!!!!!!!

Don't Worry Be Happy.

ஆர்டர்....ஆர்டர்....நான் எங்கேயும் போகல ....உங்க வாதங்களெல்லாம் படிச்சுகிட்டுதான் இருக்கேன்...கவலைப் படாதீங்க... நல்ல முடிவா சொல்றேன்...ரெண்டு நாளா யாரையும் ஆளையே காணும்...நானும் வெயிட் பண்ணி பண்ணி பார்த்து சோர்ந்து போயிட்டேன்...இப்போ எல்லாரும் உங்க கடைசி வாதங்களை சொல்லுங்க....நைட் 7 மணிக்கு தீர்ப்பு...

ஜெயாம்மா....மேடைக்குப் பின்னாலல்லாம் மறைஞ்சுக்கலம்மா....உங்க எதிர்லயேதான் இருக்கேன்....யாராவது கூப்பிடறீங்களான்னு பார்த்தேன்....அழைப்பு வந்தாச்சு...இதோ ஆஜர்!!!!

நம்ம ஊரு பஸ்ஸுல ஒரு பெண் இயற்கை பொருட்களையே பயன் படுத்துகிறவர்....நல்லெண்ணை தேய்த்துக் குளித்து மஞ்சள் பூசி ஏறுகிறார்...கொஞ்ச நேரத்தில் கூட்டம் நிரம்பி வழியும்....2மணி நேரம் கழித்து அவரின் நிலைமை ந்ப்படி இருக்கும்
முகமெல்லாம் எண்ணெய் வழியும்...கொஞ்சம் பவுடர் பூசினால்தான் என்ன?சோப் போடாமல் சிலர் கப்பென்று நாற்றம்....பாடீ ஸ்ப்ரே போட்டுக் கொண்டால் என்ன?இன்னும் இப்படி சிலர் பயணம் செய்கின்றனர்
இவர்களை இப்படி பார்க்கும் போது நமக்கும் களையிழந்தார்போல ஆகிவிடுகிறது....அழகாக ந்ல்ல தோற்றத்தை தற்ற மேக்கப் போட்டவங்கள பார்கும் போது நமக்கே புத்துணர்ச்சி ஏற்படுகிறது...நோயாளிகள் பெரும்பாலும் ஆஸ்பிட்டலுக்கு செல்லும்போது அப்படியே சிலர் வேதனை தாங்காமல் செல்வதுன்டு...அது தவறில்லை..நாமுன் ஆஸ்பிட்டல் வேறு வேளையாக செல்லுகிறோம் அவர்களைப் பார்தவுடன் நமக்கு முகம் உம்மென்ரு ஆகிடும்

ஒரு பரிதாப உண்ர்வு என்று வைத்துக் கொள்வோம் .மூன்றாம் நபர் நமக்கு தெரிய்தவர் வெறு வேலையாக அங்கே வருகிறார்,அவர் சிம்பிளாக மேக்கப் செய்திருக்க்றார்...அவரின் தோற்றம் உடனே புரிந்துவிடும் எல்லோருக்கும்.
நலமாக இருக்கிரார் என்று...அவர் நம்மை பார்த்தால் என்னாச்சு உடம்புக்கு முகம் களையில்லாம இருக்கு..உடம்பு சரியில்லையா?இவ்வாறுதான் கேட்பார்.....முகத்தின் தோற்றதிர்கு ஏற்ப மேக்கப்போடு முகத்தை முரைத்தாலும்,,உம்மென்ரு இருந்தாலும் அழகாக இருக்கும்.....மேக்கப் இல்லாமல் இப்படி இருந்துக் கொண்டு உங்கள் முகத்தை கண்ணாடியில் ஓடி போய் பாருங்க...சத்திய்மா நோயாள் மாதிரிதாங்க தெரியும்அழகுப்படுத்திக் கொள்வது பார்பவர் மனதில் புத்துணர்ச்சி கொடுக்கும்...

