கத்தரிக்காய் புளிக்குழம்பு

தேதி: November 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (11 votes)

 

சின்ன கத்தரிக்காய் - கால் கிலோ
பூண்டு - 100 கிராம்
கடுகு, வெந்தயம், சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
சாம்பார் பொடி - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
பெருங்காய பவுடர் - 2 சிட்டிகை
உப்பு
புளி - பெரிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
வெல்லம் - ஒரு சிறுத் துண்டு


 

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். கத்திரிக்காயை 4 துண்டுகளாக நறுக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை பெருங்காய பவுடர் போட்டு தாளிக்கவும். பின் கத்திரிக்காய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கி புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாக வரும் போது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
சுட்ட அப்பளம் அல்லது கூழ் வடகத்துடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மீன் குழம்பு ரேஞ்சுக்கு கத்தரிக்காய் புளிக்குழம்பு....
கலர் சூப்பர் ஹா இருக்கு. விருப்ப பட்டியல சேத்துட்டேன், சீக்கரம் பண்ணிடறேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரொம்ப அருமை மஞ்சுலா

Jaleelakamal

ஹாய் மஞ்சு ரொம்ப நாள் ஆச்சி உங்களோடு பேசு என்னை ஞாபகம் இருக்கா. குழம்பு பார்க்கவே சூப்பரா இருக்கு. நாக்கு ஊறுது. எனக்கு புளிப்பு காரம் ரொம்ப பிடிக்கும். வாழ்த்துகள் இன்னும் நிறைய குறிப்புகள் கொடுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

புளிக்குழம்பு பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இன்று உங்கள் புளிகுழம்பு செய்தேன் சுவையாக இருந்தது நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நன்றி - இந்திரா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு