பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

அன்பு அறுசுவை நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.
முதன் முதலாக பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளேன். நல்ல முடிவைத் தருவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

நடுவர் பொறுப்பு கொடுத்த தோழி வனிதாவுக்கும், அறுசுவைக்கும் நன்றி

நான் எடுத்துள்ள தலைப்பு தோழி யோஹலட்சுமியால் தரப்பட்டது-
ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

நகைச்சுவையான தலைப்பைத் தேடி நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இது....திருமணமான, திருமணமாகாத எல்லா தோழிகளுக்கும் பிடித்தமான (எந்தப் பெண்ணாவது அழகு செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்களா!!!இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு கூட நிறைய ஒப்பனை பொருட்கள் வந்திருக்கிறதே....இதில் அறுசுவைத் தோழர்களும் பங்கு கொள்ளலாம்!!) சீரியஸ் இல்லாத, சிரிக்கச் சிரிக்க பேச முடிந்த ஒரு தலைப்பு இது என்பது என் எண்ணம்!

இப்பொழுது மார்க்கெட்டில் தினம், தினம் புதிது புதிதாக எததனை அழகு சாதனப் பொருள்கள்....அந்த விளம்பரங்களே மனதை மயக்குகிறதே? இந்த பட்டியின் மூலமாக நம் தோழிகளிடமிருந்து எது நல்ல ப்ரேண்ட் என்று தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு அல்ப ஆசைதான்!!

வழக்கமான பட்டி விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.
பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

எல்லாரும் கலந்துகிட்டு பட்டியை நவரச மேடையா ஆக்குங்க!

தயவு செய்து எல்லாரும் தமிழிலேயே பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் மனம் என்னும் வாஷிங்மெஷினில் போட்டு அலசி ஆராய்ந்து வேண்டாத தகவலகள் என்னும் அழுக்கை களைந்து , இதிகாச, புராணங்களில் இருந்து மேற்கோள்களை கம்பர்ட் வாசனை திரவியம் போல் சேர்த்து பளிச் என்று நாங்கள் வியக்குமாறு பட்டொளி வீசி பறக்க வைத்தமைக்கு வாழ்துக்கள்.

தெளிவான அழகான விளக்கம்..
நல்ல தூசி மண்ணு தட்டி ஆராய்ந்து சொல்லிட்டிங்க... பட்டியை முதல் முறை ஏற்று நடத்தி சென்ற விதம் அருமை.. வேலை பளுக்கு இடையிலும் அருமையான தீர்ர்ப்பை முன்வைத்து உங்களுக்கு நன்றி. அனைத்து தோழிகளுக்கும் பாராட்டுக்கள். :)

//ஒப்பனை அவசியமே..ஆனால் தீங்கௌ விளைவிக்காத வரை ..//
நல்ல வரிகள்.

;)இயற்கையால் ஆன ஒப்பனைகள் செயற்கையால ஆன ஒப்பனைகள் என வாதம் சற்று பட்டியை விட்டு தடம் புரண்டுவிட்டது.. ஒப்பனை என்பதே டைரக்ட்டாக, நேரிடையாக தோலில் வித்தியாசத்தை மெருகேற்றிக்க் கொடுப்பது. மிட்டி பயன்படுத்தினால் அது தோலுக்கு நல்லது.. அப்படியே வீட்டுக்கு வெளியே வந்தால், அதை ஒப்பனைக்கு எடுக்க முடியாது. அது இயற்கையான மருந்து போல.. மிட்டியை பயன்படுத்தி மேலே பவுடர் பயன்படுத்தும் அந்த சமயம் தான் நாம் ஒப்பனையை எதிர்ப்பார்த்து போகிறோம் என்பது ஆகும். அது போலவே அனைத்து இயற்கை பொருட்களும். பட்டியின் முன்பே நாங்கள் இதில் இயற்கை பொருள் அடங்குமா என கேட்டு இருக்க வேண்டும். :).. வெற்றி பெற்ற தோழிகளுக்கு வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு நடுவருக்கு,

அழகான தீர்ப்பு! இரண்டு பக்க வாதஙக்ளையும் தெளிவாக அலசி, இன்றைய நாட்டு நடப்புக்குப் பொருத்தமான தீர்ப்பை அழுத்தமாக எடுத்து சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!

எங்களுக்கும் பிடிச்சிருக்கு இந்தத் தீர்ப்பு.

இரண்டு பக்கமும் சிறப்பாக வாதாடிய தோழிகள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

அன்புடன்

சீதாலஷ்மி

இரண்டு பக்கமும் வாதாடிய என் அன்புத் தோழிகளுக்கும், கேட்டு (படித்து!!) ரசித்த அனைவருக்கும் நன்றி.

இந்த தலைப்புக்கு எப்படி முடிவு சொல்லலாம் என்று தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக ரொம்பவே யோசித்து எடுத்த தீர்ப்புதான் இது.

பவுடர் போடுவது ஒப்பனையா, இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுவது ஒப்பனையில் சேர்த்தியா, தலையைப் பறக்க விடலாமா ......அப்பப்பா....எத்தனை சந்தேகங்கள்?

இன்றைய சூழலில் அனைத்துப் பெண்களுமே சிறிதளவாவது ஒப்பனை செய்யாமல் இருப்பதில்லை. வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு முக அலங்காரம் செய்து கொள்ள ஆசை இருக்காதா என்ன?1000, 2000 ரூபாய் கொடுத்து ஃபேஷியல் செய்து கொள்ள முடியாவிட்டாலும் 15 ரூபாயில் ஐ ப்ரோஸ், ஒரு ஃபேர் அண்ட் லவ்லி சிகப்பழகு க்ரீம், முடி நீளமாக பாரசூட் எண்ணை (இதெல்லாம் என் வீட்டு வேலைக்காரப் பெண் உபயோகிக்கும் ப்ரேண்ட்!!!அவள் வந்ததும் ட்ரெஸ்ஸிங்க் டேபிளின் ஆளுயர கண்ணாடி முன்னால் போய் நின்று தன் அழகைத் தானே ரசித்தபின்புதான் வேலையை ஆரம்பிப்பாள்!!) என்று அவர்களுக்கேத்த ஒப்பனையை செய்து கொண்டு அழகாகத் தோற்றமளிப்பதை தவறென்று சொல்ல முடியாது.

நான் அறிந்து கொண்டது என்னவெனில் பெரும்பாலான பெண்கள் தினமும் இல்லாவிட்டாலும் ஒரு விசேஷம், பார்ட்டி, திருமணங்களுக்கு போகும்போது மேக்கப் போடுபவர்களே! ப்யூட்டி பார்லர்களின் எண்ணிக்கையே இதனைத் தெரிவிக்கிறதே?

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தம்மை இளமையாக வைத்துக் கொள்ள ஆசைப்படுவதும் தெரிகிறது. முற்காலத்தில் ஒரு குழந்தை பெற்ற உடனேயே அழகுபடுத்திக் கொள்வதை விட்டு விடுவார்களாம் ...ஆனால் இப்பொழுதோ அழகை தக்க வைத்துக் கொள்ள ஏராளமான வழிகள் உள்ளதே?எல்லாவற்றிலும் விழிப்புணர்வு வந்துள்ளது போல் அழகைப் பேணுவதிலும் விழிப்புணர்வு வந்தது நாம் சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தான?!!

அதற்காக கண்ட அழகு சாதனப் பொருட்களையும் உபயோகிக்காமல் ஆரோக்கியமான பொருட்கள் நிறைந்த, தரமான, நல்ல ப்ரேண்டை யூஸ் பண்ணலாம்.

இயற்கை அணியில் வாதித்த ரம்யா, சீதா (நீங்கள் பங்கு கொண்டு பதிவிட்டமைக்கு நன்றி), வனிதா, தளிகா, கோமதி, ஜெசிராணி(ஒரு பதிவுக்கு மேல் ஆளைக் காணுமே ராணி?), லட்சுமி (அறுசுவைக்கு புதுமுகம்....இனி நிறைய பங்கு கொள்ளுங்கள்!) அனைவருக்கும் நன்றி...

ரம்யா....இன்றைய பெரும்பாலான அழகு சாதனப் பொருள்களில் பாண்ட்ஸ், ஓலே டவ், மேபல்லின், லோரியல், ரெவ்லான்.....இன்னும் பல எல்லாவற்றிலுமே ஹெர்பல் பொருட்கள்தான் உபயோகிக்கப் படுவதாகச் சொல்கிறார்கள்....அவற்றை தனியே தயாரிக்க முடியாததால் ஒரு சில வேதியியல் பொருட்களைச் சேர்க்கிறார்கள்....வெளிநாட்டில் தயாரிக்கும் ஒப்பனைப் பொருட்கள் எதுவும் நம்முடைய கலருக்கு ஒத்து வருவதில்லை...அங்கிருந்து விலை கொடுத்து வாங்கி வருவது வேஸ்ட்....இது என் அனுபவம்....மிகச் சிறப்பாக வாதாடியமைக்கு நன்றி ரம்யா...

ஒப்பனை அணியில் வாதாடிய கல்பனா (இன்னும் ஸ்பேஸ் பார் சரியாகலியா?!), ரியாஸா, ஜெயா (கடைசியா வந்தாலும் கன்டைமுக்கு வந்துட்டீங்கல்ல?!!) உத்ரா, எப்பொழுதும் ஒப்பனையில் அற்புதமாய் காட்சி தரும் ஆனந்தப்ரியா!!, ரேவுதய் அனைவருக்கும் நன்றி....
கூந்தலைப் பற்றி சந்தேகம் கேட்ட சுந்தர... தப்பு...தப்பு...ராம்க்கு நன்றி....பதிலில் தெளிந்தீர்களா?!

அருமையான இந்த வாய்ப்பைத் தந்த அறுசுவைத் தளத்திற்கு ஆயிரம் நன்றிகள்!!!

என்ன...தீர்ப்பு சரியா இருக்கில்ல....எல்லா பொண்ணுங்களும் ஒப்பனை பண்ணிக்கிட்டு நல்லா இருங்கம்மா...வரட்டுமா? (சாலமன் பாப்பையாவா என்னை நினைச்சுப் பார்த்தேன்... அதனாலதான் இந்த வசனம்....!!!!

ரொம்ப நன்றி.. முன்ன எல்லாம் பட்டியில் பக்கம் பக்கமா எழுதுவோம் ;).. இப்ப எல்லாம் அது குறைந்துவிட்டது. ஜெய் கடைசியா வந்து வழக்கம் போல பிச்சு உதறிட்டாங்க.அவங்க நகைசுவை கலந்த வாதத்துக்கு நான் எப்பவும் ரசிகை :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு ராதா.... நல்ல தீர்ப்பு. எல்லாருமே எதாவது விஷேஷம்னாலாவது ஒப்பனை போடுறாங்கன்றதை மட்டும் நான் ஒத்துக்க மாட்டேன். இன்று வரை என்னுடன் பழகியவர்களுக்கு அது தெரியும். இருந்தாலும் கடைசியா இயற்கையான பொருட்களால் ஆன ஒப்பனைகள்னு சொன்னதால் உங்க தலை தப்பியது ;) ஹிஹிஹீ.

புது முகங்கள் எல்லாம் இப்படி பட்டியில் புகுந்து தீர்ப்பை கலக்குறீங்க.... சூப்பர். பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. இது போல் புதிதாக நடுவர் பதவிக்கு வருபவர்கள் பட்டியில் கலந்து கொள்வதும் ஒரு தனி மகிழ்ச்சி.

நடுவர் பொறுப்பேற்று சிறப்பாக பட்டியை நடத்திய ராதாக்கு மனமார்ந்த நன்றிகள் பல. கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து அன்பு தோழிகளுக்கும் நன்றி நன்றி நன்றி :)

எனக்கு பெரிய கை கொடுத்த என் அணி தோழிகளுக்கு கோடானு கோடி நன்றிகள். :)

எனக்கு எதிர் அணியில் இருந்துகிட்டு வழக்கம் போல காலை வாரின ஜெய்க்கு ஸ்பெஷல் தேன்க்ஸ். என்னைக்காவது என்கிட்ட நேரில் மாட்டாமலா போயிடுவீங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே,பட்டியின்..நடுவிலேயே..போய்விட்டதற்கு..மன்னிக்கவும்..
முழுமுதல்..காரணம்..கீபோர்ட்..அடுத்த..காரணம்..இங்கே..எலக்‌ஷன்
முடிந்து..ரிசல்ட்..வெளியிடும்..நேரம்..அடுத்து..எந்த..மாதிரி
வன்முறை..கிளம்பும்..என்று..யூகிக்கமுடியாத..ஒருமாதிரி..பதட்டமான..
சூழ்நிலை..அதனால்..பட்டியில்..முழுகவனம்..செலுத்த..முடியவில்லை..
எதிரணி..தோழிகளும்,எம்..அணியின்..சிங்ககுட்டி,புலிகுட்டிகளும்,
ஆக்ரோஷமாக..மோதி..சண்டையிட்டு..இறுதியில்..வெற்றிரமான..
தீர்ப்பை..எங்களுக்காக..பெற்றுத்..தந்தார்கள்..உங்கள்..அனைவருக்கும்
என்..வாழ்த்துக்களும்..நன்றிகளும்...இருபக்க..வாதங்களும்..ஒன்றைஒன்று
சளைத்ததில்லை...மிக..மிக..அருமை...

ராதாம்மா,ரெண்டு..பக்கமும்...நல்லா..சிண்டுமுட்டி..விட்டு..நாரதர்
வேலையை..செய்து...நடுவர்..வேலையை..திறம்பட..முடித்து,
இயற்கை..அழகோடுகூடிய..அழகான..தீர்ப்பை..சமயோசிதமாக..அளித்தீர்கள்.
எனக்கு..ஒரு..உண்மை.தெரிஞ்சாகனு...உங்களுக்கு..உண்மையாவே
இதுதான்..முதல்..பட்டியா?..இதுக்கு..முன்னாடி..பட்டிகளுக்கு..நடுவரா
இருந்திருக்கீங்களா?..நிறைய..பட்டிகளில்..நடுவராக..இருந்த..அனுபவம்..
உங்களிடம்..உள்ளது...வாழ்த்துக்களோடு..நானே..பண்ண..தேங்காய்..பர்பியை
உங்களுக்கு..தருகிறேன்...நம்பி..சாப்பிடுங்க..;)

கீபோர்ட்..புதுசு..வந்தால்..தான்..இந்த..புல்ஸ்டாப்க்கு..ஒரு..புல்ஸ்டாப்
வைக்க..முடியும்..இந்த..பதிவை..தாமதமாக..போட்டால்..நன்றாக
இருக்காதென்று..அவசரத்தில்...இந்த..புல்ஸ்டாப்போடு..போடுகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு நடுவரே

மிக்க நன்றி ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான தலைப்பை தேர்ந்தெடுத்து திறமையாக நடத்தி சூப்பரான தீர்ப்பும் வழங்கியதற்கு;-)

ஹா ஹா என்ன சொல்றது ஆரம்பத்தில இருந்து டவுட்டோடவே வாதம் பண்ணியது நானாதான் இருப்பேன்;-)))
கடைசில தீர்ப்பு படிச்சு சந்தோஷப்படறதுக்குல்ல இரண்டு பக்கமும் இருந்து ஜெயிச்சுட்டோம்கிற பதிவ பாத்து மறுபடியும் குழப்பம் ஹாஹாஹா எந்தப்பக்கம்டா ஜெயிச்சோம்னு மறுபடியும் இரண்டு தடவை தீர்ப்பு படிச்சு உறுதி பண்ணிக்கிட்டேன் ;-)

பட்டியில் கலந்துகொண்டு கலக்கிய (என் வயிறதான்;-)) எதிரணித் தோழிகளுக்கும் வனி நேர்ல சந்திக்கும்போது கணக்கத்தீர்த்துக்கலாம்;-)
ரம்ஸ் ஹா ஹா ரம்ஸ் பச்சதண்ணிய நினைச்சு இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன் எனக்கு இங்கேயே இவ்வளவு குளிருனா அங்க எப்படி இருக்கும் அதிலேயும் பச்சதண்ணிபோட்டு கழுவினா ஹா ஹா ;).., கரக்ட்டுதான் ஹாட் வாட்டர் இருக்கே சொன்னாதானே தெரியும்;-) தூங்கியிருப்பீங்கன்னு நினைச்சு தையிரியமா பதிவு போட்டேன் கடைசி வரைக்கும் விடமாட்டேண்ட்டீங்களே!! கோமதி புதுசு மாதிரியே இல்லை நல்லா வாதாடறீங்க;) தளி கடைசில ஷாக்காகிட்டீங்க ஸ்கூலுக்கும் மேக்கப்பான்னு இங்க இருக்கிற ஸ்டூடண்சே ஃபுல் மேக்கப்லதான போறாங்க;) நாங்கெல்லாம் சிம்பிள்தான் நம்புங்க;-))

அப்புறம் எங்க எங்க அணி சொல்லவேவேணாம் சீறிப்பாய்ஞ்சு சிதறடிச்சுட்டாங்க ஒருத்தங்க கல்ப்ஸ் அடிச்ச அடில ஸ்பேஸ்பாரையே ஒடைச்சுட்டாங்க;) திறமையான வாதங்களை தீர்க்கமா முன்னிருத்தனாங்க., ரே வழக்கம்போல பாட்டோட கலக்கிட்டாங்க, உதிரா ( ஒப்பனைசுந்தரி) எப்படி சைகையெல்லாம் பண்ணி பேசுவீங்களா!! உங்கப்பதிவு படிக்கும்போது எனக்கு அப்படிதான் தோணுச்சு சூப்பர் அடிக்கடி வாங்க, ஆனந்தசுந்தரி இடையில ஓடி வந்து பாராட்டினதே நாலுகப் பூஸ்ட் குடிச்ச மாதிரி இருந்துச்சு தேங்க்ஸ்;) இயல்பான வாதம் நல்லாயிருந்ததுங்க.., அப்புறம் இன்னும் யாரெல்லாம் போராடினீங்களோ அவங்களுக்கும் வழக்கம்போல படித்தும் பாராட்டியும் இருக்கும் தோழிகளுக்கும் நன்றிகள்;-)

ரம்ஸ் சொன்னமாதிரிதான்., மொதல்ல எல்லாம் பட்டி நடக்குதுனா அந்த வாரம் அரட்டை இருக்காது எல்லாரும் ரவுண்டு கட்டி அடிச்சிட்டிருப்போம்., அந்த வாரம் அரட்டை இல்லைங்கிறது எழுதப்படாத விதி மாதிரி இருக்கும் இப்ப அப்படி இல்லைங்கிறது கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு.,ஆனால் பட்டி நடக்குபோதுதான் அரட்டைக்கு லீவு பட்டி இல்லாத போது அரட்டை சு்ம்மா பிச்சிட்டு போகும்;-)) பட்டியில பங்கு எடுத்துக்க ஏற்கனவே மேடையில் ஏறிப்பேசிய பழக்கம் இருக்கும்கிறது எல்லாம் இல்லை அதனால அடுத்த தடவை எல்லாரும் வரணும் ;-)

அச்சச்சோ மறந்தே போயிட்டேன் சீதாம்மா ( வனி, தளி இப்பவும் சண்டைக்கு வருவாங்களோ??;-)) வழக்கம்போலவே உங்க பதிவும் சூப்பர்தான்;) ஹா ஹா மஞ்சள் முகத்தில லேக்டோ காலமின் பாத்தே நீங்க பயந்தீட்டிங்க இங்க முக்கால்வாசி அராப்ஸ் அன்பேவா சரோஜாதேவிய விட மிஞ்சியிருப்பாங்க நாங்க எவ்ளோ பயந்துருப்போம்;-)

மைக்கே இல்லாம (கொடுத்தாதானே;( ) பேசினதுனால இத்தோட முடிச்சுக்கறேன் (இன்னும் நீ கிளம்ப்லையா) சரி சரி அடுத்தபட்டியில் சந்திபோம் அ வர்ட்டா;-)

Don't Worry Be Happy.

ரொம்ப நன்றி ராதா பாலு...எனக்கே உங்களை நெனச்சா பாவமா இருந்துது நானே கொஞ்சம் குழம்பினேன் ஏன்னா நானும் எப்பவாவது ஆடிக்கு அமாவாசைக்கு எதாவது விசேஷத்துக்கு எதாவது போடுவேன் ஆனால் அல்லாத அன்றாடம் ஷாப்பிங் அது இது பள்ளி விஷயங்களுக்கு ஒன்னும் செய்ய மாட்டேன் அதனால இதுல நிக்கிறதா அதுல நிக்கிறதான்னு இருந்தேன்.ஒரு வழியா ட்ரெயின்ல ஏறி தாவி இந்த அணிக்கு வந்து சேர்ரதுக்குள் தீர்ப்பு வந்துடுச்சு..நேரம் மெனக்கெட்டு பதிவு போட்டதுக்கு ரொம்ப தேன்க்ஸ் ராதா பாலு

//நாம் வாங்குவதற்கு 15 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரைக்கும் கிடைக்குது. எதற்கு இப்படி பணம் வேஸ்ட் பண்ணனும். அழகாக நகங்களை வெட்டி, சுத்தப் படுத்தி வைத்திருந்தாலே, பாக்கறதுக்கும் அழகு. சுகாதாரமும் கூட// - சீதாலஷ்மி... ஒரே அணியில் இருந்துகிட்டு என்னை இந்த தாக்கு தாகினதுக்கு ஊருக்கு வந்து பேசிக்குறேன் உங்களை ;(

வர வர என்னை ரவுன்டு கட்டி அடிக்கவே பட்டியில் வாதங்கள் வருது :(( ஒரே சோகமா போச்சு. எல்லாம் நம்ம அண்ணாத்த பாபு ஆரம்பிச்சு வெச்சது. அவரும் நேரில் மாட்டாமலா போவாரு??

இந்த ஜெய் கீபோர்டு ஒடஞ்சிருக்க கூடாதா??? பட்டியில் வாதாட தான் பக்கம் பக்கமா தட்டினாங்கன்னு பார்த்தா, பட்டி முடிஞ்ச பிறகும் பக்கம் பக்கமா தட்டிகிட்டு இருன்க்காங்க. கடவுளே கருணை காட்டுப்பா.

தளிகா... பாவம்ங்க நீங்க. வழக்கம் போல எந்த அணின்னே குழப்பத்துலையே குட்டைய குழப்பி நடுவரை குழப்பி எங்களையும் குழப்பி ஆனா... நல்ல சிரிக்க வெச்சுட்டீங்க. உங்க பதிவுகளை படிக்க எனக்கு ரொம்ப விருப்பம். தொடர்ந்து எல்லா பட்டியிலும் வாங்கன்னு அன்போட கேட்டுக்கறேன்.

இனி அடுத்த பட்டிக்கு நடுவரா வந்து உங்க எல்லாரையும் பழி வாங்கனும் :) வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்