உழகழகி கூட இப்படி கண்ணாடியில் பார்தால் விகாரமாதான் தெரிவார்....இப்படி தெரியாமல் இருக்க எப்போதும் இளிசுட்டேவா இருக்க முடியும்...லைட் மேக்கப் எப்பாதுமே அழ்குதான்

என் திருமண்த்தின் போது ஒருவர் வ்ந்து ஓவராக மேக்கப் செய்து விட்டு சென்றுவிட்டார் ...ஜாடய்யே போனது போலாச்சு உடனே கதவை பூட்டிக் கொண்டு திருத்தம் செய்து கொண்டேன்..எல்லோரும் பாரட்டினார்கள்
அவரை பார்தேன்...ஏதோ பரீச்சைக்கு படித்துவிட்டு மனப்பாடம் செய்துவிட்டு பேப்பரில் அப்படியே எழுதுவோமே அப்படிதான் நடந்து கொண்டிருக்கிரார்...சருமம் கலர் பார்த்து போட தெர்ய்லை...சிலருக்கு கண்மை ஒல்லியாகவும்,சிலருக்கு அடர்த்தியாக்வும் இருக்கனும்
முகப்பூச்சு சிலருக்கு கம்மியாக ,நார்மலாக இருக்கும்...லிப்ச்டிக் சரும நிரத்தை கொண்டு மாருபடும்...எல்லோருக்கும் ஒரே மாதிரி போட்டால் என்னாகும்?பேரழிகியாக ..இன்னொருவர் திருஷ்டி பொம்மை போல் விகாரமாக இருப்பார்...அதுதெரியாதவர் கிட்டதான் நான் திருமண்த்தின் போது மாட்டி இருக்கிரேன்,,,நல்ல வேளை முன்னாடியே எனக்கு எது அழகு என்று தெரிந்து கொண்டதால் உடனே அந்நேரத்தில் சரி செய்துக் கொள்ள முடிந்தது .

.

எங்கேயாவது நம் கண்வரோடு செல்லும் போது ஒரு பேரழகி அதாவது அழகான ஒப்பனையோடு எதிரில் வருகிறார் ...அவர் கண்ணை பாருங்க உங்க பக்கம் திரும்புமா>?ஹூம் அப்படி திரும்பinaal உங்க மேல பயம்...அதுக்காக எல்லா நேரமும் அவர் பின்னாட்i ஓட முடியுமா?இதே நீங்களும் தூக்கலா பார்க்கற மாதிரி வீட்டில் இருந்தால் ,மனதில் நினைத்துக் கொள்வார் நான் லக்கிதான்,என் மனைவியும் அழகுதானே என்று.....

நடுவர் அவர்களே....... நம்ம அருமை மிகு எதிரணியினர் பக்கம் பக்கமா மேக்கப் போடாதீங்கனு விவரிச்சதை நம்பி(.............!!!!) நேற்று எக்ஸிபிஷனுக்கு க்ளென்ஸ் செய்யாமல், டோனர் போடாமல், க்ரீம் போடாமல், பவ்டர் போடாமல் இயற்கையா கிளம்பி நின்ன என்னை பார்த்து என்னவர் ரொம்பவே கோவமாயிட்டார். பின்ன நல்ல ட்ரெஸ் போட்டா மட்டும் போதுமா. அதுக்கேற்ற லுக் வேணும்ல. ஒருசில பேர் என்ன நிறய பேர் இயற்கையிலேயே நல்ல கலரா பளிச்சினு இருப்பாங்க. ஆனால் என்னை போல பல பேருக்கு எண்ணை வழிந்து டல் லுக்கோட இருப்பாங்க. இயற்கையிலேயே பளிச் அழகு அமைந்து விட்டால் பிரச்சனை இல்லையே. அது இல்லை என்ற பேச்சு வரும் போது தான கொஞ்சம் போல ஏதாவது போட்டு ஒப்பேத்த வேண்டியிருக்கு.

எந்த காரியத்திலும் நேர்த்தி இருந்தால் தான் அழகே. முக அழகில் நேர்த்தி ஐ தருவது ஒப்பனையே.

ஒப்பனை என்றதுமே சினிமா காரங்களோட ஏன் நம்ம ஒப்பிட்டுக்கனும்.......? கேமரா, ஃபோகஸ் லைட் வெளிச்சத்தில் அவர்களுடய முகம் தெளிவாகத்தெரியுமாறு ஒப்பனை போடுவாங்க.

நாம சூரிய வெளிச்சத்தில் எவ்வாறு தெளிவா தெரிய முடியுமே அதற்கேற்ற வாறு ஒப்பனை செய்துகொள்ளலாம்.

அதிலுமே பகல் நேரத்தில் போடக்கூடிய ஒப்பனை போடும் விதம் வேறு. இரவு நேர விருந்துகளில் கலந்துகொள்ளும் போது போடக்கூடிய ஒப்பனை போடும் விதம் வேற்.

இதையெல்லாம் தெரியாமல் தவறான முறையில் ஒப்பனை போட்டால் குளறுபடி தான்.

உடனே அதற்குதான நாங்க ஒப்பனையே வேண்டாம் ஒப்பனை எதற்கு அப்படி நு ஆரம்பிக்கக் கூடாது.

அப்படி கேட்டா ஸ்வெட்டர் ஏன் மே மாச வெயில்ல போட்டுகிட்டு நடக்கக்கூடாதுன்னு நாங்க கேட்போம்(ஏசி ரூம், ஏசி காரில் செல்பவர்கள் தவிர).

ஒப்பனை போடறோம் ஒப்பனை போடறோம் அது ரொம்ப தப்புனு சொல்லுறாங்கல்ல. நாங்க எதுக்காக போடறோம். எங்களை போல சுமாரான ஆளுங்களும் கொஞ்சம் போல பளிச் அழகியா இருக்கணிம்னு தான.

என்னோட "பூ வைக்கும் நாள்"(திருமண உruதி செய்யும் விழா) அன்னைக்கு நானேதான் ஒப்பனை செய்துகிட்டேன். அப்போது 2 மாதங்களாக தினமும் 40கிமீ பயணம்செய்து பணியாற்ற வேண்டிய சூழல். ஓய்வில்லாத சூழ்நிலையால் என் முகத்தில் நிறைய பரு, சூட்டுக்கொப்புளம் போன்றவை வந்து விட்டது. என்னுடைய விசேஷத்திற்கு ஒருவாரம் முன்புதான் வேலையிலிருந்து ரிலீவ் ஆனேன். ஒருவாரத்தில் பருக்களும், கொப்புளமும் சரியாகிட்டாலும் வடுக்கள் சரியாகலை. நல்ல தரமான முறையான ஒப்பனை செய்து கொண்டதால் அன்றைக்கு எனக்கு நலுங்கு வைத்து கண்ணத்தில் ஆசையாக சந்தனம் பூசி மகிழ்ந்தனர் உறவினர்கள். வடுக்களும் போட்டோக்களில் பதிவாகல. போட்டோவை பார்த்தவர்கள் அனைவரும் கன்னம் மாம்பழம் போல ஷைனிங்கா இருக்கு என்றார்கள்.

திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயத்திற்கு அந்த பளிச் மேக்கப்பிலும், பச்சை புடவையிலும் என்னை பார்த்தவர்கள் அத்தை பேரும் சொன்னது இதுதான் "அந்த மதுரை மீனாட்சியே நேர்ல வந்தது போல அம்சமா இருக்கு. கையில கிளி இல்லாதது மட்டும் தான் குறை"னு.

நீங்களே சொல்லுங்க நடுவரே....... ஒப்பனையே இல்லாமல் இத்தனை பாராட்டும், சந்தோஷமும் வந்திருக்குமா.... ஒருவேளை ஒப்பனை இல்லைனா கொஞ்சம் பவ்டராவது போட்டுட்டு வந்திருக்கலாம்ல அப்படினு தான் நமக்கும், நம்மை பார்ப்பவர்களுக்கும் தோன்றும்.

"ஆள் பாதி ஆடை பாதி"னு எதுக்கு சொறாங்க. ஆளுக்கு பொருந்துகிற மாதிரி ஆடை போடனும். அதுபோலதான் போடிருக்கும் ஆடைக்கு தகுந்தவாறு இடத்துக்கு தகுந்தவாறு அவசியம் போடனும்.

சமீபத்தல் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பிரபல மனோதத்துவ நிபுணர் சொன்னார் "ஒப்பனை போட்டு அடுத்தவங்க நம்மை பார்க்கிற மாதிரி நடந்துக்கிறது எதிர் பாலினத்தவருக்கு கொடுக்கும் சிக்னல் போன்றது" என்று.

நான் கேட்கிறேன் .நாம் போடுகிற பிளவ்ஸ், மற்ற உடைகளை திருத்தமா போடுறவங்களும் இருக்காங்க. ஏனோதானோனு போடுறவங்களும் இருக்காங்க. அதியே அறைகுறையா போடுறவங்களும் இருக்காங்கல்ல. அது போலதான் ஒப்பனை விஷயத்திலும்.

அவர் சொல்வதும் சரி. எதுவுமே அதிகப் படியாக போனால் அசிங்கம், ஆபத்து தான்.

நமது கலாச்சாரத்திற்கு ஏற்ற வாறு ஆபாசமில்லாமல் செய்யும் ஒப்பனைகள், உடைகள், பழக்கவழக்கங்கள்,நடை, பாவனைகள் அனைத்துமே ஆபத்தில்லாதவை, அசிங்கமில்லாதவை தான்.

எனவே ஒப்பனை என்பது இடம், பொருள், சூழலுக்கு ஏற்ற வகைyiல் போடுவது அவசியமே. அவசியமே. அவசியமே என்று சொல்லி எனது வாதத்தை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி....வணக்கம்....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

வணக்கம் தோழி... இது என் முதல் வருகை ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இன்றைய இளைஞர்களை பொருத்தவரை வெளியில் தான் பார்க்கும் பெண்கள் மட்டும் ஒப்பனை பல செய்து இன்றைய சமுதாயத்திற்கு ஏற்றவாறு அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் தங்கள் வீட்டு பெண்கள் மட்டும் நம் கலாச்சாரத்தில் சிறிதும் மாறாமல் மண்வாசத்தோடு இருக்க விரும்புவார்கள். இதில் தவறு இல்லை. நாமும் நம் கணவன் கண்களுக்கு அழகாய் இருந்தால் போதுமே. வேலை முடித்து வீடு திரும்பும் கணவனை மஞ்சள் முகம் கொண்டு சுத்தமான துணி உடுத்தி தலையில் மல்லிகை சூடி இதழில் புன்னகையோடு வரவேற்று பாருங்கள். பிறகு தெரியும் இயற்கை அழகின் மகத்துவம்.

நடுவரே... எதிர் அணீ சொன்னதை நான் ஒத்துக்கறேன்.... முகத்தில் பரு, கரும்புள்ளி...ம்ம்... கஷ்டம் தான்... எல்லாம் மறைக்க மேக்கப் இல்லாமல் முடியாது. ஆனா அவங்க ஒரு விஷயத்தை மறந்துட்டாங்க... ஏன் அதெல்லாம் வந்ததுன்னு யோசிக்கல. ஒரே காரணம் தான் நடுவரே... முதல்ல சொன்னாங்க பாருங்க... நாங்களாம் கொஞ்சம் எதாவது போட்டு தான் ஒப்பேத்த வேண்டி இருக்குன்னு. அதே தான் காரணம். ஆரம்பத்தில் இருந்து எதாவது போட்டா தான் நம்ம முகம் பார்க்க முடியும்னு இவங்களா நினைச்சுகிட்டு இவங்க மேக்கப் போட்டு போட்டு தான் அந்த அழகான முகத்துக்கு இந்த நிலை என்பதில் சந்தேகமே இல்லை நடுவரே. இப்போ அதெல்லாம் இல்லன்னா இவங்க முகத்தை இவங்களாலயே பார்க்க முடியாதை நிலை வந்தது அந்த ஒப்பனை பொருட்களால் தான்.

இயற்கையா நம்ம ஊரில் கடலை மாவு, பயித்தமாவு, மஞ்சள் என் ஏன் அந்த காலத்தில் கொண்டு வந்தாங்க தெஇர்யுமா???

கடலை மாவு, பாசிபருப்பு மாவு எல்லாம் இயற்கையாகவே ப்ளீச் செய்யும் தன்மை உடையவை. அதனால் உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுக்குக்கு நோ சான்ஸ். கூடவே கடலை மாவு முகத்தின் தசைகளை இருகச்செய்யும். அதாவது முகத்தை தொய்வடையாமல் செய்யும்... அதை தான் இந்த காலத்தில் "age miracle" என்ற பெயரில் கெமிகலில் செய்கிறார்கள். தேவையா??? இயற்கையாக நம்ம முன்னோர் தினம் நம்ம சருமத்துக்காகவும், உடல் நலத்துக்காகவும் விட்டுட்டு போனதை எல்லாம் கடை பிடிக்காமல் விட்டு, கெமிகலில் மூழ்கி, இன்று அது இல்லன்னா நானில்லை என்று சொல்லும் அளவுக்கு நம் சருமத்தையும் அடிமையாக்கி, நம் எண்ணத்தையும் அடிமையாக்கிடுச்சு.

மஞ்சள் பூசி குளிச்சா உடலில், முகத்தில் தேவை இல்லாத ரோமங்கள் வளராது. கூடவே கிருமி அன்டாமல் பாதுகாக்கும். இதெல்லாம் இன்னைக்கு எத்தனை பேர் செய்யறோம்? கேட்டா அபீஸுக்கு மஞ்சள் பூசிட்டு போக முடியுமான்னு கேட்பாங்க... அப்பிட்டு போகாதீங்க, அதையும் அளவா போடுங்கன்னு தான் சொல்றோம்.

எல்லாத்துக்கும் சில மருத்துவ குணம் இருக்கு நடுவரே. இயற்கையாக மேக்கப் இல்லாம அழகா வைக்க பல வழிகள் இருக்கு. இவங்க சொன்ன அதே எண்ணெய் வடியும் பிரெccஅனைக்கு இயற்கையான வழி இருக்கு... எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோலை காயவைத்து கடலை மாவோடு அரைத்து வைத்து தினம் தேய்ச்சு குளிச்சா எண்ணெய் வடியும் பிரெச்சனைக்கும் டாடா காட்டிடலாம்.

கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு, சந்தனம் எல்லாம் சமமா கலந்து தேய்ச்சு வந்தா அவங்க சொன்ன மாம்பழ கன்னம் இயற்கையாகவே உங்களுக்கு சொந்தம்.

ரொம்ப நேரம் கண் முழிச்சு கண்கள் அழகு போனா ஐ மேக்கப் வேண்டாமே... பன்னீர் பஞ்சில் தோய்த்து எடுத்து கண்களை மூடி மேலே வைங்க... 15 நிமிஷம் போதும், கண்கள் பளிச்சிடும். வெள்ளரிக்கா நறுக்கி மேலே வைங்க.

சமைக்கும் போது கிடைக்கும் கொத்தமல்லி, புதினா சாரு உதட்டில் தேய்ச்சா லிப்ஸ்டிக்கே வேண்டாமே.

இத்தனை இயற்கையாக இருக்கும்போது இதெல்லாம் விட்டு செயற்கையாக நம்மை ஏன் அழகாக்கிக்கனும்? இதெல்லாம் காலத்துக்கும் நம்மை இயற்கையாகவே அழகாக வைத்திருக்கும். செயற்கை ஒப்பனை பக்கம் போயிட்டா காலத்துக்கும் இயற்கை அழகு காணாம போகும். நடுவரே... தீர்ப்பை நல்லா யோசிச்சு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹா ஹா ஹா நடுவரே எதிரணித் தோழிக்கு பெரும் நன்றி கடன் பட்டிருக்கின்றேன்;-) நன்றி நன்றி நன்றி;-))

நான் எனக்கு தெரிஞ்ச ஒன்னிரண்டு இயற்கையான பொருள்களைக்கொண்டு செய்யும் ஒப்பனைகளைச் சொன்னேன் அவங்க பட்டியலே போட்டுட்டாங்க;-)

நடுவரே அதாவது இந்தப் பட்டில நாம எதைய கலந்து ஆலோசிக்கறோம்னா ஒப்பனைகள் அவசியமா இல்லை இயற்கையாகவே நாம கொண்டிருக்கிற அழகு போதுமான்னுதான்., அதாவது கிடைச்ச அழகை மேலும் மெருகேத்தறதுதான் ஒப்பனைன்னு சொல்லிட்டு இருக்கோம்;-)

இயற்கையான பொருள்களைக் கொண்டு செய்யும் ஒப்பனை அவசியமா இல்லை செயற்கையான காஸ்மெடிக்ஸ்போன்ற பொருள்களைக் கொண்டு செய்யும் ஒப்பனை அவசியமான்னு வேணா இன்னொரு பட்டி வைச்சி இன்னும் விலாவரியா பேசலாம் நடுவரே!! இப்போதைக்கு ஒப்பனைத் தேவைங்கறத அவங்களும் ஒத்துக்கிண்டாங்க அது போதும் தீர்ப்பு சொல்லுங்க நடுவரே;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்